Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கௌரீதசகம் 1 லீலாலப்த ஸ்தாபித லுப்தாகில லோகாம் லோகாதீதை:யோகிபிரந்தஸ்சிரம்ருக்யாம் I பாலாதித்ய ச்ரேணி ஸமானத்யுதி புஞ்ஜாம் கௌரீமம்பா மம்புருவராக்ஷீ மஹம

கௌரீதசகம்

1.லீலாலப்த ஸ்தாபித லுப்தாகில லோகாம்

லோகாதீதை:யோகிபிரந்தஸ்சிரம்ருக்யாம் I

பாலாதித்ய ச்ரேணி ஸமானத்யுதி புஞ்ஜாம்

கௌரீமம்பா மம்புருவராக்ஷீ மஹமாடே II

தனது லீலா விபூதியாக அமைந்து காக்கப்பட்டு பின் தன்னில்லயிக்கும் உலகங்களுடையவளும், சிறந்த யோகிகளால் மனதளவில் தேடி அறியத்தக்கவளும், பால சூர்யர்கள் போன்ற நிறங்கொண்டவளுமான தாமரையிதழ்க் கண்படைத்த கௌரீ மாதாவை வணங்குகிறேன்.

2.ப்ரத்யாஹார த்யான ஸமாதிஸ்திதி பாஜாம்

நித்யம் சித்தே நிர்வ்ருதிகாஷ்டாம் கலயந்தீம் I

ஸத்ய ஜ்ஞானானந்தமயீம் தாம் தனுரூபாம்

கௌரீயம்மா மம்புஹாக்ஷீமஹமீடே II

ப்ரத்யாஹாரம், தியானம், ஸமாதி நிலைகளிலுள்ள யோகிகளின் மனதில் எப்போதும் பரமானந்தத்தைத் தோற்றுவிக்கின்றவளும், ஸத்யம், ஜ்யானம், ஆனந்தம் என்ற உருவத்தில் மெல்லியவளாய் தெரிகிறவளுமான கௌரித்தாயை நான் வணங்குகின்றேன்.

3.சந்த்ராபீடா நந்தித மந்தஸ்மித வக்த்ராம்

சந்த்ராபீடாலங்க்ருத நீலாலகபாராம் I

இந்த்ரோ பேந்த்ரா தயர்சித பாதாம்புயுக்மாம்மிமி

கௌரீமம்பா மம்புருஹாக்ஷீமஹமீடே II

பிறைச்சந்சந்திரனைப் பூண்ட மகிழ்ச்சியால் புன்முறுவல் பூத்த முகம் கொண்டவள், சந்திரக்கலையணிந்த கருநீல கூந்தல் கொண்டவள், இந்த்ரன், உபேந்திரன் முதலியவரால் போற்றப்பட்ட திருவடிகளையுடையவள். அத்தகைய கௌரீயன்னையை போற்றுகிறேன்.

4.ஆதிக்ஷ£ந்தா மக்ஷரமூர்த்யா விலஸந்தீம்

பூதே பூதே பூதகதம்ப ப்ரஸ வித்ரீம் I

சப்தப்ரஹ்மானந்தமயீம்தாம் தடி தாபாம்

கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடேமிமி

அகராதி க்ஷகாராந்தமான அக்ஷரங்கள் வடிவத்துடன் விளங்குபவள், யுகத்துக்கு யுகம் ஜீவராசிகளைப் படைப்பவள். சப்தப்பிரஹ்ம வடிவமும், மின்னல் ஒளியும் கொண்டவள், அத்தகைய கௌரீமாதாவை வணங்குகின்றேன்.

5.மூலாதாராத் உத்திதவீத்யா விதிரந்த்ரம்

ஸெளரம் சாந்த்ரம் வ்யாப்ய விஹாரஜ்வலிதாங்கீம் I

யேயம் ஸ¨க்ஷ்மாத்ஸ¨க்ஷ்தமதனு ஸ்தாம்ஸுகரூபாம்

கௌரீமம்பா மம்புருஹா க்ஷீமஹமீடேமிமி

மூலாதா ரத்தினின்று புறப்பட்ட வழியோடு ப்ரம்ம மந்த்ரத்தையும் சூர்யசந்த்ரபிலங்களையும் வியாபித்து களிப்பதில் ஜ்வலிப்பவளும், அணுவிற்கும் அணுவாய், ஆனந்தமயமாய் விளங்குபவளுமான கௌரியன்னையை வணங்குகிறேன்.

6.நித்ய:சுத்தோ நிஷ்கல ஏகோ ஜகதீச:

ஸாக்ஷீயஸ்யா:ஸர்கவிதௌ ஸம்ஹரணேச I

விச்வத்ராண க்ரீடனலோலாம் சிவபத்நீம்

கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II

உலகைப் படைப்பதிலும், ஒடுக்குவதிலும் எவளுக்கு சாக்ஷியாய் நித்யனாய், சுத்தனாய், நிஷ்கலனாய் ஸ்ரீபரமேச்வரன் இருக்கிறானோ, எவள் உலகைப் படைக்கும் விளையாட்டில் உவகை கொண்டவளோ அத்தகைய சிவபத்னியான கௌரீயை நான் வணங்குகிறேன்.

7.யஸ்யா:குªக்ஷளள லீநமகண்டம் ஜகதண்டம்

பூயோ பூய:ப்ராது ரபூத் உத்திமேவமி

பத்யா ஸார்தம் தாம் ரஜதாத்ரௌ விஹாந்தீம்

கௌரீமம்பா மம்புருஹா க்ஷீமஹமீடேமிமி

இந்த சராசர ப்ரபஞ்சம் பின்னும் பின்னும் தோன்றி எவளது உதரத்தில் ஒடுங்கியுள்ளதோ, லெள்ளிமலையில் பர்தாவோடு களித்து நிற்கும் அந்த அன்னை கௌரியை வணங்குகிறேன்.

8.யஸ்யாமோதம் ப்ரோதமசேஷம் மணிமாலா

ஸ¨ந்தே யத்வத் க்வாபி சரம் சாப்யசரம்ச I

தாமத்யாத்ம ஜ்ஞானபதவ்யா கமனீயாம்

கௌரீமம்பா மம்புருஹா க்ஷீமஹமீடே II

இந்த சராசர ப்ரபஞ்சம் தவமணிமாலையில் கோர்க்கப்பட்டது போல் எவளிடம் மேலும் கீழுமாய் அடங்கியுள்ளதோ, எவள் ஆத்மஜ்ஞானவாயிலாக அறியத்தக்கவளோ அத்தகைய கௌரியன்னையை வணங்குகிறேன்.

9.நாநாகாரை:சக்தி கதம்பைர்புவனாதி

வ்யாப்ய ஸ்வைரம் க்ரீடதி யேயம் ஸ்வயமேகாமி

கல்யாணீம்தாம் கல்பலதா மாநதிபாஜாம்

கௌரீ மம்பாம் அம்புருஹாக்ஷீமஹமீடே II

தான் ஒருவனாயிருந்து கொண்டு தனது பலவித சக்திகளுடன் உலகை வியாபித்து தன்னிசைப்படி விளையாடும் கல்யாணியவள். தன்னை வணங்கியவருக்கு கல்பகக் கொடியுமானவள். அந்த கௌரியன்னையை வணங்குகிறேன்.

10.ஆசாபாச க்லேச விநாசம் விததாநாம்

பாதாம் போஜத்யான பராணாம் புருஷாணாம் I

ஈசா மீசார்தாங்கஹராம் தாமபிராமாம்

கௌரீமம்பா மம்புருஹாக்ஷீ மஹமீடே II

தனது திருவடித் தாமரையை தியானிக்கும் மனிதருக்கு ஆசாபாசங்களையும், அதன் நிமித்தம் ஏற்படும் கஷ்டங்களையும் அகற்றுபவள் அன்னை கௌரி. மேலும் அவள் மகேசனது உடல் இடது பாகத்தை வலியக் கொண்டவள். தாமரை இதழொத்த கண்களையும் கொண்டு விளங்குமவளை ஸ்தோத்திரம் செய்கிறேன்.

11.ப்ராத:காலே பாவிசுத்த:ப்ரணிதாநாத்

பக்த்யா நித்யம் ஜல்பதி கௌரீதசகம்ய: I

வாசாம் ஸித்திம் ஸ்ம்பதமக்ர்யாம் சிவபக்திம்

தஸ்யாவச்யம் பர்வதபூத்ரீ விததாதி II

தூய கருத்துடன் தியானத்திலாழ்ந்து எவனொருவன் பக்தியுடன் இந்த கௌரீ சதகத்தை தினந்தோறும் பாராயணம் செய்கிறானோ அவனுக்கு பார்வதீ சிவபக்தியையும், பேச்சுத் திறமையையும், மிகுந்த செல்வத்தையும் அமையச் செய்வாள்.

s கௌரீதசகம் முற்றிற்று.


htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it