இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 4 தஞ்சை ராஜவீதி விஜயகோதண்டராமர் த ஞ்சை மேல ராஜ வீதியை திருக்கோவில்கள் iF என்றே அழைக்கலாம் ம

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

4. தஞ்சை ராஜவீதி விஜயகோதண்டராமர்

ஞ்சை மேல ராஜ வீதியை திருக்கோவில்கள் iF என்றே அழைக்கலாம். முதலில் நவநீத கிருஷ்ணன், அடுத்து ஸங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ச்யாமா சாஸ்திரிகளின் உபாஸனா தெய்வம் பங்காரு காமாக்ஷி, பின்னர் விஜயகோதண்டராமர், காசி விஸ்வநாதர் என்று வரிசையாகக் கோவில்கள் அமைந்துள்ளன. எல்லா தெய்வங்களையும் ஒரு சேர தர்சிக்கும் வாய்ப்பினை இவ்வீதி நமக்கு அளிக்கின்றது. பங்காரு காமாக்ஷி ஆலயத்தை அடுத்து ராமபிரான் கோவில் கொண்டு அருளும் விஜயகோதண்டராமர் திருக்கோவில் உள்ளது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களும், மஹாராஷ்ட்ர மன்னர்களும் ராமபிரான் மீது எல்லையற்ற பக்தி கொண்டிருந்தனர் என்பதற்குத் தஞ்சையைச் சுற்றி எழுந்துள்ள ராமரின் ஆலயங்களே சாட்சி.

புராதனமான பெருமையைக் கொண்ட ராஜ கோபுரத்துடன் கூடியது விஜயகோதண்டராமரின் திருக்கோவில். மூலவராகக் கோதண்டராமர், ஸீதை, லக்ஷ்மணன், ஆஞ்சனேயருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி. அவரைப் போன்றே உத்ஸவ மூர்த்தியும் வலப்புறம் ஸீதையுடனும், அனுமனுடனும் ஸேவை ஸாதிக்கிறார். தஞ்சை அரண்மனையைச் சார்ந்த கோவிலாகத் திகழ்ந்தது இது என்று அறிகிறோம். ஸந்நிதிகருடன் ராமருக்கு எதிரில் உள்ளார். அருகிலேயே ஸ்ரீநிவாஸர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். தும்பிக்கை ஆழ்வாராம் விநாயகப் பெருமானுக்குத் தனி ஸந்நிதி. மண்டபத்துத் தூணில் மஹாவிஷ்ணு, ஸுப்ரமண்யர், விநாயகர், ஆஞ்சனேயர் உள்ளனர். தவிர தனி ஸந்நிதியிலும் மாருதி ஸேவை ஸாதிக்கிறார். ப்ராகாரத்தில் தசாவதாரச் சித்திரங்கள் அழகாக வரையப்பட்டுள்ளன. விஜயகோதண்டராமர் தர்சனம் நமக்கு ஸ்ரீ தேசிகனின் ஜயஜய மஹாவீர, மஹாதீர தௌரேய........ராகவஸிம்ஹ என்ற ரகுவீர கத்யத்தை நினைவுபடுத்துகிறது.