திருவட்டாறு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

மலைநாட்டுத் திருப்பதிகள்

திருவட்டாறு

திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் போகும் பஸ்ஸில் சென்று தொடுவெட்டி என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து வேறு பஸ்ஸில் 6 மைல் சென்று இவ்வூரை அடையவேண்டம். சுமாரான வசதிகள் உண்டு. திருவனந்தபுரம் - கன்னியாகுமரி ரயில்பாதையில் உள்ளது.

மூலவர் - ஆதிகேசவப் பெருமாள், புஜங்கசயனம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் - மரகதவல்லி நாச்சியார்.

தீர்த்தம் - கடல்வாய்த் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம்.

விமானம் - அஷ்டாங்க விமானம், அஷ்டாக்ஷர விமானம்.

ப்ரத்யக்ஷம் - பரசுராமன், சந்திரன்.

விசேஷங்கள் - இக்கோவில் திருவனந்தபுரம் கோவிலைப் போலவே கட்டப்பட்டுள்ளது. இங்கும் பெருமாளை ஸேவிக்க க்ருஷ்ணன் ஸந்நிதியும் உண்டு. கர்ப்பபக்ருஹத்தில் மூலவர் திருமுகமண்டலத்தில் மாலை வேளைகளில் இயற்கையாக சூரிய வெளிச்சம் விழும்படி கோவிலை அமைத்திருக்கிறார்கள். கேஸி என்ற அசுரன் தேவர்களை இம்ஸிக்க, தேவர்கள் பகவானிடம் முறையிட, பகாவன் கேஸியுடன் மல்யுத்தம் செய்து, கேஸியை தள்ளி மேலே படுத்துக்கொள்ள, கேஸியின் பத்னி, ஆஸுரி, கங்கையைப் ப்ரார்த்திக்க, கங்கை தாம்பரபரணியுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிவர, பகவான் உத்திரவுபடி, பூமிதேவி பகவான் இருக்கும் இடத்தை மலைப்போல் மேடாக்க, கங்கையும் தாம்பரபரணியும் பகவானை வணங்கி மாலை ஸமர்ப்பித்ததாற் போல் இரண்டாகப் பிரிந்து வட்டமாக சென்றபடியால் இந்த ஸ்தலம் 'திருவட்டாறு' என்ற பெயர்பெற்றதாக ஸ்தலபுராணம். ஆதிகேஸியை பகவான் நிக்ரஹம் செய்த படியால் பகவானுக்கு ஆதிகேஸர் என்கறி திருநாமம் உண்டாயிற்று. நதிகள் பிரியுமிடம் "மூவாத்து முகம்" என்றும், "தோதை பிரளி" என்றம் வழங்கப்படுகிறது. நதிகளை அநுக்ரஹிக்க இங்கே தீர்த்தவாரி நடக்கிறது.

மங்களாசாஸனம் -

நம்மாழ்வார் - 3722 - 32 -11 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருவனந்தபுரம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)
Next