உப்பை விலக்குவது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

எதெது அவசியம் என்று இருக்கின்றனவோ அவற்றையே ஒவ்வொரு ஸமயத்தில் தள்ள வேண்டியதாயிருக்கிறது. க்ருஹஸ்தன் பண்ணியே தீரவேண்டுமென்றிருக்கிற அத்தனை வைதிக கர்மாக்களையுமே ஒரு காலத்தில் தள்ளி விட்டு ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளச் சொல்லியிருக்கிறது! ஜீவிப்பதற்கு அவசியமான ஆஹாரத்தை மந்த்ரபூர்வமாக புஜிப்பதற்கு வழி சொன்ன சாஸ்திரங்களே ஆஹாரத்தைத் தள்ளிவிட்டு உபவாஸமிருக்க வேண்டிய காலங்களையும் சொல்கிறது. முழுக்க ஆஹாரத்தைத் தள்ளாவிட்டாலும் அதில் இன்னின்ன காலத்தில் இன்னின்ன பதார்த்தங்களைத் தள்ள வேண்டுமென்று அநேக விதிகளைச் சொல்லுகிறது. அதில் சில சொன்னேன். இதில் ‘அலவணம்’ என்று ஒன்று. சாப்பாட்டில் உப்புச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதே அலவணம். “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்று ஒரு பக்கம் சொல்லிவிட்டு, சில காலத்தில் உப்பு கூடாது என்றும் வைத்திருக்கிறது. உணர்ச்சி வேகத்துக்கு உப்பு காரணம். “மானம், ரோஷம் இல்லே? நீ உப்புப் போட்டுண்டு தின்றதில்லே?”என்று கேட்கிறோமல்லவா? ரொம்பவும் ஆத்ம மார்க்கத்தில் போகும்போது இந்த மானம், ரோஷம், மற்ற உணர்ச்சி வேகமெல்லாம் போகத்தான் வேண்டும். அதனால் ஸந்நியாஸி முதலியவர்கள் அலவணமாகச் சாப்பிட வேண்டும். டாக்டர்கள் ஒரு காரணத்துக்காக உப்பு கூடாது என்றால், சாஸ்த்ரமும் ஒரு காரணதுக்காக தள்ளுகிறது. ‘வருண ஜபம்’ முதலான வேத மந்த்ர ஜபங்களின்போது ஜபிக்கிறவர்கள் உப்புச் சேர்த்துக் கொண்டால் நிச்சயமாகப் பலன் கிடைக்காமலிருப்பதையும், அதுவே அவர்கள் அலவணமாய் இருந்தால் மழை பெய்கிறதையும் இந்தக் காலத்திலும் நிதர்சணமாகப் பார்க்கலாம். முருகன் சம்பந்தப்பட்ட செவ்வாய்க்கிழமை, ஷஷ்டி, கிருத்திகை முதலானவற்றில் குறிப்பாக அலவண நியமம் அநுஷ்டிக்கப்படுகிறது.

பதார்த்த சுத்தியில் ஜெனரலாக இருப்பதைத் தவிர குறிப்பிட்ட காலங்களில் மட்டும் குறிப்பிட்ட பதார்த்தங்கள் விலக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு இதெல்லாம் திருஷ்டாந்தம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is சாதுர்மாஸ்யமும் அதில் போஜன விதியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தம் உணவைத் தானே செய்வது
Next