திரு வடமதுரை (மதுரா)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

வடநாட்டுத் திருப்பதிகள்

திரு வடமதுரை (மதுரா)

(ப்ருந்தாவனம், கோர்வர்த்தனம் அடங்கியது)

டெல்லியிலிருந்து ஆக்ரா போகும் ரயில்பாதையில் மதுரா என்ற ஜங்ஷனிலிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் ஊரும் கோயில்களும் உள்ளன. இங்கு தஙகும் வசதிகள் அதிகமாக இல்லாததால் இங்கிருந்து 7 மைல் தூரத்திலுள்ள பிருந்தாவனம் என்ற ஊரில் தங்கிக்கொள்ளலாம். அல்லது டெல்லியில் தங்குபவர்கள் நேராக ரயிலிலோ பஸ்ஸிலோ வந்து ஸேவித்துத் திரும்பலாம்.

மூலவர் - கோவர்த்தநேசன், பாலக்ருஷ்ணன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - ஸத்யபாமா நாச்சியார்.

தீர்த்தம் - இந்த்ர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், யமுனா நதி.

விமானம் - கோவர்த்தன விமானம்.

ப்ரத்யக்ஷம் - இந்த்ராதி தேவர்கள், ப்ருஹ்மா, வஸுதேவர், தேவகி.

விசேஷங்கள் - இங்கிருந்து சுமார் 1 1/2 மைல்தூரத்தில் ஜன்மபூமி என்ற புதிய கோவில், ஸ்ரீ கிருஷணன் பிறந்த சிறைச்சாலை இருந்த இடமாகக் கருதப்படும் இடத்தில் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 8 மைல் தூரத்தில் கோவர்த்தனகிரி உள்ளது.

மைய இடமாகக் குறிப்பிட்டுள்ள ப்ருத்தாவனத்தில் தென்னாட்டுப் பாணியில் அமைக்கப்பட்ட ரங்கமந்திர் என்ற விசாலமான கோவில் உண்டு. இங்கே தமிழ்நாட்டு வைஷ்ணவர்களே கைங்கர்யம் செய்வதுடன் தங்குவதற்கும் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். இக்கோவிலில் ரங்கமன்னார், வெங்கடாசலபதிக்கும் உடையவர்க்கும் ஸந்நிதிகள் உண்டு.

வடமதுரை திவ்ய தேசங்களில் எண்ணிக்கையில் ஒன்றானாலும் மதுரை, ப்ருந்தாவனம், கோவர்த்தனம் என்ற மூன்று இடங்கள் அடங்கியதாகும். ஒரு காலத்தில் ரிஷிகள் பிராத்தனைப்படி ராமன் தன் தம்பி சத்ருக்னனை மது நகரத்தின் அசுர அரசனான லவணாஸுரனைக் கொல்ல சொல்லி ஸ்வயம்புவால் மது கைடபாஸுர ஸம்ஹாரத்திற்கு உபயோகித்த பாணத்தை கொடுத்து அனுப்ப, அதன்படியே சத்ருக்னன் லவணாஸுரனை ஸம்ஹாரம் செய்து யமுனை நதிக்கரையில் அர்த்தசந்த்ர வடிவமாக மிக அழகிய மாடமாளிகை மண்டப கோபுர ப்ராகாரவீதி தடாகாதிகள் சூழ்ந்த மதுரா நகரத்தை ஏற்படுத்தியதாக ஐதீஹம்.

சத்ருக்னன் வம்சம் ஆண்ட பிறகு, மதுரா நகரம், யாதவர்கள் வசமாகி வஸ¨தேவர் பரம்பரை இந்த நகரை ஆள ஆரம்பித்ததாக புராண சரித்திரம். ஸ்ரீ க்ருஷ்ணன் அவதாரஸ்தலம், "ஸ்ரீக்ருஷ்ணஜன்மபூமி" என்று விசேஷ வைபவத்துடன் அமைந்துள்ளது. ஒரே ஸமயத்தில் பல லக்ஷம் பேர் ஸேவை செய்வதற்கும்

தங்குவதற்கம் இடம் கட்டி இருக்கிறார்கள். பூஜைகள் க்ரமப்படி நடந்து ஸ்ரீ க்ருஷ்ண ஜன்மாஷ்டமி முதல் ஒருவாரம் ஸ்ரீ க்ருஷ்ண சரிதம் முழுவதையும் நாடகமாக நடிக்கிறார்க்ள. இதை வருடம் தோறும் பல லக்ஷக்கணக்காண ஜனங்கள் கண்டு களிக்கிறார்கள்.

குறிப்பு - இவ்வூரில் ஆழ்வார்களால் பாடப்பட்ட கோவில்களும் மூர்த்திகளும் இப்போது இல்லை. பிற்காலத்தில் கட்டப்பெற்ற தூவரகநாத்ஜீ, மதுராநாத்ஜீ என்ற இரண்டு ஆலயங்கள்தான் இருக்கின்றன.

மங்களாசாஸனம் -

பெரியாழ்வார் - 16, 277, 399, 264-74, 341, 430

ஆண்டாள் - 478, 538, 539, 560, 569, 617, 624, 637-46, 634, 638

தொண்டடிரடிப்பொடியாழ்வார் - 916

நம்மாழ்வார் - 3439, 3499, 3559-66

மொத்தம் 50 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருச்சாளக்ராமம் (ஸாளக்ராமம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவாய்ப்பாடி (கோகுலம், கோகுல்)
Next