வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள் பாபநாசம் ஸ்ரீநிவாசர் கும்பகோணத்திற்கும், தஞ்சாவூருக்கும் இடையில் இருப்புப் பாதையிலேயே இந்த ஊ

வரமருளும் எழில் ததும்பும் அரசராகத் பெருமாளின் திருஸ்தலங்கள்

பாபநாசம் ஸ்ரீநிவாசர்

கும்பகோணத்திற்கும், தஞ்சாவூருக்கும் இடையில் இருப்புப் பாதையிலேயே இந்த ஊர் அமைந்துள்ளது. குடந்தையிலிருந்து சுமார் 14 A.e. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் கரையில் இருக்கிறது இத்தலம். இராஜகோபுரம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் யாவும் அமைந்த கோயில். திவ்ய தேசமான கபிஸ்தலத்திற்கு வெகு அருகில் உள்ள அபிமானஸ்தலம் இந்த ஊராகும்.

மூலஸ்தானத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியிருக்கின்றார். இவருக்குப் பாபவினாசப் பெருமாள் என்ற திருநாமங்களும் உண்டு. உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் திகழ்கிறார். தாயார் பங்கஜவல்லி தனி ஸந்நிதியில் கோயில் கொண்டுள்ளார். ஐயங்கொண்ட சோழ சக்கரவர்த்திக்கு இப்பெருமாள் அருள் புரிந்ததாகப் புராண வரலாறு கூறுகிறது. விமானம் பாபவிநாச விமானம் என்றும் புஷ்கரிணி புண்டரீக புஷ்கரிணி என்றும் அழைக்கப்படுகின்றன. விஜய நகர மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் இக்கோயில் பல திருப்பணிகளை கண்டுள்ளது. வைகாசி மாத ப்ரஹ்மோத்ஸவம் இங்கு விமரிசையாக நடைபெறுகிறது.

ஸ்ரீநிவாச தவ சரணம் சிந்தையாமி ஸம்ததம்

என்று பாபநாசம் ஸ்ரீ சிவன் கரஹரப்ரியா ராகத்தில் இயற்றிய பாடல் இவருக்காகத் தான் என்றே கூறும் வண்ணம் இப்பெருமாள் காட்சி அளித்து அருள் புரிகிறார்.