படிப்படியாக முன்னேற

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பாகம்)

படிப்படியாக முன்னேற

ருகால் பூர்விகர்கள் மாம்ஸம் சாப்பிட்டிருந்தால் கூட அதற்காக நாமும் அதை லக்ஷ்ய நிலையாக வைத்துக் கொண்டுவிடக் கூடாது. அதே ஸமயத்தில் நெடுங்காலப் பழக்க வழக்கத்தால், குலாசாரத்தால் மாம்ஸ போஜனிகளாக இருக்கிற பிராம்மண-இதரர்களையெல்லாம் இன்றையிலிருந்தே சைவ ஆஹாரத்தை மேற்கொள்ளும்படியும் force பண்ணக்கூடாது. 'அல்டிமேட்'டாக மாம்ஸம் கூடாது;அதற்காக 'இம்மீடியட்'டாகவே எல்லாருக்கும் மாம்ஸம் கூடாது என்றும் நிர்பந்திக்கக் கூடாது. பழக்கத்தை ஒரே மூச்சில் மாற்றிக்கொள்ள முடியாது. அப்படிப் பண்ணுவது பலவித கஷ்டங்களை உண்டாக்கும். Total abstinence (பூர்ண விலக்கு) ஒரே நாளில் வந்து விட முடியாது. ஸ்டேஜ் ஸ்டேஜாகத்தான் அதற்கு டெவலப் பண்ணிக் கொண்டு போக வேண்டும். அதற்காக நாம் பிரசாரம் பண்ணி, ஊக்கமும் தரவேண்டும்.

முதலில் பண்டிகை நாள், விரத தினங்கள், தர்ப்பண FF ஆகியவற்றில் 'மீட்'சாப்பிடுகிறதில்லை என்று இதரர்கள் வைத்துக் கொள்ளட்டும். அப்புறம் ஒரு மாஸத்தில் சில சில நாளில் சாப்பிடாமல் இருக்கட்டும். முதல் தேதியில் சாப்பிட வேண்டாம், தங்கள் நக்ஷத்ரத்தன்று வேண்டாம், குழந்தைகள் நக்ஷத்ரத்தில் வேண்டாம் என்கிறமாதிரி இப்படியே போய், கொஞ்சங் கொஞ்சமாக விட்டால் அப்புறம் பூர்ணமாக நிறுத்திக் கொள்வதில் சிரமமே தெரியாது. அப்போது அப்படிப் பண்ணிக் கொள்ளலாம்.