தருமபுரம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

தருமபுரம்

திருநள்ளாற்றிலிருந்து காரைக்கால் செல்லும் பேருந்துச்சாலையில் 2 A.e. சென்று, வலப்பால் மாதாகோயில் உள்ள இடத்தில், வலப்புறமாகப் பிரியும் பாதையில் சென்றால் கோயிலையடையலாம். பாதையில் சாலை பிரியுமிடத்தில் பெயர்ப் பலகையும் உள்ளது. கோயில்வரை வாகனங்களில் செல்லலாம். தருமையா ¦தனக் கோயில். கோயிலைச் சுற்றிலும் தென்னைமரங்கள். மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங் எமன் (தருமன்) வழிபட்ட பதியாதலின் தருமபுரம் என்று பெயர் பெற்றது. திருஞானசம்பந்தரின் யாழ்முரிப்பதிகம் பெற்ற சிறப்புடையது. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலம். இத்தலத்தில்தான் திருஞான சம்பந்தரின் இசை, திருநீலகண்ட யாழ்ப்பாணரின் யாழிசையில் அடங்காமையை இறைவன் வெளிப்படுத்தினார் (முரி - ஒருவகை இசைப் பாடல். யாழில் அமைத்துப் பாடும் இசையமைப்பாதலின் 'யாழ்முரி' எனப் பெயர் பெற்றது.) நான்முகன் வழிபட்ட பதி. இதற்கு அண்மையில் 'தக்களுர்' என்னும் வைப்புத் தலமுள்ளது.

சிறிய ஊர். கோயில் கிழக்கு நோக்கிய சந்நிதி. முகப்பு வாயில் உள்ளது.

இறைவன் - தருமபுரீஸ்வரர், யாழ்முரிநாதர்.

இறைவி - மதுரமின்னம்மை, தேனமிர்தவல்லி.

தலமரம் - வாழை.

தீர்த்தம் - தருமதீர்த்தம், பிரமதீர்த்தம்.

சம்பந்தர் பாடல் பெற்றது.

முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம் - நந்தி. வலப்பால் அம்பாள் சந்நிதி. மண்டபத்தூணிலேயே துவார விநாயகரும் சுப்பிரமணியரும் காட்சி தருகின்றனர். அம்பாள் நின்ற திருக்கோலம் - சதுர்ப்புஜ நாயகி. சுவாமி சந்நிதி முகப்பு வாயில் மேலே நடுவில் ரிஷபாரூடரும், ஒருபுறம் சம்பந்தர் பாட, யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி பக்கத்தில் நிற்பது போலவும், மறுபுறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அவர் மனைவி ஆகியோருடன் நிற்பது போலவும் சுதை வேலைப்பாடுகள் உள்ளன.

முகப்பு வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பால் வலத்தில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகளும், தலமரம் வாழையும் நவக்கிரகங்களும் உள்ளன. வலமுடித்துப் படியேறி சென்றால் மூலவர் சந்நிதி. யாழ்முரிநாதர் தரிசனம்

- சிறியபாணம் - நாகாபரணம் சார்த்தப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றார்.

கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தணகணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது.

யாழ்முரிநாதர் எமன் உற்சவமூர்த்திகள் சிறப்பானவை.

நாடொறும் நான்கு காலவழிபாடுகள். யாழ்முரிப் பதிகப் பாடல் -

"மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்

நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்

பூதஇனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர்

அவர்படர் சடைந் நெடு முடியதொர் புனலர்

வேதமொடு ஏழிசைபாடுவர் ஆழ்கடல் வெண்டிரை

யிரைந் நுரை கரை பொருது விம்மி நின்றயலே

தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச் சிறை வண்டறை

யெழில் பொழில் குயில் பயில் தருமபுரம் பதியே." (சம்பந்தர்)

-"நீக்குங்

கருமபுரத்திற் கலவா தருள்செய்

தருமபுரஞ் செய்தவமே" (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. யாழ்முரிநாதர் தேவஸ்தானம்

தருமபுரம் - (வழி) காரைக்கால் - அஞ்சல்

புதுவை மாநிலம் - 609 602.




























 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருத்தெளிச்சேரி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருநள்ளாறு
Next