கல்யாணபுரம் ஸ்ரீநிவாசர்
தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வழியில் சுமார் 12Ae தொலாவில் உள்ள தலமிது. நடுக்கடை என்ற இடத்தில் கண்டியூரைத் தாண்டியதும் இறங்க வேண்டும். பேருந்தில் வந்தால், இறங்கும் இடத்திலிருந்து சுமார் 2A.e. தொலைவில் உள்ளது கல்யாணபுரம். அங்கிருந்து புது அக்ரஹாரம் பட்டாபிராமர் கோயில் வெகு சமீபத்திலுள்ளது. தில்லை ஸ்தானத்திற்குச் சென்று அந்தப் பாதையைப் பிரித்து 4A.e. சென்றால் பெரும் புலியூர் என்ற வைணவத்தலத்தை அடையலாம்.
கல்யாணபுரம் என்றதும் ஹரிகதா காலக்ஷேப விற்பன்னர் ஸ்ரீமான் ஆராவமுதாச்சாரியாரே நம் நினைவுக்கு வருகிறார். கோயில் அருகிலேயே சன்னிதித் தெருவில் பட்டாச்சாரியார் இருப்பதால் தரிசனம் கிடைக்க கஷ்டமில்லை. 1991ல் ஸம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு உள்ள இது ஒரு வடகலை ஸம்ப்ரதாயம் கடைபிடிக்கப்பட்டு வரும் கோயில். ஸந்நிதி கருடனைத் தாண்டி உள்ளே நுழைந்ததும், ப்ராகாரத்தில் பார்த்தசாரதி, ராமர் பட்டாபிஷேகம், ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார், கண்ணன், நரசிம்மர், ஸ்ரீநிவாசர் ஆகியோர் எழில் ததும்பும் சித்திர வடிவங்களாக காட்சி தருகின்றனர். ஆண்டாளின் மூலவர் தன் சந்நிதி கொண்டுள்ளார். மற்றும் விஷ்வக்சேனருக்குத் தனி ஸந்நிதி உள்ளது.
மூலவர் ஸ்ரீநிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராகக் காட்சி அளிக்கிறார். அவரது சாளக்ரம மாலை எடுப்பாகத் தோன்றி நம்மை வசீகரிக்கிறது. மிகவும் அழகுடன் திகழ்பவர் உற்சவ மூர்த்தியான ஸ்ரீநிவாசர். அவரும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உறைகிறார். மற்ற உற்சவ மூர்த்திகளாக சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சனேயர், கருடன், ஆழ்வார்கள் ஸ்ரீநிவாசர் ஸந்நிதியிலேயே உள்ளனர். கோதாவிலாஸ வஸந்த மண்டபம்
ஒன்றுள்ளது. இந்தக் கோயிலை ப்ரார்த்தனை செய்து கொண்டு அடிக்கடி கருட ஸேவை நடக்குமாம். அதற்குத் தனியாகக் கருடன் இருக்கிறார். அவரைத் தவிர ப்ரஹ்மோத்ஸவ கருடனும் உள்ளார். தனிக்கோயில் நாச்சியாளராக அலர்மேல் மங்கைத் தாயார் மூலவராக, உறஅசவராகக் காட்சி அளிக்கிறார். ஆஞ்சனேயர் தனியாக ஒரு சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். சிறிய ஆனால் நன்கு பராமரிக்கப்படும் கோயில்.