திருவேங்கடம் (திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

வடநாட்டுத் திருப்பதிகள்

திருவேங்கடம் (திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)

சென்னை - பம்பாய் ரயில்பாதையிலுள்ள ரேணிகுண்டாவிலிருந்து சுமார் 7 மைல் தூரத்திலுள்ள ரயில்வேஸ்டேஷன் திருப்பதி. சென்னையிலிருந்து நேராக வரும் ரயில் வண்டிகளும் உண்டு. சென்னையிலிருந்து வேறு பல உர்களிலிருந்து நிறைய பஸ்கள் உண்டு. திருப்பதி, திருமலை, திருச்சானூர் என்ற மூன்று முக்ய பிரிவுகளிலும், தேவஸ்தான சத்திரங்களும் ஹோட்டல்களும் மற்ற எல்லா வசதிகளும் உள்ளன. கீழ்த் திருப்பதியிலிருந்து திருச்சானூருக்கு செல்ல பஸ் முதலிய வாஹன வசதிகள் நிறைய உள்ளன.

1) முதல்பிரிவு - கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாள், கோவில்

மூலவர் - கோவிந்தராஜப் பெருமாள், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - புண்டரீகவல்லி.

விசேஷங்கள் - இங்கு, ஆண்டாள், உடையவர், முதலியவர்களின் ஸந்நிதிகள் உள்ளன.

2) இரண்டாம் பிரிவு - திருமலை.

மூலவர் - திருவேங்கடமுடையான், ஸ்ரீ நிவாஸன், வெங்கடாசலபதி, பாலாஜி, நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் - கல்யாண வெங்கடேச்வரர்.

தீர்த்தம் - சேஷாசல ஸ்வாமி புஷ்கரிணி, பாபவிநாச நீர்வீழ்ச்சி, ஆகாசகங்கை, கோனேரி தீர்த்தம். 14 தீர்த்தங்கள் - வைகுண்ட தீர்த்தம், சக்ர தீர்த்தம், ஜாபாலி தீர்த்தம். வருண தீர்த்தம், ஆகாசகங்கை, பாபவிநாசம், பாண்டவ தீர்த்தம், குமாரதாரை, இராமக்ருஷ்ண தீர்த்தம், தும்புரு தீர்த்தம், சேஷ தீர்த்தம், ஸுகஸந்தன தீர்த்தம், யுத்தகள தீர்த்தம், சீதம்ம தீர்த்தம் உள்ளன.

விமானம் - ஆநந்த நிலய விமானம்.

ப்ரத்யக்ஷம் - தொண்டைமான், ஆறுமுகன்.

ஆதீவராஹர் ஸந்நிதி - ஸ்வாமி புஷ்கரிணியின் வடமேற்கு மூலையில் கோவில் கொண்டுள்ள இப்பெருமாளக்கு தளிகை ஸமர்ப்பித்த பிறகே, அது ஸ்ரீநிவாஸனுக்கும் ஸமர்ப்பிக்கப்படுகிறது. ஏழு பர்வதங்கள் வெங்கடாத்ரி, சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி என்ற பெயர்களுடன் இருக்கின்றன. இதன் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ நீவாஸன் எழுந்தருளுவதற்கு முன் ஆதிவராஹன் இத்தலத்தில் ஸேவை ஸாதித்ததனால் ஆதிவராஹரைஸேவித்த பிறகுதான் ஸ்ரீநிவாஸனை ஸேவிக்கவேண்டும்.

3) மூன்றாம் பிரிவு - திருச்சானூர் (அலர்மேல் மங்காபுரம்)

மூலவர் தாயார் - அலர்மேல்மங்கை (பத்மாவதி) , கிழக்கே திருமுக மண்டலம்.

தீர்த்தம் - பத்மஸரோவரம்.

விசேஷங்கள் - இக்கோவிலில் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் ஸெனந்தரராஜனுக்கும் ஸந்நிதிகள் உள்ளன. இந்தக்கோயிலை ஸ்ரீநிவாஸன் நியமனப்படி, தொண்டைமான் என்ற அரசர் கட்டி பகவான் மிக்க ஆனந்தத்துடன் எழுந்தருளியதால் ஆனந்த விமானம் என்று பெயர் உண்டானதாக ஸ்தலவரலாறு. ப்ருஹ்மா லோகக்ஷேமார்த்தம் இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்ததாகவும், அந்த தீபம் இப்பொழுதம் பிரகாசிப்பதாகவும் வரலாறு. அஹோபிலமடத்து முதல் ஜீயர் ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் திருமலைக்குப்படிக்கட்டுகளை கட்டி வைத்தாராம். ஸ்ரீ மணவாளமாமுனிகள் ஸ¨ப்ரபாதம், ப்ரபத்தி மங்களம் எல்லாம் அருளிச் செய்து பல்லாண்டுகள் தங்கி இருந்து மங்களாசாஸனம் செய்துள்ளார்.

குறிப்பு - பணவசதி இல்லாதவர்களுக்குத் தர்ம சத்திரங்களும் தர்மசேஸவையும் உண்டு. திருமலைமேல் கல்யாண உத்ஸவம், ப்ருஹ்மோத்ஸவம் முடியளிப்பது ஏராளமான பிரார்த்தனைகள் செலுத்தப்படகின்றன. காணிக்கைகளின் காரணமாக உலகத்திலேயே இரண்டாவது பணக்காரக் கோவில் இதுதான். சந்திரகிரி பக்கம் ஸ்ரீநிவாஸனைப் போல் அழகாக அமைந்திருக்கும் மூர்த்தியை தரிசித்து செல்வதாகவும் சொல்லுகிறார்கள்.

மங்களாசாஸனம் -

பெரியாழ்வார் - 56, 104, 180, 184, 207, 247, 463

ஆண்டாள் - 504, 506, 535, 546, 577-586, 601, 604.

குலசேகராழ்வார் - 677-87.

திருமழிசையாழ்வார் - 799, 811, 832, 2415, 2420-29, 2471.

திருப்பாணாழ்வார் - 927, 929

திருமங்கையாழ்வார் - 1018-1057, 1275, 1312, 1371, 1388, 1404, 1518, 1572, 1640, 1660, 1811, 1836, 1849, 1946, 1978, 2001, 2038, 2059, 2060, 2067, 2673 (69) , 2674 (6, 124)

பொய்கையாழ்வார் - 2107, 2118-21, 2149, 2157, 2158, 2163, 2180

பூதத்தாழ்வார் - 2206, 2209, 2214, 2226, 2227, 2234, 2235, 2256.

பேயாழ்வார் - 2295, 2307, 2311, 2313, 2320, 2321, 2326, 2339, 2342-44, 2349-54, 2356, 2370

நம்மாழ்வார் - 2485, 2487, 2492, 2508, 2527, 2537, 2544, 2558, 2754, 2848, 2849, 2862, 2919-29, 2948, 2985, 3061, 3282-92, 3326-36, 3458, 3586, 3716, 3740

மொத்தம் - 202 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருச்சிங்கவேள்குன்றம் (அஹோபிலம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மலைநாட்டு திவ்யதேசங்கள் பற்றிய குறிப்புகள்
Next