கும்பாபிஷேக நாயகன் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம் ஹைத்தராபாத் இந்த நகரத்தின் மறுபகுதிக்கு சிகந்தராபாத் என்று பெயர் இந்த இரண்டு நகரங்களையும் ஒரு ஏரி இணைக்க

கும்பாபிஷேக நாயகன்

ஆந்திர பிரதேசத்தின் தலைநகரம் ஹைத்தராபாத். இந்த நகரத்தின் மறுபகுதிக்கு சிகந்தராபாத் என்று பெயர். இந்த இரண்டு நகரங்களையும் ஒரு ஏரி இணைக்கிறது. ஒரு காலத்தில் நவாப்பின் ஆளுகைக்குள் இருந்தது இந்த நகரம். இந்தியாவில் இணைய மறுத்த இந்த நவாப்பினை இந்திய அரசு படையைக் கொண்டு இணைய வைத்தது என்பது வரலாறு.

சிகந்திராபாத்தில் ஸ்ரீ மடம் கிளை மடம் பல ஆண்களாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். சுமார் 10 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை தினமும் நடந்து வருகிறது. இந்த ஆஞ்சநேயர் மிகுந்த வரப்பிரசாதி என்று பக்தர்களால் போற்றப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார். நாளுக்கோரு அலங்காரமாக கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றார். இந்த கிளை மடத்தில் இரண்டு பெரியவர்களும் மஹா திரியுரசுந்தரி ஸமேத சந்திர மௌளீஸ்வரர் பூஜை பீடத்துடன் தங்கி மக்களுக்கு பூஜையைக் காணும் பாக்கியம் அளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள்.

இன்றய தினம் இங்கு வந்து 7 தினங்கள் ஆகிவிட்டன. வஸந்த நவராத்திரி விழா நடந்து கொண்டிருக்கிறது. நவாவர்ண பூஜையும் வழக்கமாக நடக்கும் நித்திய பூஜையும் கண்பெற்ற பயனை மக்கள் அளித்த மன நிம்மதி பெறும் வகையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. காலையில் பெரியவர்கள் பூஜை செய்ய மாலையில் பெரியவர்கள் பூஜை செய்கிறார்கள். ஒருவர் பூஜையில் ஈடுபட்டிருக்க மற்றவர் மக்களுக்கு தரிசனம் அளித்து சுற்றி உள்ள கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இதனால் ஸ்ரீமடம் வந்து தரிசிக்கும் வாய்ப்பு இல்லாதவர்களும் அந்தந்த பகுதிகளில் பெரியவர்கள் வர வந்து தரிசனம் செய்து அனுக்கிரஹம் பெருகின்றனர்.

இன்று ஒரு நல்ல நாள். காலையில் ஸ்ரீ பால பெரியவர்கள் ஐஸ்மானியா பல்கழைக்கழ வளாகத்தில் உள்ள ஞான சரஸ்வதி ஆலயத்திறகு விஜயம் செய்தார்கள். பல்கலை கழகத்திற்கு தேவையான ஆலயம் கல்வி தெய்வ மரம் சரஸ்வதியின் ஆலயம். படிப்பு மட்டும் அளிக்காமல் ஞானத்தையும் மாணவர்கள் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு ஞான சரஸ்வதி தேவியை இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்கள். இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை பால பெரியவர்கள் தங்களின் திருக்கரங்களால் நிகழ்த்தி அருளாசி வழங்கினார்கள். அவர்கள் பேசிய போது மக்கள் பண்டிதர்களாக மட்டும் இருந்தால் போதாது. மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். இத்தகைய மனப்பான்மையினை இந்த வளாகத்தில் இருக்கும் சமுதாயம் பெற வேண்டும் என்பதற்கென ஞான சரஸ்வதி ஆலையம் எழுப்பப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது பாராட்டத்தக்கது என்றார்கள். ஹனுமானுக்கு நவவ்யாகரண பண்டிதன் என்ற பெயர் உண்டு. சூரியனிடம் மிகுந்த பக்தி சிரத்தையுடனும் வினையத்துடனும் எல்லா கலைகளையும் கற்றவர் ஹனுமான். இவர் சுக்ரீவனுக்காக ராமனிடம் சென்று பேசிய விதத்தைக் கண்டு வியந்த ராமன் யார் கொலோ இச் சொல்லின் செல்வன் என்று பாராட்டியதற்காக கம்பன் சொல்லுவான். தொண்டுக்கு இலக்கணமாக விளங்குபவர் ஹனுமான் இவரை வணங்கினால் எட்டுவித ஐஸ்வர்யமும் கிடைக்கும். புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா. அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மாஜத் பவேத் என்று ஹனுமன் ஸ்லோகம் சொல்கிறது. ஹனுமனை நினைக்க புத்தி கூர்மையாகும். உடல் பலமும் உள்ள பலமும் கிட்டும். புகழ் உண்டாகும். அஞ்சுவதற்கு அஞ்சுகின்ற தைர்யம் ஏற்படும். பயமற்ற தன்மை வந்து சேரும். நோயற்ற வாழ்வு அமையும். சோம்பல் அற்ற தன்மை உண்டாகும். நல்ல பேச்சுத் திறன் கிட்டும் என்று பட்டியிலிட்டுக்

காட்டுகிறது. இந்த ஸ்லோகம் ஹனுமானை நினைப்பவர்கட்கு கிட்டக் கூடிய இந்த ஸ்லோகம் ஹனுமானை நினைப்பவர்கட்கு கிட்டக் கூடிய இந்த எட்டு குணங்களும் கல்வி கற்கும் சமுதாயத்திற்கு அவசியம் தேவை என்று எண்ணி இந்த வளாகத்தில் ஹனுமானை பிரதிஷ்டை செய்துள்ளனர். ஹனுமானுக்கு புத்தி மதாம் வரிஷ்டம் என்று ஒரு அடைமொழியும் உண்டு. போர்க் களத்தில் இந்திர ஜித்தின் பாணத்தால் யாவரும் கட்டுண்டு மயங்கி கிடைத்தவர் விபீஷணனைப் பார்த்து ஹனுமார் பிழைத்திருக்கின்றாரா என்று கேட்கிறார்.அரசனான சுக்ரீவனனையோ நாயகனாகிய ராமனையோ விசாரிக்காமல் ஹனுமானைப் பற்றி ஏன் விசாரிக்கிறீர்கள் என்று ஜாம்பவானை விபீஷ்ணன் கேட்க ஜாம்பவான் ஹனுமான் இறந்து யாவரும் பிழைத்திருந்தாலும் இறந்தவர்களே. மாறாக ஹனுமான் பிழைத்திருந்து நாங்கள் யாவரும் இறன்திருந்தாலும் பிழைத்தவர்களே என்பதால் தான் ஹனுமானை விசாரித்தேன் என்று விடையளிப்பார். அவரின் உத்தரவு பேரில் சஞ்ஜீவி மலையில் உள்ள மூலிகைகளை கொணரச்சென்று சஞ்ஜீவி மலையையே கொணர்ந்து யாவரையும் காப்பாற்றினார் என்பது இதிஹாசம். வெட்டிக் கொண்டுவா என்னில் கட்டிக் கொண்டுவந்தான் என்பதோர் பழமொழிக்கு காரணமாக இருந்தார் ஹனுமான். சஞ்ஜீவி மலையை கொண்டுவந்த வடிவிலே இங்கு ஹனுமனை பிரதிஷ்டை செய்துள்ளார். மூர்த்தி மிகவும் சிரியது. ஆனால் இவனின் கீர்த்தியோ மிகவும் பெரியது. தொண்டின் நாயகன், தன்னலமற்ற தன்மையுடையவன். தன்னுடைய நாதனின் புகழ் பாட அருள் செய்பவன் என்ற குணமெல்லாம் பெற்ற ஹனுமான் இந்த வளாகத்தில் கோயில் கொண்டிருப்பது மிகவும் நியாயமானது தானே. இந்த கோயிலுக்கும் கும்பாபிஷேகம் பால பெரியவர்கள் செய்து வைத்தார்கள்.

ராமபிரானுக்கு ஒரு சிறப்பு உண்டு. தான் முடிசூடிக் கொள்வதற்கு முன்பு தன்னைச் சார்ந்தவர்களை அண்டியவர்களை முடிசூட்டிவைத்தான். இதனை கம்பன் நாட்டொரு கருமம் செய்தான். காட்டொரு தர்மம் செய்தான் எனப்போற்றுவான். தம்பிக்கு அரசு களித்து அடைக்கலம் புகுந்த சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் முடிசூட்டி பின்புதான், தான் முடிசூடிக் கொண்டான். காலம் மாறினாலும் காட்சி மாறாது என்பதை நிருபிப்பதுபோல ஹனுமன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துவைத்து விட்டு ராமன் வழிபட்டு வணங்கிய கேசரிகட்டா ராமலிங்கேஸ்வர ஸ்வாமி ஆலைய கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தார்கள் ஸ்ரீ பால பெரியவர்கள். முடிவில் தனக்கு முடிசூடிக்கொண்ட ராமன் போன்று பரமேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ பால பெரியவர்கள் தன்னுடைய கும்பாபிஷேகத்தை கடைசீயில் நிறைவேற்றிக் கொண்டதில் வியப்பு ஒன்றும் இல்லையே. மிகுந்த மலைப்பகுதி கேசரிகட்டா. ராவணனைக் கொண்று பிரமஹத்தி தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் பரமேஷ்வரனை பிரதிஷ்டை செய்து ராமன் அயோத்தி திரும்பும்முன் வழிபட்டார் என தலபுராணம் சொல்கிறது. இந்த மலையில் பல லிங்க மூர்த்திகள் இருந்து வழிபடுகின்றன. ஸ்ரீ பால பெரியவர்கள் பரமேஸ்வரனே மலையாக காட்சிதரும் திருவண்ணாமலையை நினைவுகூர்ந்து இங்கு மலையில் ஈஸ்வரன் கோயில் கொண்டுள்ளதையும் ஒப்பிட்டு பொதுவாக மலைமீது ஈஸ்வரன் இருப்பது குறைவே. இதற்கு காரணம் மலைகட்கு எல்லாம் தலையான கயிலையில் தான் நிறந்தரமாக வசிப்பதே என்பதையும் கோடிட்டு காட்டி அருள்ளாசி வழங்கினார்கள்.

இன்று கும்பாபிஷேக தினமாகமாறி வரலாறு படைத்துவிட்டது.

மேலும் வரலாறு படைக்கும் தினங்கள் வரும். தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

இராமாயணம்

17-4-2002