இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 6 தில்லைவிளாகம் வீர கோதண்டராமர் F ருத்துறைப் பூண்டியிலிருந்து கோபால ஸமுத்ரம் என்ற ஊரி

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

6. தில்லைவிளாகம் வீர கோதண்டராமர்

F ருத்துறைப் பூண்டியிலிருந்து கோபால ஸமுத்ரம் என்ற ஊரில் இறங்கி, அங்கு வேதாரண்யம் செல்லும் பேருந்தில் போனால் தில்லைவிளாகம் கோவில் வாசலிலேயே இறங்கலாம். இந்தத்தலம் திருத்துறைப்பூண்டியிலிருந்து இந்த வழியாகச் செல்லும் போது ஸுமார் 18 A.e. தூரத்தில் உள்ளது. ஸமீபத்தில் குடமுழுக்கு நிகழப் பெற்று ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகாகக் காணப்படுகிறது இந்தத் திருக்கோவில். இந்தத் தலம் உள்ள பகுதியே தண்டகாரண்யம், தில்லைவனம் என்று வழங்கப்பட்டதாம். ராமபிரான் ராவணனை வென்றபின் சேதுக்கரை வழியாக வந்தபோது இந்த ஊரில் தங்கியதாகத் தல புராணம் கூறுகின்றது. தல வ்ருக்ஷமாக உள்ளது தில்லை மரம் விமானம் ஆனந்த விமானம். தீர்த்தமாகத் திகழ்பவை ஹேம புஷ்கரிணியும், ராம, அனுமன் தீர்த்தங்களும்.

இந்தக் கோவிலில் வீர விஜயனாகக் கோதண்டராமர் வலப்புறம் ஸீதையுடனும், இடப்புறம் லக்ஷ்மணன், ஆஞ்சனேயருடன் நின்ற கோலத்தில் ஸேவை ஸாதிக்கிறார். இங்கு ஒரே மூர்த்திதான். அது உற்சவ மூர்த்தியே. அவரே வழக்கமான உற்சவ மூர்த்திகளைக் காட்டிலும் பெரியவராக உள்ளார். மூலவராகத் தனி மூர்த்திகள் இல்லை. இந்த மூர்த்திகள் ஸுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அருகிலுள்ள சிவாலயத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டவையாம். இந்தக் கோவிலுக்கு வீர கோதண்டராமரின் ஒரே ஸந்நிதிதான்.

இந்த வீர கோதண்டராமர் மூர்த்தியின் கைகளிலும், கணுக்காலிலும் பச்சை நிற நிரம்புகள் தெரிவதையும், விரலில் உள்ள ரேகைகள் புலப்படுவதையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. வில் ஏந்திய திருக்கைகளில் உள்ள வளைவு, நெளிவுகள் சிற்பக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. புறப்பாட்டுக்கு எழுந்தருளச் சிறிய அளவில் கோதண்டராமர் ஸீதா, லக்ஷ்மண, அனுமன் ஸமேதராக உள்ளார். இங்கு இரு உற்சவர்கள், மூலவரில்லை என்பது விசேஷம். ராமபிரான் மிகவும் வரப்ரசாதியாகக் கருதப்படுகிறார். வேதாரண்யக் கடலில் நீராடிவிட்டு வந்து இந்த வீர கோதண்டராமரைத் தொழுதால் கார்யங்கள் கைகூடும் என்ற நம்பிக்கை இங்கு பரவலாக நிலவுகிறது. வைகானஸ ஆகமப்படி வழிபாடு நடைபெறுகிறது. ஆடி, தை அமாவாஸை, வைகுண்ட ஏகாதசி இங்கு விசேஷம். ஸ்ரீராம நவமி உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு வலப்புறத்தில் நடராஜர் கோவில் அமைந்து இருப்பது நமக்குத் தில்லைச் சிதம்பரம் கோவிந்தராஜர், நடராஜர் ஸந்நிதிகளை நினைவுபடுத்துகிறது.

சினத்தினால் தென்னிலங்கைச் கோமானைச் செற்ற மனத்துக்கினியான் இந்த வீர

கோதண்டராமனே என்று வியந்து ஆண்டாள் நாச்சியாரின் வாக்கை எண்ணியவாறே தில்லை விளாகத்திலிருந்து விடைபெறுவோம்.