அஷ்டவிநாயகர் இந்தியாவின் மேற்குப்பகுதிகளிலும் மஹராஷ்டரத்திலும் காணாபத்யம் மிகவும் ஆழமாக வேறூன்றியுள்ளது லோகமான்யதிலகரின் பிரசாரத்தால் கணபதி வழிபாட

அஷ்டவிநாயகர்

இந்தியாவின் மேற்குப்பகுதிகளிலும் மஹராஷ்டரத்திலும் காணாபத்யம் மிகவும் ஆழமாக வேறூன்றியுள்ளது. லோகமான்யதிலகரின் பிரசாரத்தால் கணபதி வழிபாடு காணாபத்யத்தை அதிகப்படுத்தி மக்களிடத்தில் கணபதி வழிபாட்டின் உணர்வினை மீண்டும் வெளிக்கொணரப்பட்டது. பூனாவினைச் சுற்றிலும் கணபதி வழிபாட்டின் முக்கிய தலங்கள் உள்ளன. பக்தர்கட்கு இந்த எட்டு தலங்களின் தரிசனம் என்பது வாழ்வின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.

ganapati

ஸ்ரீ கிரிஜாத்மஜா- லென்யாத்ரி

பூனாவிற்கு வடக்கில் சற்று தூரத்தில் "குக்டி" நதிக்கரையில் லென்யாத்ரியில் உள்ள கணபதி கோயிலில் உள்ள மூர்த்தி "கிரிஜாத்மஜ"என்று அழைக்கப் படுகிறார். முன்னால் ஒரு சபா மண்டபத்துடன் கூடியுள்ள இந்த கோயில் முழுவதும் ஒரு கல்லில் குடைந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்குச் சென்று வழிபட 283 படிகள் மேல் ஏறிச் செல்வது என்பதே ஒரு சுவையான அனுபவம்.

ஸ்ரீ மோரேஸ்வரர் - மயூரீஸ்வரர் - மோர்காம் .

பூனாவிலிருந்து 64 A.e. தொலைவில் உள்ள பாராமதி மாவட்டத்தில் உள்ள மயில்களின் கிராமம் என்று அழைக்கப்படும் நதிக்கரையில் அமைந்து உள்ளது. இங்கு கணேசர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். கண்களிலும், தொப்புளிலும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. சித்தி - புத்தி இருவரும் இரண்டு பக்கங்களிலும் அமர்ந்து உள்ளனர். சாதாரணமாக எலிதான் கணேசருக்கு வாகனமாக இருப்பினும், இந்தத் தலத்தில் மயில் வாகனமாக அமைந்துள்ளது. ஆகையால் இங்குள்ள மூர்த்திக்கு மயூரேஸ்வரர் (மோரேஸ்வரர்) என்று பெயர் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ பல்லாலேஸ்வரர்- பல்லி

கோபோலியிலிருந்து 40 கி.மீ.தொலைவில் பாலியில் ஒரு குன்றின் அடிவாரத்தில் பல்லாலேஸ்வரனின் பிரதான சன்னதி அமைந்துள்ளது. இந்த குன்றின் உச்சியில் சாஸகட் கோட்டை உள்ளது.

ஸ்ரீ சிந்தாமணி - தேவூர்

பக்தர்களால் வழிபடப்படும் சிந்தாமணி விநாயகர் கோவில் முல - முத்தா நதியின் கரையில் பூனாவிலிருந்து 23 A.e. தொலைவில் உள்ளது. இங்குள்ள சிந்தாமணி விநாயகர் மிகவும் வரப்ரஸாதி.

ஸ்ரீ விக்னேஸ்வரர் - ஒஜார்

பூனா மாவட்டத்தில் ஜீன்றார் தாலுக்காவில் குக்குடி நதிக்கரையில் ஒஜார் கிராமத்தில் விக்னேஸ்வரர் ஆலயம் உள்ளது. ஜீன்னாரிலிருந்து 8 A.e.

தொலைவில் உள்ளது. கிரேனைட் கல்லில் செதுக்கப்பட்ட அழகு மிக்க விக்ரகம். ரூபி கற்கள் கண்களிலும் நெற்றியில் வைரக்கல்லும் பதிக்கப் பட்டுள்ளது.

ஸ்ரீ சித்தி விநாயகர்-

மும்பாய் - சென்னை மார்க்கத்தில் டௌண்ட் நிலையத்திற்கு 13 A.e. தொலைவில் உள்ள சித்தாதேக் கிராமத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்குள்ள கணபதி ஸ்வயம்பூ தானாக தோன்றியவர் என்றும் விஷ்ணுவால் பூஜிக்கப்பட்டவர் எனவும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் அருகில் பீமா நதி ஒடுகிறது.

ஸ்ரீ வரத விநாயகர் -

மும்பாய் பூனே நெடுஞ்சாலை மார்க்கத்தில் கொபோலியிருந்து 40 A.e. தொலைவில் உள்ள பாலி கிராமத்தின் ஒரு சிறிய பகுதியில் உள்ள கணேசருக்கு பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வரம் அளிப்பவர் என்பதால் வரத விநாயகர் என்று பெயர். இந்த விக்ரகம் ஒரு குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. எட்டு முக்கிய தலங்களுடன் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் இந்த விநாயகரையும் தரிசித்து அருள் பெறுகின்றனர்.

ஸ்ரீ மஹாகணபதி - ரஞ்சன்காம்.

பேஷ்வா ராஜா மாதவராவ் அவர்களால் கட்டப்பட்ட மஹாகணபதி கோயில் பூனாவில் இருந்து 50 A.e. உள்ள உருலியிலிருந்து 16 A.e. தூரத்தில் உள்ள ரஞ்சன்காம் கிராமத்தில் உள்ளது. மக்கள் இந்தக் கோயிலுக்கு தரிசனத்திற்காக திரளாகச் செல்கின்றனர். நடுப்பகலில் சூரியனின் கிரணங்கள் இந்த மூர்த்தியின் மீது வீழ்வது ஒரு தனிச்சிறப்பாகும்.