சிதம்பரம்

திருவிசைப்பா

கோயில் (சிதம்பரம்)

(தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது)

பாடல்கள்

"நீறணி பவளக் குன்றமே ! நின்ற

நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே

வேறணிபுவன போகமே ! யோக

வெள்ளமே மேருவில் வீரா !

ஆறணி சடைஎம் அற்புதக்கூத்தா !

அம்பொன் செய் அம்பலத்தரசே !

ஏறணி கொடிஎம் ஈசனே ! உன்னைத்

தொண்டனேன் இசையுமாறு இசையே." (திருமாளிகைத் தேவர்)


"இவ்வரும் பிறவிப் பௌவநீர் நீந்தும்

ஏழையேற்கு என்னுடன் பிறந்த

ஐவரும் பகையே யார்துணை என்றால்

அஞ்சல் என்றருள் செய்வான்கோயில்

கைவரும் பழனங் குழைந்த செஞ்சாலிக்

கடைசியர் களைதரு நீலம்

செய்வரம்பு அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்

திருவளர் திருச்சிற்றம்பலமே." (கருவூர்த்தேவர்)


"களையா உடலோடு சேரமான் ஆரூரன்

விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள

முளையா மதிசூடி மூவாயிரவரொடும்

அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே."

(பூந்துருத்திநம்பி காடநம்பி)


"பாரோர் முழுதம் வந்திறைஞ்சப்

பதஞ்சலிக்கு ஆட்டுகந்தான்

வாரார் முலையாள் மங்கைபங்கன்

மாமறையோர் வணங்கச்

சீரான்மல்கு தில்லைச் செம்பொன்

அம்பலத்தாடுகின்ற

கரரார்மிடற்று எங்கணட்னாரைக்

காண்பதும் என்று கொலோ." (கண்டராதித்தர்)


"வாளாமால் அயன் வீழ்ந்து

காண்பரிய மாண்பிதனைத்

தோளாரக் கையாரத்

துணையாராத் தொழுதாலும்

ஆளோ நியுடையதுவும்

அடியேன்உன் தாள்சேரும்

நாளேதோ திருத்தில்லை

நடம்பயிலும் நம்பானே. (வேணாட்டடிகள்)


நேச முடையவர்கள்

நெஞ்சுளேயிடங் கொண்டிருந்த

காய்சின மால்விடையூர்

கண்ணுதலைக் காமருசீர்த்

தேசமிகு புகழோர்

தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்து

ஈசனை எவ்வுயிர்க்கும்

எம்இறைவன் என்றேத்துவனே." (திருவாலியமுதனார்)


வாரணி நறுமலர் வண்டு கிண்டு

பஞ்சமம் செண்பகமாலை மாலை

வாரணி மனமுலை மெலியும் வண்ணம்

வந்து வந்திவை நம்மை மயக்குமாலோ

சீரணி மணிதிகழ் மாடம் ஒங்கு

தில்லையம்பலத் தெங்கள் செல்வன் வாரான்

ஆரெனை அருள்புரிந்து அஞ்சல் என்பார்

ஆவியின் பரமென்றன் ஆதரவே" (புருடோத்தம நம்பி)


அறவனே அன்று பன்றிப் பின்ஏகிய

மறவனே எனைவாதை செய்யேல் எனும்

சிறைவண் டார்பொழில் தில்லையுளீர் எனும்

பிறைகுலாம் நுதற்பெய் வளையே. (சேதிராயர்)


திருப்பல்லாண்டு

சொல்லாண்ட சுருதிப் பொருள்

சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்

சில்லாண்டிற் சிதையுஞ்சில

தேவர் சிறுநெறி சேராமே

வில்லாண்ட கனகத்திரள்

மேருவிடங்கன் விடைப்பாகன்

பல்லாண் டென்னும் பதங்கடந்

தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (சேந்தனார்)

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is திருப்பல்லாண்டுத் தலங்கள்
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  கங்கைகொண்ட சோழேச்சரம் (கங்கைகொண்ட சோழபுரம்)
Next