திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோவில், ஸங்கம க்ஷேத்திரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோவில், ஸங்கம க்ஷேத்திரம்)

தஞ்சாவூரிலிருந்து பஸ்மார்க்கமாய் திருவையாறு சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்ஸில் 7 மைல் தூரம் சென்று இவ்வூரை அடையலாம். அல்லது தஞ்சாவூர் - கணபதி அக்ரஹாரம் மார்க்கம் டவுன் பஸ்ஸிலும் செல்லலாம். இவ்வூருக்கு ஐயம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 4 மைல் வண்டியில் செல்லவும் முடியும். இங்கு தங்கும் வசதிகள் ஒன்றும் இல்லை. திருவையாரில் அல்லது ஐயம்பேட்டையில் தங்கி ஸேவிக்கலாம்.


மூலவர் - வையங்காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்) , உய்யவந்தார், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் - அதே பெயருடன் கையில் செங்கோல் தாங்கி நிற்கிறார்.

தாயார் - பத்மாஸனி, புஷ்பவல்லி.

தீர்த்தம் - சக்ர தீர்த்தம், காவிரி நதி.

விமானம் - சுத்தஸத்வ விமானம்.

ப்ரத்யக்ஷம் - நந்தகமுனி.

விசேஷங்கள் - இங்கே தேவர்கள் நந்தகமுனிவரோடு கூடி பெருமாளை ஸேவிக்க வந்தபடியால் இந்த ஊருக்கு கூடலூர் என்ற பெயர் உண்டாயிற்று. காவிரி இந்த ஸ்தலத்திற்கு வந்து இழந்த ஒ£ ¤யை மீண்டும் பெற்ற இடம். இந்தக் கோவில் காவேரி வெள்ளத்தில் மூழ்கி மண்மேடாகவிட்டபோது, சொப்பனத்தில் ராணி மங்கம்மாள் முன் தோன்றி கோயிலை புதுப்பிக்க சொன்னபடி, அரசி புதுப்பித்த கோயில்தான் இன்றைக்கு நாம் காண்றோம்.

முக்கிய குறிப்பு - இக்கோயிலின் அர்ச்சகர் அருகிலுள்ள கணபதி அக்ராஹரத்திலிருந்தோ மற்ற இடங்களிலிருந்தோ வருவதால், அவர் வரும் நேரந்தெரிந்து பெருமாள் ஸேவையைச் செய்துகொள்ள வேண்டும்.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1358 - 67 - 10 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருக்கண்டியுர் (த்ரிமூர்த்தி க்ஷேத்திரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கவித்தலம் (கபிஸ்தலம், கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்)
Next