Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண
ம் -3

ன்று புனிதமான நாள். பண்டிகை நாள். தெய்வத்தை வழிபடுவதற்கு உகந்த நாள். ஆன்மீகம் நமக்கு எங்கனம் வாழ்வது எனச் சொல்லிக் கொடுக்கிறது. இதனை நமக்கு தெளிவாகச் சொன்னவர் ஆதிசங்கரர். எல்லோரிடத்திலும் இறைவனைப் பார்க்கும் மனப்பக்குவம் படிப்படியாக வரவேண்டும் என்பதற்காக ஆறுவிதமான வழிபாட்டினை கொடுத்திருக்கிறார். இதனால் இவருக்கு ஷண் மத ஸ்தாபகர் எனப்பெயர்.

எந்த விதமான நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கும் முன் இடையூரின்றி நடக்க பிள்ளையார் பூஜை தேவை. இவர் விக்னத்தை மட்டும் போக்குபவர் அல்ல. உலகிலேயே மிகச் சிறந்த வழிகாட்டி நூல் மஹாபாரதம். மஹாபாரதத்தில் இல்லாதது வேறு எங்கும் இல்லை. ஒவ்வொரு பருவத்விலும் சிறந்த கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதில் 18 பருவாக்கள் உண்டு. மகாபாரதம் கரும்பு. '' பருவா '' என்ற சொல்லுக்கு மூன்று வித பொருள். 1. அமாவாசை, பௌர்ணமி போன்ற பருவகாலங்கள், 2. அத்தியாயங்கள், 3. கரும்புக் கணு. மஹாபாரதத்தில் ஒவ்வொரு பர்வாவிலும் உயர்ந்த ரஸம் உண்டு. மனிதன் எங்கனம் இருக்க வேண்டும், அவன் சிந்தனை எப்படி இருக்க வேண்டும், எங்கனம் எளிமையாக பெருந்தன்மையோடு, அன்போடு, தயவோடு இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் உதாரண நூல் பாரதம். இதனை வியாஸர் சொல்ல, தனது கொம்பு ஒன்றினை ஒடித்து எழுதி அருள் பாலித்தவர் விநாயகர். வாழ்க்கைக்குத் தேவையான ஒரு நூலை நமக்குத் தந்தார் வினாயகர்.

அடுத்தது சூரியன்

ம்பாளுக்கு பௌர்ணமி போன்ற நாட்களில் பூஜை மிகவும் விசேஷம். (கிளையின் மேல் இருந்து அடிக்கிளையை வெட்டிய ஒருவன் அம்பிகையின் அருளால் மகாகவி காளிதாஸனாக மாறினார். அமாவாசையை பௌர்ணமி எனச் சொல்லிய அபிராமி பட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக ஆக்கி அருள் செய்திருக்கிறாள்.) அதிகமான «க்ஷத்திரங்ளில் பாலாம்பிகை, தருமாம்பாள், ஞான ப்ரஸுதாம்பாள் என பல பெயர் கொண்டு அருள் செய்து வருகிறாள் அம்பாள்.

தூணில் இருக்கிறேன் என்று சொன்ன பக்தனுக்காக தூணில் காட்சியளித்தார் பெருமாள்.

முருகன் பெருமையினை அதிக தலங்களில் பார்க்கிறோம். ஞானத்தை வழங்கக் கூடியவர். தந்தைக்கே உபதேசித்த பெருமை இவருக்கு உண்டு. ஆதிசங்கரர் திருச்செந்தூருக்குச் சென்று முருகப் பெருமானை பக்தியுடன் வழிபடுவோர்களின் கஷ்டம் வந்த நிலை தெரியாமல் போய் விடும் என்பதற்கு இந்த கடல் அலைகளே உதாரணம் என அருளியுள்ளார்.

நல்லதைச் செய்யக் கூடியவர் சங்கரர். சம் கரோதி இதி சங்கர : மனதில் கஷ்டம் வரும் போது ஈஸ்வரனை நினைக்கிறார்கள். ஞானம் பெறுவதற்கு ஈஸ்வரனை நாம் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் ஆதிசங்கரர்.

பக்தி செய்வது எல்லோருக்கும் தேவை. இதனால் தான் ஞானம் பெறமுடியம். தினமும் ஆழ்வார், நாயன்மார் பாடியதை அர்த்தம் தெரிந்து கொண்டு பாடவேண்டும். ஸ்வாமியே அடியெடுத்துக் கொடுத்த பாடல்கள் பல உண்டு.

ஆவணி மூலம் இன்றும் சிறப்பாக மதுரையில் கொண்டாடப்படுகிறது. ஒரு கிழவியிடம் புட்டு பெற்று அவளுக்காக இறைவன் மண் சுமந்தார் என்பது வரலாறு. ஈஸ்வரன் எல்லாரிடத்திலும் இருக்கிறார் என்பதை விளக்கவே இந்த வரலாறு. காஞ்சீபுரத்தில் கண் இழந்த சுந்தரர்க்கு கண் அளித்ததாக வரலாறு உள்ளது. எந்த உயர்ந்த நிலையினையும் பக்தியும் அடக்கமும் இருந்தால் அடைய முடியும். அவரவர் இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லி, ஸம்ப்ரதாயமான மத சின்னத்தை நெற்றியில் அணிந்து மனதில் நிறைவு பெற்று பெருமையுடன் வாழ ஈஸ்வர சிந்தனையுடன் அவன் பாடல்களைப் பாடியும், நற்பணிகளுக்கு ஒத்துழைத்து இறை அருளைப் பெற்று வாழ ஆசீர்வதிக்கிறோம்.

(04-02-96 பாண்டிச்சேரி அரியான்குப்பம் மாரி அம்மன் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் ஆற்றிய உரையின் சாரம்)


Previous page in  அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is அனுக்கிரஹ பாஷணம் - 2
Previous
Next page in அருளுரை - 39 அனுக்கிரஹ பாஷணங்கள்  is  அனுக்கிரஹ பாஷணம் - 4
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it