திருநறையூர் (நாச்சியார் கோயில்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருநறையூர் (நாச்சியார் கோயில்)

கும்பகோணத்திலிருந்து 6 மைல் தூரத்திலுள்ளது. டவுன் மற்றும் பல வெளியூர் பஸ்களிலும் போகலாம். எல்லா வசதிகளும் உண்டு. உப்பிலியப்பன் கோவிலிருந்தும் டவுன் பஸ்ஸில் போகலாம்.

மூலவர் - திருநறையூர் நம்பி, ஸ்ரீ நிவாசன், வாஸுதேவன் என்ற பெயர்களுடன் நின்ற திருக்கோலத்தில் தாயாரை மணம்புரிந்து கொள்ளும் நிலை, கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - வஞ்ஜுளவல்லி, (நம்பிக்கை நாச்சியார்) , பெருமாள் பக்கத்தில் திருமணக் கோலத்தில் நிற்கிறார்.

தீர்த்தம் - மணி முக்தா புஷ்கரிணி, ஸங்கர்ஷண தீர்த்தம், ப்ரத்யும்ன தீர்த்தம்,

அநிருத்த தீர்த்தம், ஸாம்ப தீர்த்தம்.

விமானம் - ஸ்ரீநிவாஸ விமானம், ஹேம விமானம்.

ப்ரத்யக்ஷம் - மேதாவி முனிவர், ப்ரஹ்மா.

விசேஷங்கள் - மேதாவி ரிஷியின் வளர்ப்புப் பெண்ணான வஞ்ஜுளவல்லியை பகவான் தனது நிலையில் (ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாஸுதேவன் என்ற 5 உருவங்களில்) மணந்து கொள்கிறார்.

பெருமாளுடைய கல்கருடவாஹனத்தை முதலில் ஸந்நிதியில் 4 பேர்களும், முடிவில் கோவில் வாசலில் 64 பேர்களும் எழுந்தருளப் பண்ணும் வகையில் வாஹனம் சிறுகச்சிறுகக் கனத்து விடுமாம். கல் கருடனுக்கு தனி ஸந்நிதி உள்ளது. இவ்வூரில் நாச்சியாருக்கே முதல் ஸ்தானம். iF உத்ஸவத்தில் அவர்தான் முதலில் எழுந்தருளுவார். கருடஸேவையின் போது பெருமாள் கல்கருடன் மீதும் தாயார் அன்னவாஹனத்திலும் எழுந்தருளுவார். இங்கு திருமங்கையாழ்வாருக்குப் பெருமாள் ஸமாச்ரயணம் செய்தார். மார்கழி மாதம் ப்ருஹ்மோத்ஸவம் மிக விமரிசையாக நடைபெறுகிறது. இப் பெருமாளைத் திருநறையூர் நம்பி என்பர்.

மங்களா சாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1078, 1329, 1470, 1478-1577, 1611, 1659, 1852, 2067, 2068, 2673 (71) , 2674, (73,133)

மொத்தம் 110 பாசுரங்கள்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் கோவில், மார்க்கண்டேய க்ஷேத்திரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருச்சேறை (பஞ்சஸாரக்ஷேத்ரம்)
Next