திருக்கோழம்பம்

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருக்கோழம்பம் (திருக்குழம்பியம்)

மக்கள் வழக்கில் திருக்குழம்பியம் - திருக் கொழம்பியம் என்று மாறியுள்ளது.

கும்பகோணம் - காரைக்கால் திருநீலக்குடியை அடுத்துள்ள "எஸ். புதூர்" வந்து, அங்கிருந்து திருக்குழம்பியத்திற்குச் செல்லும் தனிப்பாதையில் சென்றால் கோயிலையடையலாம். நரசிங்கன் பேட்டையிலிருந்தும் வரலாம். எஸ். புதூருக்கு வடக்கில் 1 A.e. தொலைவு.

பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட மூர்த்தி இவராதலின் "கோகிலேசுவரர்" என்று பெயர் வந்தது.

திருக்கொளம்பியம் - திருக்கோழம்பம் என்று திரிந்து அதுவும் மாறி இன்று வழக்கில் திருக்குழம்பியம் என்றாயிற்று.

அம்பிகை பசு வடிவங்கொண்டு, சாபநீக்கங்கருதிப் பல தலங்களையும் வழிபட்டவாறே திருவாவடுதுறைக்கு வரும்போது இத்தலத்தையும் அடைந்து வழிபட்டதாகத் தலவரலாறு கூறுகிறது. இந்திரன் வழிபட்ட தலம்.

இறைவன் - கோகிலேசுவரர், கோழம்பநாதர்.

இறைவி - சௌந்தர நாயகி.

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.

கிழக்கு நோக்கிய சந்நிதி. எதிரில் குளம். மகாமண்டபத்தில் நடராச சபை உள் பிராகாரத்தில் விநாயகர், அப்பர், முருகன், கஜலட்சுமி பைரவர் சந்நிதிகள்.

கோஷ்டத்தில் முறையான மூர்த்தங்களோடு நடராசரும், சட்டை நாதரும் பிடசாடனரும் காட்சியளிக்கின்றனர். மூலவரின் ஆவுடையாரில் பசுவின் குளம்பு காணப்படுகிறது. இக்கோயிலின் உற்சவ மூர்த்திகள் வேறு கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நூலின் முன் பதிப்பில், இக்கோயிலைக் காப்பாற்ற எவருக்கு என்று மனம் வருமோ என்று முன் பதிப்பில் மனமுருகி எழுதியிருந்தோம். அதன் பலன் தற்போது, திருவாவடுதுறை தருமபுரம், சூரியனார் கோயில், திருப்பனந்தாள் காசிமடம் முதலிய குரு மகாசந்நிதானங்களின் அருள் முன்னிலையில் 24.8.1998ல் திருப்பணிகள் தொடங்கப் பெற்று, நிறைவுபெற்று அக்குருமகாசந்நிதானங்களின் அருள் முன்னிலையிலேயே 22.3.2000 அன்று மகாகும்பாபி« 7கம் நடைபெற்றுள்ளது. இத்திருப்பணிகளை ஏற்றுச் செய்துள்ள கோவை - எல்.ஐ.சி. காலனி 14.ஏ எண்ணில் வாழும் அருட்செல்வர் திரு. ஆர். வசந்தகுமார் மற்றும் அவருக்குத் துணையிருந்தோர் அனைவரையும் நெஞ்சாரப் போற்றுகின்றோம்.

கோயில் குருக்கள் திருவாவடுதுறையில் சந்நிதி வீதியில் வசிக்கின்றார். அங்கிருந்து வந்து - காலை வேளையில் பூஜை செய்துவிட்டுப் போகிறார். ஆதலின் யாத்திரையாக வருபவர்கள் முன்கூட்டியே நாளும் நேரமும் தெரிவித்துவிட்டுச் செல்வதே நல்லதாகும்.

பராந்தகனின் மனைவி செம்பியன்மாதேவியால் கட்டப்பட் கோயில். இது தேரழுந்தூர் செயல் அலுவலரின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளது.

"நீற்றானை நீள்சடைமேல் நிறை வுள்ளதோர்

ஆற்றானை அழகமர் மென் முலையாளையோர்

கூற்றானைக் குளிர் பொழிற் கோழம்பமேவிய

ஏற்றானை ஏத்துமின் உம்இடர் ஏகவே". (சம்பந்தர்)


"முன்னை நான் செய்த பாவமுதலறப்

பின்னை நான் பெரிதும் அருளப் பெற்றது

அன்னமார் வயற் கோழம்பத்து உள்ளமர்

பின்னல் வார்சடையானைப் பிதற்றியே". (அப்பர்)


-இல்லமயல்

ஆழம்ங் கென்ன அறிந்தோர் செறிந்தேத்துங்

கோழம்பம் வாழ்கருணைக் கொண்டலே. (அருட்பா)

அஞ்சல் முகவரி-

அருள்மிகு. கோகிலேசுவரர் கோழம்பநாதர் திருக்கோயில்.

திருக்கொழம்பியம் - எஸ்.புதூர் அஞ்சல்

(வழி) கும்பகோணம் --612 205

திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

















 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருநல்லம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருவாவடுதுறை
Next