விடியற்காலை ஸுப்ரபாத தரிசனத்தில் துவங்கி பல்வேறு சமயங்களில் பல்வேறு ஸேவைகளை எவருக்கும் இடைஞ்சல் இன்றி பெருமானை மீண்டும் ஒரு முறை, அவரவர் வீடு திரும்பும் முன்பு தரிசிப்ப

விடியற்காலை ஸுப்ரபாத தரிசனத்தில் துவங்கி பல்வேறு சமயங்களில் பல்வேறு ஸேவைகளை எவருக்கும் இடைஞ்சல் இன்றி பெருமானை மீண்டும் ஒரு முறை, அவரவர் வீடு திரும்பும் முன்பு தரிசிப்பதற்கான வாய்ப்பையும் ஏற்பாடுகளையும் செய்து அன்பர்களின் கோரிக்கையினை நிறைவேற்றிய ஸ்ரீபாலபெரியவர்களின் கருணை சொல்லத்தரமன்று. உடன் வந்தவர்கள் யாவரும் தரிசித்த பின், மீண்டும் ஒரு முறை ஸ்ரீபாலபெரியவர்கள் கோயிலுக்குச் சென்று தரிசித்து மீண்டார்கள்.

திருமலையில் உள்ள பல்வேறு மடங்களின் பிரதிநிதிகள் ஸ்ரீபாலபெரியவர்கள் தங்கி இருந்த இடம் வந்து தரிசித்து பிரஸாதம் பெற்று சென்றார்கள். கோயில் நிர்வாக அதிகாரிகளும் வந்து தரிசித்து சென்றார்கள்.

மாலையில் திருமலையை விட்டு புறப்பட்டு திருப்பதி வந்து பாதுகா மண்டபத்தில் சிறிது நேரம் தங்கி, அங்கு திரளாக குழுமியிருந்த பக்தர்களுக்கு தரிசனமும் பிரஸாதமும் அளித்து அவர்களுக்கு விடை அளித்து சித்தூருக்கு புறப்பட்டார்கள்.

இரவு 7.35க்கு சித்தூர் வந்த சேர்ந்து இரவு தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். நாளை காலை இங்கிருந்து புறப்பட்டு மதுரை செல்கின்றார்கள்.

காஞ்சியிலிருந்து திருமலை பாத யாத்திரை இன்று திருமலையில் சுபமாக முடிந்தது.

இந்த பாத யாத்திரையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை அடியேனுக்கு அளித்த ஸ்ரீபாலபெரியவர்களின் பொன்னார் திருவடிகளுக்கு மீண்டும் ஒரு முறை வணக்கம் தெரிவித்து உங்களிடம் இருந்து தற்காலிகமாக விடை பெறுகிறேன்.

மீண்டும் சமயம்வரின் தொடர்வேன்.

12-10-2004 இராமாயணம்

சித்தூர்