திருமுக்கூடல் அப்பன் வேங்கடாசலபதி
செங்கற்பட்டிலிருந்து 16 A.e. தூரத்தில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள பழைய சீவரம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்திலிருந்து வெகு அருகில் உள்ளது முக்கூடல் திருக்கோவில். சக்தி சந்தியம்மன் என்ற எல்லைக் காவல் தெய்வத்தின் ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ளது. இது மிகவும் பழமையான ஆலயம் என்று நுழைந்தாலும் காணும் யாளித் தூண்களைக் கொண்டு அறிகிறோம். பல்லவர் காலத்து வேலைப்பாடு அமைந்த பல கற்சிலைகளும் உள்ளன. கல்மண்டபம் ஒன்றும் உள்ளது. இக்கோவிலை காலை 7 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை
4 மணி முதல் இரவு 7 மணி வரை வரையிலும் திறந்திருக்கும் எந தெரிகிறது. திருப்பணி வேலைகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இங்குப் பகவான் த்ரிமூர்த்தி ஸ்வரூபமாகக் காட்சி அளிப்பதாக ஐதீகம்.
செய்யாறு, பாலாறு, வேகவதி என்ற மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் அமைந்தால் இந்தத்தலம் முக்கடல் எனப் பெயர் பெற்றது. விமானம் ஸ்ரீரங்கம் போன்று சயன விமானம். முலஸ்தானத்தில் நெடிது உயர்ந்த கோலத்தில் ஜடையுடன் சிவ ரூபத்தைக் காட்டி, வலது கரத்தில் புஷ்ப மேந்தி ப்ரும்ம ஸ்வரூபத்தை உணர்த்தி, சங்கு சக்ரதாரியாக விஷ்ணு ஸ்வரூபியாக இந்த மூலவரான வேங்கடேசர் இத்திருத்தலத்தில் முதலில் கிடந்த வண்ணர் அரங்கனாகத்தான் இருந்தாராம் ஏனென்றால் ஆற்றின் கரையில் அமைந்த தலமல்லவா.
ஆனால் தொண்டைமான் என்ற அரசனின் மைந்தன் வேண்டுகோளுக்கு இணங்க, நின்ற கோலத்தில் வேங்கடனாகக் காட்சி அளிக்கத் தொடங்கினார் என்கிறது புராணம். வேங்கடமலை காட்சி அளிக்கத் தொடங்கினார் என்கிறது புராணம். வேங்கடமலை ஸ்ரீநிவாசர் தம் ஸந்நிதியில் தனியாக எழுந்தருளியிருக்கும், சக்கரமும், சங்கும் உறுதிப்படுத்துகின்றன. மூலவரோடு மார்க்கண்டேய மஹரிஷிகளும், பூதேவி நாச்சியாரும் உள்ளனர். இது நமக்கு திருவிண்ணகர் என வழங்கும் உப்பிலியப்பன் கோவிலை நினைவுபடுத்துகிறது. இது தென்கலை ஸம்ப்ரதாயம் கடைபிடிக்கும் கோவில்.
உற்சவ மூர்த்தியாக ஸ்ரீநிவாசர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திகழ்கிறார். எழில் ததும்பும் மூர்த்திகள் அவர்கள். தாயார் அலர்மேல்மங்கையும் உற்சவராக இங்கேயே உள்ளனர். இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் அபய ஹஸ்தரத்துடன் காட்சி அளிக்கிறார். ஸந்நிதியில் ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகியோரின் உற்சவ மூர்த்திகளும் உள்ளனர். பெருமாள் ஸந்நிதியை ஒட்டியே தாயார் அலர்மேல் மங்கை ஸந்நிதி உள்ளது. அங்கு இவர் மூலவராக ஸேவை தருகிறார். இவர் ஸந்நிதியில் கருமாணிக்கப் பெருமாள் என்ற மற்றோரு உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி,
பூதேவி ஸமேதராக உள்ளார்.
தனி ஸந்நிதிகளில் ஆஞ்சனேயர், ஆழ்வார்கள், ராமானுஜர், விஷ்வக்சேனர்
உள்ளனர். ஆண்டாள் நாச்சியாருக்கும் தனி ஸந்நிதி உள்ளது. நின்ற வண்ணத்தில் தனியாகக் கருமாணிக்கப் பெருமாள் ஸேவை ஸாதிக்கிறார்.