திருச்சித்திர கூடம் (சிதம்பரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருச்சித்திர கூடம் (சிதம்பரம்)

சென்னை - திருச்சி மெயின் லைனில் சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 1 மைல் தூரத்திலள்ளது. பல ஊர்களிலிருந்தும் பஸ் வசதிகள் உண்டு. சத்திரங்கள், ஹோட்டல்கள் எல்லா வசதிகளும் உள்ள பெரிய நகரம். டவுன்பஸ், குதிரை வண்டிகள், ஆட்டோ ரிக்க்ஷ£க்கள் முதலியன உள்ளன.

மூலவர் - கோவிந்தராஜன், போகசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் - தேவாதிதேவன், பார்த்தஸாரதி, வீற்றிருந்த திருக்கோலம். சித்திரகூடத்துள்ளான் என்ற மற்றொரு உத்ஸவரும் உபயநாச்சிமாருடன் ஸேவை ஸாதிக்கிறார்.

தாயார் - புண்டரீகவல்லி (தனி நாச்சியார் ஸந்நிதி) .

தீர்த்தம் - புண்டரீக புஷ்கரிணி.

விமானம் - ஸாத்விக விமானம்.

ப்ரத்யக்ஷம் - தில்லைமூவாயிரவர், பாணினி, பதஞ்ஜலி, வ்யாக்ரபாதர்.

விசேஷம் - இந்தக் கோவில் தில்லை தீக்ஷதர்களின் நிர்வாகத்தில் உள்ளது. நடராஜப்பெருமான் உள்ளிட்ட தில்லை மூவாயிரவர் இவரைத் துதிக்க இங்கு வந்ததாகவும், தன்னெதிரே நடனமாடிய நடராஜப் பெருமானது தாண்டவத்தைப் பெருமாள் ரஸித்ததாகவும் ஐதிஹம். நடராஜர் கர்ப்பக்ருஹத்தில் சிதம்பர ரஹஸ்யம் மூடிவைக்கப்பட்டு ஸேவார்த்திகளுக்கு காட்டப்பட்டு வருகிறது. பாணினி சிவன் ஆடும் ஆனந்தத்தாண்டவத்தைக்கண்டு பரவசமடைந்து வியாகரணம் செய்த இடம். உலகில் உள்ள எல்லா விதமான நடனங்களையும் சிற்பசாலையில்

காணலாம். பரதமுனிவர் நாட்டிய சாஸ்த்ரத்தை ஏற்படுத்திய ஸ்தலம். கோவில் புஷ்கரிணியில் வடக்கே உள்ள புஷ்கரணியில் புஷ்கரக்ஷேத்திரத்தில் உள்ளதைப்போல் மீன்கள்

தரையில் வந்து யாத்ரீகர்களிடமிருந்து பொறி கடலை வாங்கி சாப்பிடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. தில்லை அம்மனும் நடராஜருடன் தாண்டவம் ஆடியபடியால் தில்லை நகர் என்று பெயர் பெற்றதாகப் புராண வரலாறு.

குறிப்பு - இங்கு, தங்காமலேயே பெருமாளை ஸேவித்துத் திரும்பிவிடலாம்.

என்றாலும், தங்கினால் ஸ்ரீமந்நாதமுனிகளின் அவதார ஸ்தலமாகிய காட்டுமண்ணார்கோவிலையும் இங்கிருந்தே ஸேவிக்கலாம் என்பது கவனிக்கப்படவேண்டியது.

மங்களா சாஸனம் -

குலசேகராழ்வார் - 741 - 751

திருமங்கையாழ்வார் - 1158 -1177, 2674 (124)

மொத்தம் 32 பாசுரங்கள்.

நடுநாட்டுத் திருப்பதிகள் 2

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திரு பார்த்தன்பள்ளி (திருநாங்கூர்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவஹீந்த்ரபுரம் (அயிந்தை)
Next