திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கதம்ப க்ஷேத்ரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கதம்ப க்ஷேத்ரம்)

இது திருச்சி - விழுப்புரம் கார்டுலைனில் ஒரு சிறிய ஸ்டேஷன்.

திருச்சியிலிருந்தும் ஸ்ரீ ரங்கத்திலிருந்தும் திருவெள்ளறை போகும் பஸ் வழியில் இங்கு இறங்கலாம்.

மூலவர் - புருஷோத்தமன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - பூர்வாதேவி, பூர்ணவல்லி.

ஸ்தல வ்ருக்ஷம் (வாழை மரம்) .

விமானம் - உத்யோக விமானம்.

ப்ரத்யக்ஷம் - கதம்பமுனி. திருமங்கையாழ்வார், உபரிசரவஸு, ஸநக ஸநந்தன ஸநத் குமாரர்கள்.

விஷேங்கள் - தன்னைப் போல் பிருஹ்ம தேவருக்கும் தலைகள் உள்ளதை சகியாமல் சிவன் ப்ரஹ்மஹத்தி தோஷம் வந்து, சிவ பெருமான் கையில் கபாலம் ஒட்டிக்கொண்டது. சிவன் கையில் ஒட்டிக்கொண்ட கபாலத்தில் மஹாலக்ஷ்மியைக் கொண்டு பி¬க்ஷயிடச் செய்து சாபந்தீர்த்துக் கொண்டதாக ஸ்தல வரலாறு. சிவன், பார்வதி, ப்ரஹ்மா, ஸரஸ்வதி, மற்ற தெய்வங்களுக்கும் பல ஸந்நிதிகள் இங்கே உள்ளன. இந்த க்ஷேத்ரத்தில் சிவ பெருமான் பிக்ஷ£டன மூர்த்தியாக தம் குடும்பத்தோடு இருக்கிறார். ஆகவே, இந்த ஸ்தலத்திற்கு பிக்ஷ£ண்டார் கோயில் என்றும் பெயர் வழங்கி வருகிறது. சத்திரங்கள் கல்யாண கூடங்கள் எல்லாம் இருக்கின்றன.

மங்களா சாஸனம் -

திருமங்கையாழ்வார் - 1399 -1 பாசுரம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருக்கோழி (உறையூர், நிசுளாபுரி, உறந்தை)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்திரம்)
Next