வேம்பு

Latin Name        – Azadirachta indica
Family                    –  Meliaceae (निम्ब-कुलम्)
English Name   – Neem tree, Margosa tree, Indian lilac
Sanskrit Name – निम्बः, प्रभद्रः

நடுத்தரமாக அல்லது சற்றே உயரமாக வளரக்கூடிய வேப்பமரம் சுமார் 15 – 20 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதனுடைய பட்டை அடர் சாம்பல் நிறத்துடன் கூடிய பட்டையை உடையது. இலைகள் ஓரங்களில் ரம்பம்போல் காணப்படும். பூக்கள் வெளிர் மஞ்சள் நிறம் குலைகளாகத் தொங்கும். வேப்பமரத்தின் பட்டை, இலைகள், பூக்கள், விதைகள் மற்றும் எண்ணெய் மருத்துவகுணம் வாய்ந்தவை.
பட்டை கசப்பும், துவர்ப்பும் நிறைந்தது. குளிர்ச்சியானது. அது காய்ச்சிய தண்ணீரில் விரல் விட்டு சிலுப்ப நுரை வரும். அந்த நுரையை உடலில் அரிப்புள்ள பகுதியில் பூசினால் அரிப்பு நீங்கிவிடும். கிருமிகளை அழிக்கும். கல்லீரலுக்கு நல்ல டானிக்காக பயன்படும். பித்தம் அதிகரித்த நிலையில் இதன் பட்டை பயன்படும். தோல் உபாதைகள் சிரங்கு, படை, வெண்குஷ்டம், மலேரியா காய்ச்சல், புண், எரிச்சல், சர்க்கரை உபாதை, மூலம், மேக புண் ஆகியவற்றை ஆற்றக்கூடிய சக்தி அதற்குண்டு.
வேம்பின் இலைகள் கண்களுக்கு நல்லது. இலைக் கொழுந்துகளை ஓமத்துடன் சாப்பிட வயிற்றிலுள்ள பூச்சிகள் மடிந்து மலத்துடன் வெளியேறும். குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மலேரியா காய்ச்சலுக்கு இலைக் கஷாயம் சாப்பிட மிகவும் நல்லது.
வேப்பமரத்தில் உணவாகப் பயன்படுவது பூ மட்டுமே. மற்றவை மருந்தாகும். வஸந்தகாலத்தில் இதன் பூ கிடைக்கும். புத்தாண்டிற்காக இயற்கை தரும் பரிசு. புத்தாண்டு தினத்தன்று இதனைச் சேர்க்கத் தொடங்குவர். பூவைப் பச்சையாகவும் காய்ந்ததாகவும் உபயோகிக்கலாம். காய்ந்த பூ நாட்பட வைத்திருக்கக் கூடியதே. பச்சையான பூவை வறுத்தும் காய்ந்ததை நெய்யிலும் எண்ணெயிலும் பொரித்தும் சேர்ப்பர். சுவையில் கசப்பானாலும் மற்றவற்றைச் சுவைத்து உண்ணச் செய்யும். அருசி, அன்னத்வேஷம், எதுக்களிப்பு, வாந்தி, பித்தத்தால் தலைசுற்றுதல், எண்ணெய் அஜீர்ணத்தால் ஏற்படும் தலைசுற்றல், ஏப்பம் இவற்றை வேப்பம்பூ தணிக்கும். நெய் அல்லது எண்ணெயில் பொரித்துச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். கீரிப்பூச்சி, ஆஸனவாய் அரிப்பு, முதலியவற்றில் மிகவும் ஏற்றது.
காய்ந்த பூவை நெய்விட்டு வதக்கி உப்பு, சுட்டபழம்புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவை சேர்த்துத் துவையலாக்கிச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். துவரம் பருப்பை வறுத்து வேதவைத்து வடித்த நீரில், சுட்ட புளியோ, எலுமிச்சம் பழச்சாறோ சேர்த்து மிளகோ மிளகாயோ கூட்டி ரஸம் வைத்துப் பொரித்த வேப்பம்பூவை அதில் கலக்கிச் சாப்பிட வாய் இலைத்துப்போதல், அருசி, வாந்தி ஏப்பம் முதலியவை நீங்கும். கடும் நோய் நீங்கியபின் இரைப்பை சுறுசுறுப்படைய ஏற்றவை.
பத்திய உணவு  - பச்சையாகச் சேகரித்து லேசாக வறுத்துப் பொடித்து ஜலத்தில் வெல்லத்துடன் வேகவைத்துப் பச்சடி செய்து சாப்பிட ஜீர்ணத்திற்கும் வயிற்றுப் புண்ணை ஆற்றவும் ஏற்றது.
விதைகள் கசப்பானவை. சூட்டைக் கிளப்பும். உள்ளுக்குச் சாப்பிட்டால் பேதியாகும். இதுவொரு நல்ல வலிநிவாரணீ. காசநோயை குணப்படுத்தக் கூடியது. புண்ணை ஆற்றும். கருப்பையை தூண்டிவிட்டு குழந்தை பிறப்பை எளிதாக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உள்ளுக்குச் சாப்பிடுவது குணம் தரும்.
வேப்பெண்ணெய் கசப்புச் சுவையுடையது. குடல் கிருமிகளை வெளியேற்றும். சூடாக்கி மேல் தேய்க்க உடல் வலியை குணப்படுத்தும்.வாததோஷத்தின் சீற்றத்தை அடக்கும். தோல் உபாதைகளுக்கு நல்லது. தொடை இடுக்கில் ஏற்படும் அரிப்பை அகற்றும். கடுமையான மலேரியா காய்ச்சலை குணப்படுத்தும். குஷ்டநோய்க்கு நல்லதொரு நிவாரணியாக இருக்கும்.

अथ निगदितः प्रभद्रः पिचुमन्दः पारिभद्रको निम्बः।
काकफलः कीरेष्टो नेतारिष्टश्च सर्वतोभद्रः॥
धमनो विशीर्णपर्णो पवने ष्टः पीतसारकः शीतः।
वरतिक्तोऽरिष्टफलो ज्येष्ठामलकश्च हिंगुनिर्यासः॥
छर्दनश्चाग्निधमनो ज्ञेया नाम्ना तु विंशतिः। (राजनिघण्टु)
निम्बः स्यात् पिचुमर्दश्च पिचुमन्दश्च तिक्तकः।
अरिष्टः पारिभद्रश्च हिंगुनिर्यास इत्यपि॥(भावप्रकाशः)
निम्बो नियामनो नेता पिचुमन्दः सुतिक्तकः।
अरिष्टः सर्वतोभद्रः सुभद्रः पारिभद्रकः॥
शुकप्रियश्चीर्णपर्णो यवनेष्टो वरत्वचः।
छर्दनो हिंगुनिर्यास पीतसारो रविप्रियः॥ (सोढलनिघण्टु)
निम्बस्तिक्तः कटुः पाके लघुः शीतोऽग्निवातकृत्।
ग्राह्यहृद्यो जयेत् पित्तकफमेहज्वरकृमीन्॥
कुष्ठकासारुचिश्वासहृल्लासश्वयथुव्रणान्।
ग्राहि प्रवाळं निम्बस्य रक्तपित्तकफकृमीन्॥
कुष्ठघ्नं वातजननं नेत्ररोगान् विनाशयेत्।
तद्वत् पत्राणि निम्बस्य व्रणघ्नानि विशेषतः॥
शलाका निम्बपत्रस्य कासश्वासविनाशिनी।
कृमिघ्ना तु वरिष्ठा स्यात् कुष्ठज्वरविनाशिनी॥
चक्षुष्यं निम्बपुष्पं च कृमिपित्तविषप्रणुत्।
वातळं कटुपाकं स्यात् सर्वारोचकनाशनम्॥
फलं तिक्तं रसे पाके कटुकं भेदनं लघु।
अरूक्षमुष्णं कुष्ठघ्नं गुल्मार्शः कृमिमेहनुत्॥
निम्बस्य पक्वं मधुरं सतिक्तं स्निग्धं फलं शोणितपित्तरोगे।
कफे प्रशस्तं नयनामयघ्नं क्षतक्षयघ्नं गुरु पिच्छिलं च॥
निम्बबीजस्य मज्जा च कृमिकुष्ठविशोधनः।
नात्युष्णं निम्बजं तिक्तं कृमिकुष्ठकफप्रणुत्॥
अभ्यङ्गान्नावनात् क्षीरभोजिनः पलितापहम्। (कैय्यदेवनिघण्टु)
निम्बः शीतो लघुर्ग्राही कटुपाकोऽग्निवातनुत्।
अहृद्यः श्रमतृट्कासज्वरारुचिकृमिप्रणुत्॥
व्रणपित्तकफच्छर्दिकुष्ठहृल्लासमेहनुत्।
निम्बपत्रं स्मृतं नेत्र्यं कृमिपित्तविषप्रणुत्॥
वातळं कटुपाकं च सर्वारोचककुष्ठनुत्।
नैम्बं फलं रसे तिक्तं पाके तु कटु भेदनम्॥
स्निग्धं लघूष्णं कुष्ठघ्नं गुल्मार्शः कृमिमेहनुत्॥ (भावप्रकाशः)
निम्बस्तिक्तरसः शीतो लघुः श्ळेष्मास्रपित्तनुत्।
कुष्ठकण्डूव्रणान् हन्ति लेपहारादिशीलितः॥
अपक्वं पाययेच्छोफं व्रणं पक्वं विशोधयेत्।
नात्युष्णं निम्बजं तैलं कृमिकुष्ठकफापहम्॥
वातरक्तप्रशमनं मदालक्ष्मीज्वरापहम्। (धन्वन्तरिनिघण्टु)
प्रभद्रकः प्रभवति शीततिक्तकः कफव्रणकृमिवमिशोफशान्तये।
वलासभिद्  बहुविषपित्तदोषजिद् विशेषतो हृदयविदाहशान्तिकृत्॥
निम्बतैलं तु नात्युष्णं कृमिकुष्ठकफापहम्। (राजनिघण्टु)
निम्बवृक्षो लघुः शीतस्तिक्तो ग्राही कटुः स्मृतः।
अग्निमान्द्यकरश्चैव व्रणशोधनकारकः॥
शोफपाककरो बाले हितो रुद्यो मतो बुधैः।
कृमिवान्तिव्रणकफशोफपित्तविषापहः॥
वातं कुष्ठं च हृद्दाहं श्रमं कासं ज्वरं तृषाम्।
अरुचिं रक्तदोषं च मेहं चैव विनाशयेत्॥
कोमलः पल्लवश्चास्य ग्राहको वातकारकः।
रक्तपित्तं नेत्ररोगं कुष्ठं चैव विनाशयेत्॥
जीर्णपर्णं विशेषेण व्रणनाशकरं मतम्। (निघण्टुरत्नाकरः)
निम्बवृक्षस्य पुष्पाणि पित्तघ्नानि विशेषतः।
तिक्तानि च कृमिघ्नानि तथा कफहराणि च॥
निम्बस्य सूक्ष्मशाखा तु कासश्वासार्शः गुल्महा।
कृमिमेहहरा प्रोक्ता फलं चामं लघु स्मृतम्॥
स्निग्धं च भेदकं चोष्णं मेहकुष्ठविनाशकम्।
आमं फलं रसे तिक्तं पाके तु कटुकं मतम्॥
स्निग्धं लघूष्णं कुष्ठघ्नं गुल्मार्शःकृमिमेहनुत्।
निम्बबीजस्य मज्जा तु कुष्ठघ्नी कृमिनाशिनी॥
निम्बतैलन्तु कुष्ठघ्नं तिक्तं कृमिहरं परम्।
निम्बवृक्षस्य पञ्चाङ्गं रक्तदोषहरं मतम्॥
पित्तं कण्डूं व्रणं दाहं कुष्ठं चैव विनाशयेत्। (शालिग्रामनिघण्टु)

വേപ്പിന്ഡേ തൊലി കച്ചുളളു ശീതമാകയുമുണ്ഡത്
ക്രിമികുഷ്ഠവിഷം പിത്തം നാശയേദ് ദീപനം ഹിതം
അത്യുഷ്ണമല്ല വേപ്പെണ്ണ കച്ചിട്ടുള്ള രസം പരം
ധാതുക്കളെ കെടുപ്പിക്കും സന്നിപാതത്തിനും കുണം
വാതം കുഷ്ഠം ക്രിമികഫം വ്രണങ്ള്കും ഗുണം തുലോം (ഗുണപാഠം)

 

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்