ஸமூஹ நலனுக்கும் உதவுவது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இத்தனை நாள்* நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தேன். என்ன வைதிக கார்யங்கள் செய்ய வேண்டும், தர்மரக்ஷணத்துக்காக என்ன கர்மாநுஷ்டானங்கள் செய்ய வேண்டும், ஸமூஹத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாமே சொல்லிவந்தேன். இன்றைக்கு ஒரு மாற்றாக ஒன்றையுமே செய்யாமல் மௌனமாக இருக்கச் சொன்னாலென்ன என்று தோன்றிற்று. இதுவும் ஜீவனதர்மம்தான். கார்யங்களால் உண்டாகிற நன்மைகளைவிட இதுதான் பெரிய நன்மை. ஆத்மசாந்தி இதில்தானே கிடைக்கிறது? ஸமூஹத்துக்கும் இது பெரிய உபகாரந்தான். கெட்டதைப் பேசியும், பண்ணியும் ஸமூஹத்தைக் கெடுக்கமலிருக்கிறோமென்பதால் மட்டுமில்லை. இம்மாதிரி இந்திரியத்தைக் கட்டுப்படுத்துவதால் உண்டாகிற ஆத்மசக்திதான் ஸமூஹத்துக்கு மிகப்பெரிய க்ஷேமத்தை உண்டாக்குவது. அதனால், மக்களின் வாழ்க்கை முறையில் மௌனமாக, ஒரு கார்யமுமில்லாமல் அன்றன்றும் கொஞ்ச நாழி – அரைமணியாவது – உட்கார்ந்திருப்பதையும் சேர்த்துக் கொள்ளச் சொல்ல வேண்மென்று தோன்றியது.


* அதாவது 1957 அக்டோபரிலிருந்து 1958 ஏப்ரல் வரை சென்னையில் ஆற்றிய உரைகளில்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஈஸ்வர சிந்தனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மௌனப் பிராத்தனை
Next