சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம் 1 ஆதௌகர்மப்ரஸங்காத் கலயதிகலுஷம் மாத்ருகுªக்ஷளஸ்திதம்மாம் விண் மூத்ராமேத்யமத்யே க்வதயதி நிதராம்ஜாடரோ ஜாதவேதா: ! ய

சிவாபராத க்ஷமாபணஸ்தோத்ரம்

1.ஆதௌகர்மப்ரஸங்காத் கலயதிகலுஷம்

மாத்ருகுªக்ஷளஸ்திதம்மாம்

விண் மூத்ராமேத்யமத்யே க்வதயதி

நிதராம்ஜாடரோ ஜாதவேதா: !

யத்த்வை தத்ரது:கம் வ்யதயதி

நிதராம்சக்யதேகேந வக்தும்

க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ சிவ

போ:ஸ்ரீமஹாதேவ சம்போ !!

முன் ஜன்மார்கமத் தொடரால் பாபம் கொள்ளும் தாய்வயிற்றில் இருந்தேன். பல அசுசிகளும் நிரம்பிய அங்கு பட்ட துன்பத்தை யார் சொல்ல முடியும்?ஹே சிவ!மஹாதேவ!உமக்குச் செய்த அபராதத்தைப் பொருத்தருளும்.

2.பால்யே து:காதிரேகாத் மலலுலிதவபு:

ஸ்தன்யபானே பிபாஸு:

நோசக்தஸ்சேந்த்ரியேப்யோ பவமலஜநிதா

ஜந்தவோமாம் துதந்தி !

நாநாரோகாதிது:காத் ருதிதபரவச:

சங்கரம் நஸ்மராமி

க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ சிவ

போ:ஸ்ரீமஹா தேவ சம்போ!!

குழந்தையாய் இருந்த போது பல தொல்லைகளுக்குள்ளாகியும் ஸ்தன்ய பானத்தில் ஈடுபட்டுமிருந்தேன். புறக்கரணங்களும் இயங்கவில்லை. அசுத்தத்தில் தோன்றிய சிறு கொசு, ஈ, முதலியவற்றைலும் தொல்லை இருந்தது. நோய் வாய்ப்பட்டும் அழுது கொண்டே இருப்பேன். அப்போது சங்கரனை நினைக்கவே இல்லை. இது தவறு தான். என்னைப் பொருத்தருள் சிவனே!

3.ப்ரௌடோsஹம் யௌவனஸ்தோ விஷய விஷதரை:

பஞ்சபி:மர்மஸந்தௌ

தஷ்டோநஷ்டோ விவேக:ஸுததனயுவதிஸ்வாத

ஸெளக்யே நிஷண்ண:!

சைவே சிந்தாவிஹீனம் மம ஹ்ருதயமஹோ

மானகர்வா திரூடம்

க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ...

பெரியவனாகி வாலிபனாயும் ஆனேன். ஆனால், உலக சுகங்களாகிய நச்சுப் பாம்புகள் கடிக்க, விவேகமிழந்து, பிள்ளை, பணம் இளநங்கை என்று சுகம் அனுபவிப்பதிலேயே இருந்து விட்டேன். அதுமட்டுமா?தற்பெருமை, கர்வம் மிகுந்து ஸ்ரீ சிவனை நினைக்கத் தவறினேனே அது தவறு தானே. ஹே சிவனே. என்னை மன்னித்தருள்வாயாக!

4.வார்த்தக்யே சேந்த்ரியாணாம் விகலகதிமதி

ஸ்சாதிதைவாதி தாபை:

ப்ராப்தை ரோகைர்வியோகை:வ்யஸன க்ருசதநோ:

ஜ்ஞப்தி ஹீநம்சதீனம் !

மித்யா மோஹாபிலாஷை:ப்ரமதி மம மனோ

துர்ஜடேர்த்யான சூன்யம்

க்ஷந்தவ்யோ மோபராத:சிவ சிவ சிவ....

வயோதிகப் பருவத்தில் புறக்காரணங்கள் செயலிழந்து, மதியிழந்து, ஆதிதைவிகம் பல நோய் நொடிகளும் பிரிவுகளும் நிகழ அறிவுகெட்டு, மனம் வாடி வீண் மோஹம், ஆசை இவற்றாலும் பரமேச்வரன் பால் சற்றும் தியாமில்லாமல் கொந்தளித்தேனே அதுவும் தவறுதானே!ஹே சிவ என் குற்றத்தை மன்னித்தருள்வீராக!

5.ஸ்நாத்வா ப்ரத்யூஷகாலே ஸ்நபன விதிவிதௌ

நாஹ்ருதம் காங்கதோயம்

பூஜார்த்தம் வா கதாசித் பஹ§தரஹ ஹநே அகண்ட

பில்வீதலம் வா!

நாநீதா பத்மமாலா ஸகஸிவிகஸிதா கந்த

புஷ்பைஸ்த்வதர்த்தம்

க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ சிவ:....

ஸ்ரீமஹாதேவ சம்போ!!

ஒரு நாளாவது அதிகாலையில் குளித்து விட்டு, சிவாபிஷேகம் செய்விக்க கங்கை ஜலம் கொணர்ந்தேணா?அல்லது பூஜிப்பதற்கு அடர்ந்த புதரில் சென்று முறிவுபடாதபில்வங்களை கொணர்ந்தேனா?இல்லை... கந்தம், புஷ்பம் இவற்றோடு தாமரை மாலையாவது கொணர்ந்தேனா?இல்லவே இல்லையே!இந்த தவறை ஹேசிவ!மன்னித்தருள்வீராக!

6.துக்தைர்மத்வாஜ்யயுக்தை:ததிகுடஸஹிதை:ஸ்நாபிதம்

நைவலிங்கம்

நோலிப்தம் சந்தனாத்யை:கனக விரசிதை:பூஜிதம்

நப்ரஸ¨னை:!

தூபை:கர்பூரதீபை:விவத ரஸயுதை:நைவ

பக்ஷ்யோபஹாரை:

க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ சிவ போ:

ஸ்ரீமஹாதேவ சம்போ!!

தேன், நெய், தயிர், வெல்லம் இவற்றுடன் பால் அபிஷேகம் லிங்கத்திற்கு செய்ததில்லை. சந்தனம் சாத்தவில்லை. தங்க புஷ்பங்களால் பூஜை செய்யவில்லை. தூப தீபமும் காட்டவில்லை. பல்சுவை பக்ஷ்யங்கள் நிவேகனம் செய்யவில்லை. இவ்வாறு இழைந்த தவறை ஹே சிவனே பொருத்தருள்க!

7.நோசக்யம் ஸ்மார்தகர்ம ப்ரதிபதகஹநே

ப்ரத்யவாயாகுலாட்யே

ச்ரௌதே வார்தா கதம்மே த்விஜகுலவிஹிதே

ப்ரஹ்மமார்கானுஸாரே!

தத்வேsஜ்ஞாதேsவிசாரே ச்ரவணமநநயோ:கிம்

நிதித்யாஸிதவ்வம்

க்ஷந்தவ்யோமேsபராத:சிவ சிவ சிவ போ:

ஸ்ரீ மஹாதேவ சம்போ!!

தவறு இழைப்பதும் அதற்கு ப்ராயச்சித்தம் செய்வதுமான குழப்பம் மிகுந்த புரிந்து கொள்ள முடியாத ஸ்மார்த கர்மங்கள் செய்ய இயலவில்லை. அப்படியிருக்க, அந்தணோத்தமர்கள் செய்யும் ப்ரஹ்மமார்கம் தழுவிய ச்ரௌத கர்மங்களில் எனக்கு எப்படி செய்யும் அவகாசம் உளது?அதுபோல் தத்வம் தெரியாதபோது அது பற்றி சிரவணம், மனனம் எங்கனம்?நிதித்யாஸனமும் எப்படி முடியும்?இப்படி இழைந்த தவறை ஹே சிவனே!பொருத்தருள்வீராக!

8.த்யாத்வா சித்தேசிவாக்யம் ப்ரசுரதரதனம் நைவ தத்தம் த்விஜேப்ய:

ஹவ்யம்தேலக்ஷஸங்க்யை:ஹ§தவஹவதனேநார்பிதம் பீஜமந்த்ரை: !

நோ தப்தாம் காங்கதீரே வ்ரதஜப நியமை:ருத்ரஜாப்யம் நஜப்தம்

க்ஷந்தவ்யோ மேsபராத:சிவ சிவ சிவ போ:

ஸ்ரீமஹாதேவசம் போ !!

மனதில் சிவத்யானத்துடன் பிராம்மணர்களுக்கு தனத்தை தானம் செய்யவில்லை. பீஜமந்த்ரங்களைச் சொல்லி லக்ஷக் கணக்கில் ஹவிஸும்

அக்னியில் ஹோமம் செய்யவில்லை. கங்கைக்ரையில் வ்ரத ஜபமுறைகளுடன் ருத்ரஜபமும் செய்யவில்லை. இப்படி நான் செய்த பிழைகளைப் பொருத்தருள்வீராக.

9.நக்னோ நி:ஸங்கசுத்த:த்ரிகுணவிரஹிதோ த்வஸ்தமோஹாந்தகாரோ:

நாஸாக்ரந்யஸ்தத்ருஷ்டி:விதிதபவகுண:நைவ த்ருஷ்ட:கதாசித் !

உன்மன்யாவஸ்தயா த்வாம் வித கதிமதி:சங்கரம் நஸ்மராமி

க்ஷந்தவ்யோமேsபராத:சவ சிவ சிவ போ: ஸ்ரீமஹாதேவ சம்போ!!

சன்யாஸ நிலையில், கெட்ட சேர்க்கையும் முக்குணமும் ஒழித்து, மோஹ இருள் நீங்கி, மூக்கு நுனியில் பார்வை பதித்து சிவனை கண்டேனில்லை, கவலை கொண்டு அறிவு மழுங்கி, மங்களகரனான உம்மை மனதால் கூட எண்ணிப் பார்க்கவில்லை. இந்தப் பிழையைப் பொருத்து அருள் புரிய வேணுமே!

10.ஸ்தித்வா ஸ்தானே ஸரோஜே ப்ரணவமய மருத்கும்பிதே ஸ¨க்ஷ்மமார்கே

சாந்தேஸ்வாந்தே ப்ரலீனே ப்ரகடிதவிபவே திவ்யரூபே சிவாக்யே!

லிங்காக்ரே ப்ரஹ்மவாக்யே ஸகலதனுகதம் சங்கரம் ந ஸ்மராமி

க்ஷந்தவ்யோமேsபராத:சவ சிவ சிவ போ: ஸ்ரீமஹாதேவ சம்போ!!

பத்மாஸனத்தில் அமர்ந்து, ப்ரணவ மயமான காற்றடைத்த சூக்ஷ்மமார்கத்தில் திவ்ய சிவஸ்வரூப நிலையில் மனம் ஒடுங்கி லிங்கஸந்நிதியில் அனைத்து உயிரினத்திலும் ஊடுருவி நிற்கும் ஸ்ரீ சங்கரனை நினைத்திலேன். இந்த பிழையையும் மன்னித்து அருள் பாவிக்க வேண்டும் ஹேசிவனே!

11. ஹ்ருதயம் வேதாந்த வேத்யம் ஹ்ருதயஸரஸிஜே தீப்த முத்யத்ப்ரகாசம்

ஸத்யம் சாந்தஸ்வரூபம் ஸகலமுனிமான:பத்மஷண்டாகவேத்யம் !

ஜாக்ரத்ஸ்வப்னே ஸுஷ§ப்தௌ த்ரிருண விரஹிதம் சங்கரம் நஸ்மராமி

க்ஷந்தவ்யோமேsபராத:சவ சிவ சிவ போ: ஸ்ரீமஹாதேவ சம்போ!!

மனதிற்கினியவரும், வேதாந்தமொன்றாலே அறியத்தக்கவரும், ஹ்ருதய தாமரையில் விளங்குபவரும் ஸத்ய-சாந்த ஸ்வரூபியாவும், முனிவர் தம் மனதில் உறைபவரும், ஜாக்ரத்ஸவப்ன-ஸுஷ§ப்தி நிலையில் முக்குணமற்றவரும் ஆன ஸ்ரீசங்கரனை மனதில் ஸ்மரித்திலேன். இந்த தவறை மன்னித்தருள வேணுமே சிவ சிவ சிவ மஹாதேவ!

12. சந்த்ரோத்பாஸிதசேகரே ஸ்மரஹரே கங்காதரே சங்கரே

ஸர்ப்பைர் பூஷித கண்ட கர்ணவிவரே

நேத்ரோத்தவைச்வானரே!

தந்தித்வக்க்ருத ஸுந்தராம்பரதரே

த்ரைலோக்யஸாரே ஹரே

மோக்ஷ£ர்த்தம் குரு சித்த விருத்திமமலாம்

அன்யைஸ்து கிம் கர்மபி!!

சந்திரப் பிறையணிந்தவரும், மன்மதனையழித்தவரும், கங்கையை தாங்கியவரும், காது, கழுத்து ஆகிய இடங்களில் ஸர்பாபரணம் அணிந்தவரும், நெற்றிக்கண்ணில் அக்னியை வைத்துள்ளவரும், யானைத்தோலாகிய அழகிய ஆடையணிந்தவரும், மூவுலகுக்கும் இன்றியமையாத செல்வமாய் திகழ்பவருமான சிவனை மோக்ஷம் வேண்டி ஹேமனமே சிந்திப்பாயாக, மற்றகர்மாக்கள் எதற்கு?

13. கிம் யேநேந தனேந வாஜிகரிபி:ப்ராப்தேந ராஜ்யேந கிம்

கிம்வா புத்ர கலத்ரமித்ர பசுபி:தேஹேந கேஹேநதிம்!

ஜ்ஞாத்வைதத்க்ஷண பங்குரம் ஸபதி ரே த்யாஜ்யம் மனோ தூரத:

ஸ்வாத்மார்த்தம் குருவாக்யதோ பஜபஜ ஸ்ரீபார்வதீவல்லபம்!!

வாஹனம், தனம், யானை, குதிரை ஏன் ராஜ்யமே தான் கிடைத்து என்ன பயன்?பெண்கள், நண்பர்கள், பசுக்கள், உடல், உறைவிடம் இவைதான் இருந்து யாது பயன்?ஹேமனமே!இவை ஒரு நொடியில் அழிபவை என்றறிந்து தூரே தள்ளிவிடு. குரு வாக்யப்படி தனக்கென்று மோக்ஷத்தை நாடி, பார்வதீமணாளன் பரமனை சேவித்து சுகிப்பாயே!

14. பௌரோஹித்யம் ரஜனிசரிதம் க்ராமணீத்வம் நியோக:

மாடாபத்யம் ஹ்யந்ருத வசனம் ஸாக்ஷிவாத:பரான்னம்!

ப்ரஹ்மத்வேஷ:கலஜனரதி:ப்ராணிநாம் நிர்தயத்வம்

மா பூ தேவம் மம பசுபதே ஜன்ம ஜன்மாந்தரேஷ§ !!

புரோஹிதநிலை, ராக்காவல், கிராமத்தலைமை, அதிகாரம், மடத்தின் பொறுப்பு, பொய்பேசல், சாக்ஷியாய் இருத்தல், பிறர் வீட்டு போஜனம், பிராம்மணத்வேஷம், துஷ்டர் இணக்கம், உயிரினத்தினாபால் இரக்கமின்மை இவையாவும் எனக்குப் பிறவிதோரும் இல்லாதிருக்கட்டுமே!

15. ஆயுர் நச்யதி பச்யதாம் ப்ரதிதினம் யாதிக்ஷயம் யௌவனம்

ப்ரத்யாயாந்தி கதா:புனர் ந த்வஸா:காலோ ஜகத்பக்ஷக:!

லக்ஷ்மீஸ்தோய தரங்க பங்கசபலா வித்யுத்சலம் ஜீவிதம்

தஸ்மான்மாம் சரணாகதம் ரக்ஷ ரக்ஷதுநா!!

பார்த்துக்கொண்டே இருக்கும்போது ஆயுள் கரைந்து விடுகிறது. தினந்தோரும் இளமை அழிகிறது. சென்ற நாட்கள் திரும்புவதில்லை. காலம் உலகை மூழுங்கிவிடும். நீரலைபோல் லக்ஷ்மியும் தோன்றி மறைவாள். வாழ்க்கை மின்னலெனமாயும். ஆகவே, புகலெனப்புகுந்த என்னை கருணையுடன் காப்பாயாக!

சிவாபராதக்ஷமாபணஸ்தோத்ரம் முற்றும்.