வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள் நாச்சியார் கோயில் ஸ்ரீநிவாசர் கும்பகோணத்திலிருந்து 9 A e தொலைவில் திருவாரூர் மார்த்தத்தில் அமைந்த

வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள்

நாச்சியார் கோயில் ஸ்ரீநிவாசர்

கும்பகோணத்திலிருந்து 9 A.e. தொலைவில் திருவாரூர் மார்த்தத்தில் அமைந்துள்ள திவ்யதேசம் இது. திருநறையூர் என்றே மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருப்பதி. புராணத்தில் சுகந்த வனம் என்றழைக்கப்பட்ட இதனை ஸித்தி க்ஷேத்திரம் என்றும் கூறுவர். மேதாவி என்ற மாமுனிவரின் மகளாகத் திருமகள் வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் தோன்ற, அவரைப் பகவான் சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன். புருஷோத்தமன், வாசுதேவன் என்ற

ஐந்துருக்கொண்டு மணந்து கொண்ட தலம் இது. இந்தத் திருமணம் நிகழக் கருட பகவான் பெரிதும் உதவியாக இருந்தால் அவருக்கு இங்கு ப்ரதான்யம் அதிகம். இந்தத் தலத்து இறைவனைப் ப்ரும்மா, இந்திரன், சூரியன், வாயு, ஆகியோர் வணங்கியுள்ளனர். இங்குதான் சிவ பெருமானைப் பீடித்த ப்ரும்மஹத்திதோஷம் நீங்கியதாம்.

இராஜகோபுரம் 5 நிலைகளுடன் நம்மை அழைக்கிறது. நுழைந்த உடன் ப்ராகார மண்டபம் மிகப் பெரியதாக உள்ளது. 18 பெரிய கல்தூண்கள் அடங்கியது இது. இங்கு புறாக்களின் ஆரவாரம் மிகுந்து காணப்படுகிறது. ஸந்நிதி நுழைவாயில்

இருபுறமும் காளிங்க நர்த்தன கண்ணன் காட்சி அளிக்கிறார். ராமானுஜர் ஸந்நிதியும் திருவேங்கடமுடையான் மூலவராகத் தனியாக உள்ளப்ராகார ஸந்நிதி. இங்குதான் உற்சவர் ஸ்ரீநிவாசர் மார்கழி, பங்குனி மாதத் திருவிழாக்களில் தாயார் வஞ்சுளவல்லியுடன் எழுந்தருளி ஸேவை ஸாதிக்கிறார். ஸ்ரீராமநவமியின் போது அவர் ராமபிரான் ஸந்நிதியில் காட்சி தருகிறார் என்றும் அறிகிறோம்.

சிறயவராகக் காட்சி அளிக்கும் ஸந்நிதிக்கருனை வணங்கி பெரிய கருடன் எழுந்தருளியுள்ள ப்ரதான ஸந்நிதிக்குச் செல்ல வேண்டும். கோபுரத்தில் வண்ணச் சிற்பங்களாக பரமபதநாதன், ஸ்ரீராமர், ஸீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் உள்ளனர். வாலி வதைப் பிராகாரத்தில் வலம் வரும் போது தசாவதார வர்ண சித்திரங்கள் தென்படுகின்றன. தனி ஸந்நிதிகளில் யோக நரஸிம்மர், வேணுகோபாலன், ஆஞ்சநேயர், திருக்கண்ணபுரம், சௌரிராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஸமேத காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருவங்கத்து ஸ்ரீரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் உள்ளனர். பெரிய திருமேனியை உடையவராக விக்னேஷ்வரர் இருக்கிறார். மணவாள மாமுனிகள் ஸந்நிதியில் ஸ்ரீ வராஹப் பெருமாள் எழுந்தருளி உள்ளனர். ராமபிரான் தனி ஸந்நிதியிலுள்ளார்.

108 திவ்யதேசப் பெருமாள்களையும் வெண்கலத்தில் வடித்து அழகான மூர்த்திகளைக் கண்ணாடி அறைபோன்ற அமைப்பினுள் வைத்திருக்கும் பாங்கு வியக்கத்தக்கது. ஆனால் இங்கு 108 என்று எண்ணிக்கையைத் தேடக்கூடாது. கிடந்த வண்ணர் அரக்கன் என்று ஒரே மூர்த்திதான். அவரையே எல்லா பள்ளிகொண்ட கோலத்தினராகக் கொள்ள வேண்டும். நாச்சியார் கோயில் என்ற இந்த ஊர் வெண்கள வளர்ப்புக்குப் பெயர் போனது. இந்த திவ்ய தேச விக்ரகங்களை ஒட்டி கிராமத்துத் தேவதையான பொன்னி அம்மன் அமர்ந்துள்ளார்.

ஒரு தனி அறையில் உற்சவ மூர்த்திகளாகப் பரமபதநாதன் யோக நரசிம்மர், வேணுகோபாலன், உடையவர், ராமானுஜர், ஆழ்வார்கள், ஸுதர்சனர், ஸ்ரீராமபிரான் ஸீதை, லக்ஷ்மணர், அனுமன் உள்ளனர். ஆண்டாள் தனி ஸந்நிதி கொண்டுள்ளார். ப்ரதான ஸந்நிதியில், கிழக்கு நோக்கி நெடிது உயர்ந்து நின்ற கோலத்தில், இரண்டே கரங்களுடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் என்கிற திருநறையுர் நம்பி ஸேவை ஸாதிக்கிறார். கரங்கள் இரண்டில் ஒன்றில் சங்கமும், மற்றொன்றில் சக்கரமும் ஏந்தி உள்ளார். அவருக்கு வலது புறம் ஸ்ரீ வஞ்சுளவல்லித் தாயார் நின்ற திருக்கோலத்தில் 9 கஜம் புடவையோடு ஒளி வீசும் ஆபரணங்கள் அணிந்து திருமணக் கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குத் தனித் தாயார் ஸந்நிதி இல்லை. பெருமாளோடு சேர்ந்தே இருப்பதால் இங்குத் தாயாருக்கு ப்ரதான்யம் அதிகம்.

நம்பிக்கை நாச்சியார் என்றும் அவரை அழைக்கின்றனர். ஸ்ரீநிவாஸப் பெருமாள் அவகாக தசாவதார மாலை அணிந்துள்ளனர்.

ஸ்ரீநிவாஸப் பெருமாள் மூலவருக்கு இடது புறம் ப்ரத்யும்னரும், அநிருத்தரும், புருஷோத்தமனும் வலப்புறம் சங்கர்ஷணர் என்ற பலராமரும் உள்ளனர். பெருமாளே வாசுதேவனாகக் கருதப்படுகிறார். பலராமரை அடுத்து ப்ரும்மாவும் நான்கு முகங்களுடன் காட்சி அளிக்கிறார். பஞ்ச வியூக ஸந்நிதி என்று இந்த ஸந்நிதி வழங்கப்படுகிறது. திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் இதே போன்று பஞ்சசசாரத்ய ஸந்நிதி உள்ளது. உற்சவர் ஸ்ரீநிவாஸர், வஞ்சுள்ளவல்லித்

தாயாரோடு உள்ளனர். சந்தான கிருஷ்ணன் உற்சவ விக்ரஹமும் ஸந்நிதியிலுள்ளது. மேதாவி மஹரிஷி தன் ஸந்நிதி கொண்டுள்ளார். அவர் புத்திரியாகக் பிறந்த ஸ்ரீதேவி பெருமாளை மணந்த ஸ்தலம் இது. பூமி தேவி பெருமாளை மணந்த இடம் உப்பிலியப்பன் கோவில், நீளா தேவி ஆண்டாளப் பிறந்து அரக்கனை மணந்த இடம் ஸ்ரீவில்லிப்புத்தூர். இது ஒரு சிறந்த ப்ரார்த்தனை ஸ்லமாக கருதப்படுவதால், திருமலை திருப்பதிக்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்களை இங்கேயே இவ்வூர் மக்கள் செய்து கொள்கின்றனர்.

பானுதத்தன் என்ற அரக்கனுக்குச் சாபம் இத்தலத்தில் நீங்கியது. A.H. மூன்றாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த கோச்செங்கட்சோழர் இந்தப் பெருமானைத் தொழுது பல வெற்றிகளைக் கண்டதால் கோவிலுக்குப் பல திருப்பணிகள் செய்ததாதகத் தெரியவருகிறது. திருமங்கை ஆழ்வார் பஞ்ச சமஸ்காரம் என்ற வைணவ தீட்சையை இத்தலத்தில் தான் பெற்றார். 110 பாசிரங்கள் இந்தத் தலத்துப் பெருமாளைப் பற்றி அவர்பாடி மங்களாசாஸனம் செய்துள்ளார். கோவிலில் நந்தவனம், வசந்த மண்டபம், மடைப்பள்ளி, யாகசாலை யாவும் உள்ளன. விமானம் ஸ்ரீநிவாச விமானம் என்றும் நீரால் நிரம்பி வழியும் பெரிய திருக்குளம் மணி முக்தா புஷ்கரிணி என்றும் வழங்கப்படுகின்றன. இது தவிர, ஸங்கரஷண, ப்ரத்யும்ன, அநிருத்த தீர்த்தங்களும் உள்ளன.

இனி தெற்கு நோக்கி ஸேவை தரும் ஸேவை தரும் கல்கருட பகவான் ஸந்நிதிக்கு வருவோம். பிரதி மாதமும் கருடன் ஸ்வாதி தீபவிழா நடப்பதற்காக கற்பலகை அறிவிக்கின்றது. இங்குக் கல்கருடன் மிகவும் புகழ் வாய்ந்தவராகத் திகழ்கிறார். மரத்தாலும், வெள்ளி, தங்க உலோகங்களாலும் ஆன வாஹனங்கள் மற்ற திவ்ய தேசங்களிலும், அபிமான ஸ்தலங்களிலும் உண்டு. ஆனால் இங்கு

மட்டும் தான் கல் கருடவாஹனம் உள்ளது. வியாழக்கிழமை கருடபகவானுக்கு உகந்த தினமாதலால் அன்று பக்தர்கள் திரளாக வருகின்றனர். மற்றும் கருடனின் நக்ஷ்த்திரமான ஸ்வாதி நன்னாளிலும் அப்படியே, வைனதேயன், பட்சிராஜன் என்று அழைக்கப்படும் கருட பகவானின் உடலில் 9 ஸர்ப்பங்கள் முறையே நெற்றி, இரு கண்கள், இரு செவிகள், இரு கைகள், இருகால்கள் உள்ளனவாம். அதனால் இவரைச் சேவித்தால் நவக்ரஹ தோஷபரிகாரம் ஸித்திக்கும் என நம்பப்படுகிறது.

கருட தரிசனம் பயக்கும் நன்மைகள் ஸந்நிதியில் எழுதப்பட்டுள்ளன. அவை

ஞாயிறு - நோய் அகலும்

திங்கள் - குடும்ப நலம் கிடைக்கும்

செவ்வாய் - தைரியம் ஏற்படும்

புதன் - எதிரிகள் மறைவு

வியாழன் - தோஷங்கள் நீங்கும்

வெள்ளி - செல்வம் கிட்டும்

சனி - கல்வியில் தேர்ச்சி பெறலாம்.