Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

குளிர்ச்சி தரும் செம்பருத்தி (ஜபாகுஸ¨மம்) English - Shoe flower plant பாரத தேசமெங்கும் வளர்க்கப்படும் செடி தென்னாட்டில் செந்நிறப்பூ அதிகம் வடநாட்டில் நீலம் மஞ்சள் க

குளிர்ச்சி தரும் செம்பருத்தி (ஜபாகுஸ¨மம்)

English - Shoe flower plant

பாரத தேசமெங்கும் வளர்க்கப்படும் செடி தென்னாட்டில் செந்நிறப்பூ அதிகம். வடநாட்டில் நீலம் மஞ்சள் கலந்து சிகப்பு, வெண்மை நிறங்களிலும் இது கிடைக்கிறது. பல இதழ்கள் நிறைந்த செந்நிறப்பூதான் மருந்துக்கு அதிகம் உகந்தது. வேர், இலை, பூ, ஆகிய மூன்றும் மருத்துவ குணம் நிறைந்தவை.

குணம்:

குணம் - எளிதில் ஜீர்ணமாகக்கூடியது, வரட்சி நீக்கி நெய்ப்பு தரக்கூடியது.

சுவை - துவர்ப்பும் கசப்பும் கலந்தது.

ஜீர்ணத்தில் இறுதியில் - காரமாக மாறக்கூடியது.

வீர்யத்தில் - குளிர்ச்சியானது.

செயல்கள் :

தோஷங்களில் - கப பித்தங்களின் சீற்றத்தை குறைத்து அவைகளை சமநிலைக்கு கொண்டு வரும் திறம் வாய்ந்தது.

வெளிப்புற உபயோகத்தில் - தலையில் ஏற்படும் அகால வழுக்கைக்கு இதன் பூவை பசு மூத்திரத்தில் கலக்கித் தலையில் தேய்த்து 2-3 மணி நேரம் வைத்திருந்து பிறகு அலம்பி விடலாம். முடி உதிர்தல் நின்று நன்கு முளைக்கும். இதை போட்டுக் காய்ச்சிய எண்ணெயைத் தலைவலி உள்ளவர் தேய்த்து குளிப்பதால் வேதனை நீங்கும்.

நாடி நரம்புகளில் - தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சப்பட்ட செம்பருத்திபூ, குளிர்ந்த நிலையில் அந்த தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் ஊறிக் குளிப்பதால் உடல் மற்றும் மனக்கொந்தளிப்பு அடங்கி நிம்மதியைத் தரும். மூளை நரம்புகளுக்கு பலம் தரும் மருந்தாகியதால் பித்துபிடிக்க நிலைகளில் தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.

ஜீர்ண உறுப்புகளில் - பூவிற்கு புண்ணை ஆற்றும் தன்மையுண்டு. குடல், கர்ப்பப்பை, தொண்டை இவைகளில் புண்கள் ஏற்பட்டால் 1-3 பூக்களை அரைத்துப் பாலில் கலக்கிச் சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. பூவை அரைத்துச் சாறு பிழிந்து தேன் அல்லது பால் கலந்தும் சாப்பிடுவதுண்டு. பூவை நிழலில் உலர்த்தித் தூளாக்கி வைத்துக் கொண்டு1/2 - 1 ஸ்பூன் அளவு பாலில் கலக்கிச் சாப்பிடுவர்.

ரத்தக்குழாய்களில் - மலத்துடன் ரத்தம் கலந்து செல்லுதல், ரத்தமூலம், மாதவிடாய் காலத்திற்குப் பின் தொடர்ந்த சில நாட்களுக்கு அதிக அளவிலோ குறைந்த அளவிலோ காணும் பெருக்கு, தொண்டை வழியேயும் மூக்கு வழியாகவும் ரத்தக்

கசிவு ஏற்பட்டு காரித்துப்பும் போதும், மூக்கை சிந்தும்போதும் ரத்தம் காணுதல், இப்படி அடிக்கடி சிறிது சிறிதாக ரத்தம் வெளியேறுவதால் ஏற்படும் ரத்தக் குறைவு இவைகளில் இதை சாப்பிடுவது நல்லது.மாங்காய் கொட்டையிலுள்ளே உள்ள பருப்புடன் செம்பருத்தி மொட்டு சேர்த்து கடித்துச் சாப்பிட்டால் மாத விடாயில் ஏற்படும் அதிக உதிரப்போக்கு உடனே கட்டுப்படும்.

இருதயத்திற்கு பலத்தைத் தரக்கூடியது. ரத்தக் குழாய்களில் ஏற்படும் கசிவுகளை நிறுத்தி அதில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடும் திறனும் பூவிற்கு உண்டு.சிறுநீர்ப்பையில் - கப பித்தங்களின் சீற்றத்தால் ஏற்படும் சர்க்கரை வியாதியில் சிறுநீரில் ஏற்படும் உபாதைகளை நீக்கி Kidneys-ஐ பலப்படுத்தும்.

மலப்பையில் - பேதி ஆகும் நிலைகளில் பூவை காயவைத்து, தூளாக்கி 1 ஸ்பூன் பொடியில் தேன் குழைத்து நக்கிச் சாப்பிட மலத்தைக் கட்டும்.

இலைகள் குளிர்ச்சியானவை. கண் மற்றும் உடல் எரிச்சல், உடல் சோர்வு போன்ற நிலைகளில் இலைகளை அரைத்து தலையில் ஊற வைத்து குளிப்பதால் பயன் தரும். தோலில் ஏற்படும் அரிப்பு, சொறி, சிரங்குகளிலும் இலை மற்றும் பூவை அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம்.

"ஜபா சீதா ச மதுரா ஸ்நிக்தா புஷ்டிபிரதா மதா 1

கர்ப்பவிருத்திகரீ க்ராஹி கேஸ்யா ஜந்துப்ரதா மதா 11

வாந்தி ஜந்துகரா தாஹபிரமேஹார்சவிநாசினீ 1

தாதுருக்பிரதரம் சேந்த்ரலுப்தம் சைவ வினாசயேத் 1

ஜபாபுஷ்பம் லகு க்ராஹி திக்தம் கேசவிவர்தனம் 11"

- நிகண்டு ரத்னாகரம்


htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it