மாணிக்கவாசக ஸ்வாமிகள் திருவண்ணாமலையில் அருளிய
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
காரமேனிச் செங்கண் கதிரிமதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறைதருவான்
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
பொறுத்தமான அணிகலன்களை அணிந்த பெண்களே! செல்வம் கொழிக்கும் ஆயர்பாடியிலே உள்ளச் செல்வச் சிறுமியர்களே! நாராயணன் - வேல் கொண்ட கொடிய தொழிலுடையவனாகிய நந்தகோபன் மகன் அழகு நிறைந்த கண்களையுடைய யசோதையின் இளஞ்சிங்கம். கருமை நிறத் திருமேனியுடையவன். சிவந்த கண்களையுடையவன். கதிர் விரிக்கும் முழுமதி போன்ற முகமுடையவவன். அவன் நாம் விரும்பிய பொருளெல்லாம் வழங்குவான். இன்று மார்கழி மாதத்துப் பௌர்ணமி, நல்ல நாள்! உலகத்தார் புகழும் வண்ணம் நீராட வருபவர்களே! வாருங்கள்!
2
வையத்து வாழ்வீர்கள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கலுக்ககுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம்: பாலுண்ணோம்; நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம்முடியோம்;
செய்யா தனசெய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்
இம்மண்ணுலகத்தில் வாழ்பவர்களே! நாம் நம் பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கோளுங்கள்! திருப்பார்கடலிலே அறிதுயில் கொண்டுள்ள இறைவன் திருவடிகளைப் பாடுவோம். நெய் உண்ண மாட்டோம். பால் பருக மாட்டோம். விடியற்காலையில் நீராடுவோம். கண்களுக்கு மை தீட்டமாட்டோம். கூந்தலில் பூ வைத்து முடிக்க மாட்டோம். செய்யத்தகாத எச்செயலையும் செய்ய மாட்டோம். எவரிடமும் போய் கோள் சொல்லமாட்டோம். ஐயமும், பிச்சையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடுவோம். இவை யாவும் செய்வது நாம் கடைத்தேறும் வழிக்கே என்று நினைத்து மகிழ்வோம்.
3
ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் ¢பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஒங்கு பெருஞ்செந்தில் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த் ¢த முலைப்பற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந் ¢தேலோ ரெம்பாவாய்
நெடியோன் திரிவிக்கிரமன் ஆக ஒங்கி வளர்ந்து உலகத்தை அளந்த உத்தமன் திருமாள்! அவன் திருநாமங்களைப் பாடி நாம், நம் நோன்பிற்குரியவற்றைக் கூறி நீராடுவோம். அவ்வாறு நீராடினால், தீமையில்லாமல் நாடெல்லாம் மாதம் மூன்று முறை மழை பெய்யும். அதனால் செந்நெற்படிர் ஒங்கிப் பருத்து வளரும். அந்தப் பயிர்களின் ஊடே கயல்மீன்கள் துள்ளித் திரியும். அழகிய குவளை மலர்களிலே புள்ளிகளுடைய வண்டுகள் தேனைக்குடித்து மெய்ம்மறந்து உறங்கும். மாட்டுத் தொழுவில் புகுந்து இருந்து, அழகிய முலைகளைப் பற்றி இழுத்தால், தேக்கி வைத்துக் கொளளாமல் பால்சுரந்து குடங்களை நிறைக்கும், வள்ளலில் இயல்பு வாய்ந்த பெரிய பசுக்களால் இத்தகைய நீங்காத செலவம் நிறையும்.
4
ஆழி மழைக்கண்ணா! ஒன்றும்நீ கைகரவேல்;
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைபப் பத்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சர்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
கடல்போன்ற பெருமையுள்ள மழையாகிய அருளாளனே! c ஒன்றையும் மறைத்து வைக்காதே. கடலுக்குள் செல்! கடல்நீரை முகர்ந்து கொள்; பேரொலியுடன் மேலே எழு; ஊழிக்காலத்திலும் கேடில்லாத திருமாலின் திருமேனிபோல் கருமை கொள்! பெருமையும் எழிலும் பொருந்திய பதுமநாபனின் கையில் விளங்கும் சக்கரத்தினைப்போல் மின்னிட்டு விளங்கு! அவனது மற்றொரு கையில் வளம்புரிச்சங்குபோல நின்று முழங்கு! அப்பெருமானின் சர்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்படும் அம்புமழைபோல உலகம் வாழவும், நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும் காலந்தாழ்த்தாமல் பொழி.
5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்ததா மோதரனைத்
தூயோமாய் வந்தநாம் தூமலர்தூ வித்தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்!செப்பேலோ ரெம்பாவாய்.
அவன் மாயன், நிலைத்த தன்மையுடைய வரமதுரையில் தோன்றிய மைந்தன். தூய்மையும், பெருமையுமுடைய நீரினையுடைய யமுனைக்கரையில் வளர்ந்தவன். ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய விளக்கு. தனை ஈன்ற தாயின் பெருமையை உலகெல்லாம் விளங்கச் செய்த தாமோதரன்! அவனை நாம் உள்ளமும் உடம்பும் தூய்மையுடையவர்களாகி, நல்ல மலர்களைத்தூவி வணங்குவோம். வாயினால் அவன் புகழைப் பாடுவோம். மனத்தினால் அவன் தன்மையை நினைப்போம். இவ்வாறு நாம் செய்தால் முன்பு நாம் செய்த பிழைகளும் இன்மேல் வரப்போகும் நெருப்பில் இட்ட தூசுபோல் அழிந்துவிடும். ஆகையால் அவன் புகழைப் பேசுவோமாக!
6
புள்ளும் சிலம்பினகாண்! புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய். எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத் தரவில் தூயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து அரி யென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்தேலோ ரெம்பாவாய்.
பறவைகள் ஒலிக்கின்றன. கருடனுக்குத் தலைவனாகிய நம் இறைவன் எழுந்தருளிய திருக்கோயிலிலிருந்து வெண்சங்கு அழைக்கும் பேரொலி உன் காதில் விழவில்லையா. நம் பெருமான், பூதனைப் பேயின் முலையில் தடவிய நஞ்சினை உண்டவன்! வஞ்சனையோடு வண்டி வடிவத்தில் வந்த சகடாசுரன் நொறுங்கி இறங்குமாறு திருவடி தூக்கியவன். திருப்பாற் கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டவன். உலகுக்கெல்லாம் வித்தாக அமைந்தவன். முனிவர்களும், யோகிகளும் அவனை உள்ளத்தே கொண்டு மெள்ள எழுந்து அரி என்று ஒதுக்குகிற பேரொளி, நம் உள்ளம் புகுந்து குளிர்ந்தது. சிருபிள்ளையாய். எழுந்து வா!
7
கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஒசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாரா யணமூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்ட கிடத்தியோ?
தேச முடையவனாய்!திறவேலோ ரெம்பாவாய்!
துயிலும் பெண்ணே! "கீசு கீசு"என்று எங்கும் ஆனைச்சாத்தன் பறவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து பேசின. அந்தப் பேச்சின் ஒளி உனக்குக் கேட்கவில்லையா? மணம் பொருந்திய கூந்தலையுடைய இடைச்சியர் தங்கள் கழுத்தில் உள்ள அச்சுத் தாலியும், ஆமைத்தாலியும் 'கல கல'என்று ஒளிக்க, காளை அசைத்து, மத்தினால் கடைந்து ஒசைப்படுததும் ஒலியும் கேட்கவில்லையா? தலைமையுடைய பெண்ணே! நாராயணனாகிய மூர்த்தியை, கேசவனை நாங்கள் பாடுகின்றோம். c கேட்டுக்கொண்டே கிடக்கின்றாயோ? ஒளியுடையவளே! கதவைத்திற!
8
கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண். மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய். பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
மனமகிழ்ச்சியுடைய பெண்ணே!. கிழக்கே வானம் வெளுத்தது. எருமைகள் சிறிது நேரம் விடுதலை பெற்று மேய்வதற்காகச் சென்று பரவியுள்ளன. நோன்பு செய்யும் இடத்திற்குப் பலர் சென்று விட்டனர். மீதமுள்ளவர்களும் அங்கே கும்பிடும் நோக்கத்தோடு புறப்படுகின்றனர். அவர்களைப் போக விடாமல் நிறுத்தி வைத்து, உன்னை அழைக்க வந்து நின்றோம். எழுந்துவா. நம் இறைவன் குதிரை வடிவம் எடுத்து வந்த அசுரனது வாயைப் பிளந்தவன்!. கம்சன் ஏவிய மல்லர்களை அழித்தவன். தேவர்கள் எல்லார்க்கும் பெரிய தேவன். அவனை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால், ஆ!என்று வாய்த்திறந்து இரக்கம் காட்டி வா!என்று அழைத்து பாடி, வேண்டிக்கொண்டு வணங்கினால், ஆ என்று வாய் திறந்து இரக்கம் காட்டி வா என்று அழைத்து நம் வேண்டுதலை ஆராய்ந்து அருள்புரிவான்!.
9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழித் தூயிலணைமேல் சுண்வளரும்,
மாமான் மகளே ! மணிக்கதவம் தாழ்திறவாய் ;
மாமீர் அவளை யெழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
' மாமாயன் மாதவன் வைகுந்த ' னென்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்
தூய மாணிக்கங்களை அழுத்திச் சமைத்த மாடத்திலே சுற்றிலும் விளக்குகள் எரியவும், அகில் முதலியவற்றின் புகை மணக்கவும், தூங்குவதற்கென்றே உள்ள படுக்கையின் மீது கண் உறங்குகின்ற அம்மான் மகளே! மாணிக்கக் கதவின் தாழ்ப்பாளைத்திற. (மாமன் மகளை இவ்வாறு அன்போடு எழுப்பியும் அவள் எழவில்லை. ஆதலால் அவள் தாயை அழைத்து, அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்) மாமியாரே. உங்கள் மகள் எங்களுக்குப் பதிலே சொல்லாததால் ஊமையோ? அல்லது (கேளாத) செவிடோ? உறக்கமோ? ஒய்வில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டுக் கிடக்கிறாளோ? மாமாயனே. மாதவனே. வைகுந்தனே என்று அவனுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம். ஆயினும் அவள் எழவில்லை. அவளை எழுப்ப மாட்டீர்களா?
10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதார் ¢?
நாற்றத் துழாய்முடி நாரா யணன் நம்பால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் ; பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த யுலையாய். அருங்கலமே !
தோற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
விரதமிருந்து சுவர்க்கம் போகின்ற அம்மையே!. வாசற் கதவைத் திறக்காதவராயினும் பதிலுங்கூடவா சொல்ல மாட்டார்கள்?. மணக்கின்ற துளசி மாலையைத் திருமுடியில் அணிந்த நாராயணன், நம்மால் போற்றத்தக்க நம் நோன்புப் பரிசான பேரின்பத்தை நல்குவான்;. புண்ணிய மூர்த்தியாகிய இராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயிலே போய் விழுந்த கும்பகருணன் உறங்கும் போட்டியில் உனக்குத் தோல்வியடைந்து அவனுடைய பேருறக்கத்தை உனக்குத் தந்தானா?. ஆழ்ந்த உறக்கமுடையவளே!. பெறற்கரிய ஆபரணம் போன்றவளே!. உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திற!.
11
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவவலர்தம் பொற்கொடியே !
புற்றர வல்குல் புனமயிலே ! . போதராய்
கற்றுத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.
இடையர், கன்றுகளையுடைய கறவைப் பசுக்கூட்டங்கள் பலவற்றைப் பால் கறப்பர்;பகைவர்களின் வலிமை அழியும்படி சென்று போர் செய்வர்;குற்றம் ஒன்றுமில்லாதவர். அவர்களது, தங்கக் கொடி போன்ற பெண்ணே!. புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலையுடையவளே!. காட்டில் திரியும் அழகிய மயில் போன்றவளே!. எழுந்து வா!. நம் உறவினராகிய தோழிமார் எல்லாரும் வந்து, உன் வீட்டு வாசலிலே புகுந்து முகில்வண்ணன் திருநாமத்தைப் பாடுகின்றோம். செல்வப் பெண்ணே!. கொஞ்சம்கூட அசையாமலும், பேசாமலும் c எவ்வாறு இதற்காக இவ்வாறு உறங்குகின்றாய்?. இதற்குப் பொருள்தான் என்ன?.
12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் !
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானாப் பாடவும்நீ வாய்திறவாய் ;
இனித்தா னெழுந்திராய், ஈதென்ன பேருறக்கம் !
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
இளங்கன்றினையுடைய எருமைகள் கனைத்து, தம் கன்றின் மீது இரக்கம் கொண்டு கன்றை நினைத்து நின்று, தம் முலை வழியாகப் பால் சொரித்து நனைத்து, வீட்டைச் சேறாக்குகின்றன. அத்தகைய எருமைகளையுடைய நல்ல செல்வனுடைய தங்கையே!. மார்கழி மாதப் பனி எங்கள் தலையிலே விழ, உன் வீட்டுக்கட்டை வாசலில் நிற்கின்றோம். தென்னிலங்கை வேந்தனாகிய இராவணனைக் கோபத்தினால் அழித்த, நெஞ்சிற்கு இனியவனான இராமபிரானை நாங்கள் பாடுகின்றோம். கதவைத் திற!. இது என்ன உறக்கம்?. நாங்கள் உன்னை இப்படி அழைப்பது எல்லா வீட்டாருக்கும் தெரிந்து விட்டது. இனியாவது எழுந்து வா!
13
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைக ளெல்லோரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று ;
புள்ளும் சிலம்பினகாண் ; போதரிக் கண்ணினாய் !
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ ? பாவாய் ! c நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேயோ ரெம்பாவாய்.
நம் பெருமான், பறவை வடிவமாக வந்த பகாசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவன்!. கொடிய அரக்கனாகிய இராவணன் தலைகள் பத்தினையும் அறுத்து அழித்தவன்!அவனுடைய வீரப்புகழைப் பாடிக்கொண்டு பிள்ளைகள் எல்லோரும் பாவை நோன்பை நோற்கும் இடத்திற்குப் போய் புகுந்தனர். விடிவெள்ளி தோன்றி விட்டது!. வியாழம் மறைந்து விட்டது!. பறவைகள் ஒலிக்கின்றன!. மலர் போன்ற அழகிய இரேகை பொருந்திய விழியுடையவளே!. பாவையே. இந்த நன்நாளில் c, உன் கள்ளத்தனத்தை விட்டுவிட்டு எங்களோடு கலந்து கொண்டு, குளிரக் குளிரக் குடைந்து நீராடாமல், படுக்கையில் கிடக்கின்றாயா!.
14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின் காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பால் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய். எழுந்திராய். நாணாதாய். நாவுடையாய் !
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.
முந்திவந்து உங்களை எழுப்புவேன் என்று வாயால் வெறும் பேச்சுப் பேசிய நங்கையே. எழுந்திரு!. வெட்கமில்லாதவளே!. நாவின் நீட்சியைவுடையவளே.!உங்கள் வீட்டுப் புழக்கடைத் தோட்டத்தில் உள்ள குளத்திலே செங்கழுநீர்ப் பூக்கள் பூத்தன!. ஆம்பல் மலர்கள் இதழ் குவிந்து வாய் மூடின. காவியாடை உடுத்தவரும், வெண்மையுடைய பற்களையுடையவருமான தவசீலர்கள், தாங்கள் பொறுப்பேற்றுள்ள திருக்கோயில்களைத் திறக்கச் சென்றுவிட்டனர். சங்கு சக்கரம் ஏந்திய நீண்ட, திருக்கைகளையும் தாமரைக் கண்களையும் உடையவனைப் பாடுவோமாக!.
15
எல்லே ! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர் போதருகின்றேன்
வல்லைஉனன் கட்டுரைகள், பண்டேஉன் வாயறிதும் !
வல்லீர்கள் நீங்களே, நானேதா னாயிடுக !
ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை ?
எல்லாரும் போந்தாரோ. போந்தார் போந் தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.
எழுப்புவோர்: ஏடி!. (ஏனடி, ஏண்டி) இளங்கிளியே!, இன்னம் உறங்குகின்றாயோ?
எழாதிருப்பவள்: பெண்களே!. 'சில்'என்று கத்திக் கூப்பிடாதீர்கள்!. இதோ வந்து விடுகிறேன்!.
எழுப்புவோர்: c, மிகவும் கெட்டிக்காரி!. உன் பேச்சுக்களை முன்னமே அறிந்திருக்கிறோம்!. உன் வாயையும் அறிவோம்!
எழாதிருப்பவள்: கெட்டிக்காரிகள் நீங்களே ஆனாலும் சரி!நான்தான் ஆனாலும் சரி!
எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா!. இந்தக் கெட்டிக்காரத்தனம் தவிர உனக்கு என்று வேறு என்ன வைத்திருக்கிறாய்!.
எழாதிருப்பவள்: எல்லோரும் வந்துவிட்டனரோ?
எழுப்புவோர்: வந்து விட்டார்கள்!நீ வந்து எண்ணிக்கொள். குவலயாபீடம் என்னும் வலிய யானையைக் கொன்றவனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை, மாயனைப்பாடு!
16
நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே. கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே. மணிக்கதவம் தாள்திறவாய் ;
ஆயர் சிறுமிய ரோமிக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் ;
தூயோமாய் வந்தோம். துயிலெனப் பாடுவான் ;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா ! c
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
(எல்லோரும் திருக்கோயில் முன்சென்று பாடுகின்றனர்)
உலகுக்கெல்லாம் தலைவனாய் நிலைத்திருக்கின்றவனாகிய நந்தகோபனுடைய திருக்கோயிலைக் காப்பவனே!. கொடிகள் விளங்கித் தோன்றுகின்ற தோரண வாயிலைக் காப்பவனே!. மணிக்கதவின் தாழ்ப்பாளத் திறப்பாய். இடையர்களின் சிறுமியராகிய எங்களுக்கு நோன்பு நிறைவுக்கான பறை ஒன்றைத் தருவதாக மாயனாகிய மணிவண்ணன் நேற்றே வாக்களித்தான். அந்த எம்பெருமான் துயில் எழுந்தருளுமாறு பாடுவதற்கு!, உள்ளும் புறமும் தூயவர்களாய் நாங்கள் வந்தோம். உன் வாயாலே, முதன் முதலிலேயே மறுத்துச் சொல்லிவிடாதே அப்பனே. வாயில் நிலையடு நேசமாகப் பொருந்தியிருக்கும் கதவை c, நீக்கு!
. 17
அம்பரமே, தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய் ;
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே ! குலவிளக்கே !
எம்பெரு மாட்டி யசோதாய் ! அறிவுறாய் ;
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே ! உறங்காது எழுந்திராய் !
செம்பொற் கழலடிச் செல்வா ! பலதேவா !
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
ஆடை தண்ணீர், சோறு மூன்றையும் எங்களுக்கு அறமாக வழங்கும் எம்பெருமமானே! நந்தகோபாலா, எழுந்திரு! வஞ்சிக்கொடி போன்ற பெண்கள் எல்லோர்க்கும் கொழுநிதாகவும், தாம் பிறந்த குலத்திற்கு விளக்காகவும், எம்பெருமாட்டியாகவும் விளங்குகின்ற யசோதையே! துயில் நீங்கி உணர்வு பெற்றெழு வானவெளியை ஊடறுத்து, ஓங்கி வளர்ந்து உலகத்தைத் திருவடியால் அளந்த தேவதேவனே! துயில் கொள்ளாமல் எழுந்திரு! செம்பொன்னாலாகிய வீரக்கழல் அணிந்த செல்வா! பலதேவா! உன் தமபியாகிய கண்ணபிரானும் நீயும் உறங்காதீர்கள்!
18
உந்து மதகளிற்றன் ஒடாத தோள்வயலின்
நந்தகோ பாலன் மருமகளே நப்பினாய் !
கந்தம் கமழும் குழலீ ! கடைதிறவாய்.
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் ; மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் ;
பந்தூர் விரலிஉன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
நந்தகோபாலன், மதம் பொழிகின்ற யானைகளையுடையவன்; நீங்காத தோள் வலிமையுடையவன்; அவனுடைய மருமகளே!
நப்பின்னையே! மணங்கமழும் கூதந்தலை உடையவளே! கதவைத்திற! கோழிகள் எங்கும் வந்து கூவின; மாதாவிக் கொடிகள் படரிந்திருக்கும் பந்தலின் மேலே குயில் கூட்டங்கள் பலமுறை கூவின; பந்து பொருந்துகின்ற விரலையுடவளே! உன் மைத்துனன் பெயரை நாங்கள் சொல்லிப்பாட, செந்தாமரை போன்ற உன் கையால் அழகிய வளையல்கள் ஒலிக்க மகிழ்ந்து வந்து திறப்பாயாக!
19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக்கிடந்த மலர்மார்ப வாய்திறவாய் ;
மைத்துடங் கண்ணினாய் c உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண் ;
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.
குத்துவிளக்கு ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது யானைத் தந்தத்தினால் அழகு பெறச் செய்யப்பட்டதும், 'மெத்'தென்றிருப்பதும் அழகு, குளிர்ச்சி, மென்மை, மணம் வெண்மை ஆகிய ஐந்தும் பொருந்தியதுமாகிய பஞ்சசயனப் படுக்கையின் மேல் ஏறி, கொத்துக் கொத்தாக மலர்ந்திருக்கின்ற மலர்களைச் சூடிய கூந்தலையுடைய நப்பின்னைப் பிராட்டியின் கொங்கைகளின் மேலே வைத்துக்கொண்டு கிடக்கின்ற மலர் மார்புடைய கண்ணபிரானே!உன் திருவாய் மலர்ந்து அருள்வாயாக!மைதீட்டிய பெரிய கண்ணையுடைய நப்பின்னைப் பிராட்டியே!நீ உன் கணவனைச் சிறிது நேரம்கூடத் துயில் எழ விட மாட்டாய் போலும்!நொடிப்பொழுதும் கூட அவனைப் பிரிந்திருக்கும் ஆற்றல் உனக்கு இல்லை போலும்!இது, உன் நிலைக்கும் இயல்புக்கும் பொருத்தமன்று!
20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே. துயிலெழாய் !
செப்ப முடையாய். திறலுடையாய் ! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா. துயிலெழாய் ;
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் ! திருவே ! துயிலெழாய் ;
உக்கமும் தட்டொளிடும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை c ராட்டேலோ ரெம்பாவாய்.
முப்பத்து மூவராகிய தேவர்களுக்கும், தானாக முன்சென்று அவர்கள் நடுக்கத்தைப் போக்கும் வல்லமை உடையவனே!, துயில் எழு!, செப்பம் உடையவனே!, ஆற்றலுடையவனே!, பகைவர்களுக்குக் காய்ச்சல் உண்டாக்குகின்ற விமலனே. துயில் எழு!, செப்புப் போன்ற மென் முலைகளையும், சிவந்த வாயினையும், சிறிய இடையினையும் உடையவளாகிய நப்பின்னயம்மையே!. திருமகளே. துயில் எழு!. நோன்புக்குறிய கருவிகளாகிய ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் தந்து உன் கணவனையும் எம்பொருட்டு இப்போதே நீராட்டு!.
21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்செரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே. அறிவுறாய் ;
ஊற்ற முடையாய் ! பெரியாய் ! உலகினில்
தோற்றமாய் நின்ற கடரே ! துயிலெழாய் ;
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் மாபப்போலே
ஆற்றாது வந்துன் அடிபணியு மாப்போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.
எடுத்து ஏந்திய பாத்திரங்களில் எதிர்த்துப் பொங்கி மேலே வழியும் படியாக, இடைவிடாமல் பால் பொழிகின்ற பெரிய பசுக்களை அளவின்றிப் பெற்றிருப்பவனாகிய நந்தகோபன் மகனே!துயிலெழுவாயாக!திண்மையுடையவனே!பெருமானே!உலகத்திலே காட்சிப் பொருளாய் நின்ற சுடரே!துயில் எழுவாயாக!பகைவர்கள் உனக்கு முன்னே தம் வலிமையை இழந்து, உன் கோயில் வாசலிலே ஆற்றாமையுடையவராய் வந்து, உன்திருவடிகளைப் பணிக்கிறார். அவர்களைப் போல் நாங்களும் வணங்கி வந்து உன்னைப் புகழ்ந்தோம்.
22
அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கூட்டிற்கீழே
சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம் ;
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூபப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்க ணிரண்டுங்கொண் டெங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்
அழகிய பரந்த பெரிய இவ்வுலகத்திலேயுள்ள அரசர்கள் யாவரும் தற்செருக்கு அடங்கி வந்து அடைக்கலமானோம். கிண்கிணிவாயில் இழைக்கப்பட்ட செந்தாமரரைப் பூப்போலே உன் சிவந்த கண்களைச் சிறுகச் சிறுக விழித்து எங்கள் மேல் அருட்பார்வை செலுத்தக்கூடாதா?சந்திரனும் சூரியனும் எழுந்தாற்போலே உன் அழகான கண்கள் இரண்டையும் கொண்டு எங்கள் மீது நோக்குவாயானால், எங்கள்பாலுள்ள பாவமெல்லாம் தீர்ந்து போகும்!
23
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் போந்துதறி
முரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமோ போலே, c பூவைப்பூ வண்ணா ! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்
காயாம்பூ வண்ணனே!மழைக்காலத்தில், மழைக்காலத்தில், மலைக் குகைக்குள்ளே உறைந்து கிடந்து உறங்கும் விறுமிகுந்த சிங்கமானது உறக்கம் தெளிந்து எழுந்து, அனல் கக்க விழித்து, பிடரிமயிர் சிலிர்க்கும்படி நாற்புறமும் திரும்பித் திரும்பி உதறிசோம்பல் முறித்து நிமிர்ந்து, முழங்கி அந்தக் குகையிலிருந்து வெளியே புற்ப்பட்டு வருவதுபோல், c உன் கோயிலிலிருந்து இங்கு வந்தருள்வாயாக!அழகு பெற அமைந்து சிறந்து விளங்கும் அரியாசனத்தில் வீற்றிருந்து நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டு ஆராய்ந்து அருள்புரிவாயாக!
24
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் ! திறல்போற்றி !
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி !
கன்று குணிலா எறிந்தாய் ! கழல்போற்றி !
குன்று குடையா எடுத்தாய் ! குணம்போற்றி !
வென்றுபகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி !
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் ; இரங்கேலோ ரெம்பாவாய்
அன்று இந்த உலகத்தை அளந்தவனே!உன் திருவடிகளைப் போற்றுகின்றோம் தென் இலங்கை சென்று, அங்கு அரக்கர்களை அழித்தவனே!உன் ஆற்றலைப் போற்றுகின்றோம். சகடாசுரன் அழியுமாறு உதைத்தவனே!உன்புகழைப் போற்றுகின்றோம். கன்றுக் குட்டியாக வடிவம் எடுத்து வந்த வத்சாசுரனை எறிதடியாகக் கொண்டு, விளாமரத்தில் கனியாக வடிவம் எடுத்திருந்த கபித்தாசுரன் மேல் எறிந்து, அந்த அசுரர் இருவரையும் கொன்றவனே!உன் வீரக் கழலணிந்த திருவடிகளைப் போற்றுகின்றோம் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து, மழையைத் தடுத்து மக்களைக் காத்தவனே!உன் அருட்குணத்தைப் போற்றுகின்றோம் பகைவர்களை வெற்றிகொண்டு அழிக்கும் உன் திருக்கையில் உள்ள வேலினைப் போற்றுகின்றோம். இப்படிப் பலவாறாக உன் வீரத்தைப் புகழ்ந்து போற்றி, பறை கொள்வதற்காக இன்று நாங்கள் வந்தோம். அருள்வாயாக.
25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கில னாகித்தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே ! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
c தேவகியென்னும் ஒருத்தியின் மகனாய்த் தோன்றினாய். ஓர் இரவிலேயே யசோதை என்னும் ஒருத்தியின் மகனாக மறைந்து வளர்ந்தாய்!இதனை அறிந்து பொறாதவனாகித் தீங்கு நினைத்த கம்சன் கருத்தைப்பொய்யாக்கி அவன் வயிற்றிலே நெருப்புப் பற்றி எரிவதுபோல நின்றாய்!நெடிய மேனி கொண்ட திருமாலே!உன்னை அன்போடு நினைந்து இங்கு வந்தோம் நாங்கள் விரும்பியவற்றை வழங்குவாயானால் உன் அழகுதங்கிய செல்வத்தையும், வீரத்தையும் பாடுவோம் வருத்தமும் தீர்ந்து மகிழ்வோம்!
26
மாலே ! மணிவண்ணா ! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகன் வேண்டுவன கேட்டியேல் !
ஞாலத்தை எல்லாம் நடுங்கமுரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே, பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே, கொடியே விதானமே,
ஆலின் இலையாய் ! அருளேலோ ரெம்பாவாய்
திருமாலே!மணிவண்ணா!ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமானே!மார்கழி நீராடும்பொருட்டு முன்னோர்கள் செய்வனவும், வேண்டுவனவும் என்ன?அவற்றைக் கேட்டருள்வாயாக!உலகம் அதிரும்படி முழங்கும் பால் போன்ற வெண்மையான பாஞ்சசன்னியம் போன்ற சங்குகள் வேண்டும் நெடுந்தூரத்தில் சென்று ஒலிக்கின்ற தன்மையுடைய மிகப்பெரிய பறைகள் வேண்டும் பல்லாண்டும் இசைப்பவர்கள் வேண்டும் அழகிய விளக்குகள் வேண்டும் கொடி வேண்டும் மேற்கட்டி (விமானம்) வேண்டும் இவற்றையெல்லாம் அருள்வாயாக!
27
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா ! உன் தன்னைப்
பாடிப் மறைகொண்டு யாம்பெறும் சம்மானம் ;
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே,
பாடகமே, என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
முடநெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
பகைவரை வெற்றி கொள்ளும் பெருமையுடைய கோவிந்தா!உன்னை வாயாரப் பாடிப் பறையைப் பெற்றுக் கொண்டோம் இனி நாங்கள் பெறும்படியான பரிசுகள் என்ன?சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, சிலம்பு என்பவனாகிய பல அணிகலன்களும் நாடு புகழும் வண்ணம் நன்றாக நாங்கள் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு முழுதும் மூடும்படி நெய் வார்த்து அந்தச் சோற்றை எடுக்கும்பொழுது முழங்கை வழியாக நெய் ஒழுகி வழியும்படி கூடியிருந்து உண்டு உள்ளங்குளிர்வோம்.
28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தன்னை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா ! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே
இறைவா ! c தாராய் பறையேலோ ரெம்பாவாய்
கறவைப் பசுக்களின் பின்னாலே நாங்கள் காட்டிற்குக் சென்று அங்கே கூடிக் கலந்து உண்டோம் அறிவு ஒரு சிறிதும் இல்லாத இடையர் குலத்திலே உன்னைப் பிறவியாக (பிள்ளையாக) ப் பெறும் அளவுக்கு நாங்கள் புண்ணியம் உடையவரானோம். குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!உன்னோடு எங்களுக்கு உள்ள உறவு ஒழிக்க முடியாதது. அறிவில்லாப் பிள்ளைகள் நாங்கள் அன்பினால் உன் பெருமையை மறந்து, உன்னைச் சிறு பெயர்கள் இட்டு நாங்கள் அழைத்தவற்றையெல்லாம் குறித்து c கோபித்து அருளாமல் இறைவா!நீ, நாங்கள் விரும்புவதை வழங்குவாயாக.
29
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்தும் c
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா !
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
வைகறைப் பொழுதிலே வந்து உன்னை நாங்கள் வணங்கினோம் உன் பொற்றாமரைத் திருவடிகளைப் போற்றுதற்குரிய எங்கள் கருத்தைக் கேட்பாயாக!!எல்லையற்ற பெருமையுடையவனாகிய c, மாடு மேய்த்து உண்ணும் இடையர் குலத்திலே பிறந்தும் எங்களைச் சிற்றடிமை கொள்ளாமல் போய்விடாதே!நாங்கள் உன்னை வணங்குவது இன்றைக்குப் பறை கொள்வதற்கு மட்டுமன்று கோவிந்தா!என்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உன்னோடு பொருந்திய வாழ்வோம் உனக்கே நாங்கள் அடிமையாகித் தொண்டுகள் செய்வோம்!எங்களுக்கு வேறு ஆசைகள் தோன்றுமானால் அவற்றை மாற்றி அருளவும் வேண்டும்.
30
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கு அப்பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்
கப்பல்கள் மிதந்துசெல்லும் கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் வழங்கியவன் மாதவன் கேசி என்னும் அசுரனை அழித்தவன் கேசவன் அந்தப் பெருமானை முழுமதி போன்ற அழகிய முகமுடைய செவ்விய அணிகளைப் பூண்ட பெண்கள் சென்று வழிபட்டு, ஆயர்பாடியிலே பறை கொண்டனர். அந்த வரலாற்றை, திருவில்லிப்புத்தூரிலே தோன்றியவரும் பசுமையுடைய தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையைச் சூடியவருமான பட்டர்பிரான் (பெரியாழ்வார்) திருமகளாகிய கோதை (ஆண்டாள்) சொன்ன, கூட்டு வழிபாட்டுத் தமிழ்ப் பாமாலை இத்திருப்பாவை, இதில் உள்ள முப்பது பாடல்களையும் தவறாமல் இந்நிலவுலகிலே இந்த முறையிலேயே பாடுபவர்கள், நான்கு பெரிய மலைபோன்ற தோள்களையும் சிவந்த கண்களையும் அழகிய முகத்தையும் செல்வத்தையும் உடைய திருமாலால் திருவருள் பெற்று எங்கும் இன்புறுவர்.
குழந்தைகள் காலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் அடியிற்கண்ட பாசுரத்தைச் சொல்லித் துதிக்கவும்
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்,
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்தும் c
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா !
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்
(திருப்பாவை-29)
இரவு படுக்கப்போகும்முன் அடியிற்கண்ட பாசுரத்தைப் சொல்லித் துதிக்கவும்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் ;
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே!
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் ;
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஒதஉலவா ஒரு தோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்தன் கோயிற் பிணாப்பிள்ளைகாள் !
ஏதவன்ஊர்? ஏதவன்பேர்? ஆர்உற்றார்? ஆர்அயலார்?
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய் !
(திருவெம்பாவை-10)