அப்பலய்யகுண்டா ப்ரஸன்ன வேங்கடேசர்
திருப்பதி சாலையில் திருச்சானுர் பிரிவில் அப்பலய்ய குண்டா என்ற சிறிய ஊரில் ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் கொண்டுள்ளனர். பெயர்ப்பலகை காணும் இடத்திலிருந்து சுமார் 7 A.e தொலைவில் உள்ள சிறிய ஊரில் அமைந்துள்ளது. மிகவும் பராமரிக்கப்பட்டு வருவது கண்டு வியக்காமல் இருக்க முடியாது. பகவானின் பணத்தைக் குண்டலத்தில் புதைத்து வைக்க, பின்னர் அதனை உலகுக்கு காட்டி பக்தர்களுக்கு அபயம் அளித்த மூர்த்தியே இக்குறையும் ப்ரஸன்ன வேங்கடேசர் என்று அறிகிறோம். நாராயண வன்த்தில் கலாயாண வேங்கடேசனைக் காட்சி அளிக்கிறேன் என்று பக்தருக்கு அபயம் அளித்த பெருமாளும் இவரே.
கருடாழ்வாரை வணங்கிப் ப்ரதான ஸந்நிதிக்குள் சென்றால் வழியில் ஆழ்வார்கள், ராமானுஜர், விஷ்வக்சேனர் ஆகியோர் எழுந்தருளி இருப்பதை தரிசிக்கிறோம். மூலவராத இங்கு உறையும் ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாள் வராத முத்திரையுடன்தான் ஸேவை தருவார். இங்கு அபயம் அளித்த மூர்த்தியாதலால் அபயஹஸ்தத்தோடு ஸ்ரீ வரதராஜரைப் போல் தோற்றம் அளிப்பது மிகவும் ஸ்வாரஸ்யமான விஷயம். உருவத்தில் திருமலை வாழும் வேங்கடாஜலபதியை நம் கண் முன் இவர் கொண்டு வந்து நிறுத்துகிறார். அழகான வஸ்த்ரம், புஷ்பம் சார்த்தி நின்ற திருக்கோலத்தில் நினைவைவிட்டு நீங்காத தரிசனம்.
தனி ஸந்நிதியில் தாயார் அலர்மேல் மங்கை கோவில் கொண்டு கம்பீரமாக ஸேவை ஸாதிக்கிறார். மூலவராகவும், உற்சவராகவும், ஆண்டாள் நாச்சியாரும் பீடம் ஒன்றின்மேல் நின்றவாறு உயர்ந்து காட்சி அளிக்கிறார். ஒங்கி உலகளந்த உத்தமனை ஆண்டாள் இங்கு நினைவு கூர்ந்திருக்கலாம். உற்சவர் ஸ்ரீ ப்ரஸன்ன
வேங்கடேசர் அபயஹஸ்தத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராக எழில் பொங்கக் காட்சி அளிக்கிறார். மற்றும் ஸந்நிதியில் போக ஸ்ரீநிவாசரும், சக்கரத்தாழ்வாரும் உள்ளனர். ரேணிகுண்டா போகும் வழியில் பூடி என்ற ரயில் நிலையத்தில் இறங்கினால் இக்கோவிலை அடையலாம். அவ்வளவாகப் பிரபலம் அடையாத கோவிலாக இருந்தாலும் பெருமாள் ஸேவை மிகவும் அற்புதம் என்றே கூற வேண்டும்.