திருக்கோவலூர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்கோவலூர்

விழுப்புரம - காட்பாடி ரயில் பாதையில் திருக்கோவலூர் ஸ்டேஷனிலிருந்து கோவில் 2 மைலில் இருக்கிறது. கடலூரிலிருந்து பஸ்ஸிலும் போகலாம். புதுச்சேரி - பெங்களூர், சித்தூர் - திருச்சி (வேலூர் வழி) பஸ் பாதை உள்ளது. எல்லா வசதிகளும் உண்டு.

மூலவர் - த்ரிவிக்ரமன், திருவடியை உயரே தூக்கிய நிலை, நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் - ஆயனார், கோவலன (கோபாலன்) .

தாயார் - பூங்கோவல் நாச்சியார்.

தீர்த்தம் - பெண்ணையாறு, க்ருஷ்ண தீர்த்தம், சக்ர தீர்த்தம்.

விமானம் - ஸ்ரீ கர விமானம்.

ப்ரத்யக்ஷம் பலிசக்ரவர்த்தி, ம்ருகண்டு, ப்ரஹ்மா, இந்திரன், குக்ஷி, செனனகர், காச்யபர், காவலர், குசத்வஜன், முதலாழ்வார்கள்.

விசேஷங்கள் - வாமன த்ருவிக்ரம அவதார ஸ்தலம். இந்தத் திவ்யதேசத்தில்தான் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்ற முதலாழ்வார்கள் மூவரும் ஒரு இரவில் இடைகழியில் ஸந்தித்து, பெருமாளையும் பிராட்டியையும் நேரில் இருட்டில் நெருக்கியபடி ஸேவித்து மூன்று திருவந்தாதிகளைப் பாடியது. மூலவர் வலக்கையில் சங்கமும் இடக்கையில் சக்ரமுமாக வலக்காலால் வையமளந்து நிற்கிறார். கோவிலுக்குள் இருக்கும் துர்க்கை தேவதாந்திரமாகக் கருதப்படுவதில்லை. மகாபலியின் கர்வத்தை அடக்கி ஆட்கொண்ட ஸ்தலம். தேசிகன் தேஹளீசஸ்துதி இயற்றிய ஸ்தலம். எம்பெருமானார் ஜீயர் பரம்பரை மஹான்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட ஸ்தலம். இந்த ஊர், பஞ்ச க்ருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்று. ஸ்ரீ க்ருஷ்ணன் நித்ய ஸாந்நித்யம் செய்தருளும் ஸ்தலம்.

மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் பெற்ற திவ்ய தேசம்.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1078, 1138-1147, 1569, 1641, 2057, 2058, 2673 (69) , 2674 (122) .

பொய்கையாழ்வார் - 2158, 2167.

பூதத்தாழ்வார் - 2251.

மொத்தம் 21 பாசுரங்கள்.

தொண்டைநாட்டுத் திருப்பதிகள் 22

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருவஹீந்த்ரபுரம் (அயிந்தை)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கச்சி - அத்திகரி (காஞ்சீபுரம்)
Next