இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 20 அயோத்தியா பட்டணம் ஸ்ரீராமர் சே லம் நகரத்திலிருந்து 15 A e தொலைவில் உள்ள இந்தத் தலம் விர

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

20. அயோத்தியா பட்டணம் ஸ்ரீராமர்

சே லம் நகரத்திலிருந்து 15 A.e. தொலைவில் உள்ள இந்தத் தலம் விருத்தாசலம்-சேலம் ரயில் மார்க்கத்தில் உள்ளது. இக்கோவில் விஜயநகர மன்னர்களாலும், நாயக்க மன்னர்கள் காலத்திலும் திருப்பணிக்கு உள்ளாகி, வளர்ந்து வந்திருக்கின்றது. கோவிலுக்கு 5 நிலைகள் உள்ள ராஜகோபுரம் உள்ளது. ராமபிரான் ராவண வதத்திற்குப் பின்னர் இலங்கையில் விபீஷணனுக்கு முடி சூட்டிவிட்டு ஸீதாப்பிராட்டி, லக்ஷ்மணர், வானரப்படைகளுடன் புஷ்பக விமானத்தில் வரும்போது, ஸீதைக்குத் தான் வனத்தில் நடந்து கடந்த இடங்களைக் காண்பிக்கும் போது இந்தத் தலம் உள்ள இடத்தில் சிறிது இளைப்பாற வானரங்கள் விரும்பவே ஸீதையும் அண்ணலிடம் அவர்கள் விருப்பத்தைக் கூற புஷ்பக விமானம் சில கணங்கள் தரையிறங்கி இங்கு நின்றதாம்.

இத்தகைய தலப்புராணத்தை உடைய இதனைப் புராணஸ்தலமாகவே கருதலாம், முடிகொண்டானைப்போல. இங்கு ராமபிரான் அயோத்தியா ராமராக ஸீதை, லக்ஷ்மணன், பரதன் சத்துருக்னன், சுக்ரீவன், விபீஷணன், ஆஞ்சனேயர் ஆகியோருடன் காட்சி அளிப்பது நம் நெஞ்சை நிறைக்கும் அனுபவம். இது ராமபிரானுக்கு மிகவும் உகப்பான தலம், ஏனென்றால் பாகவதர்களாகிய பரதன், லக்ஷ்மணன், அனுமன், விபீஷணன், சுக்ரீவன் எல்லோருடனும் அல்லவா அவர் ஸேவை ஸாதிக்கிறார்!

உற்சவ மூர்த்திகளாக ராமர், ஸீதை, லக்ஷ்மணர், ஆஞ்சனேயருடன் கோதண்டமேந்திக் காட்சி. மற்ற ப்ரகார ஸந்நிதிகளில் பன்னிரு ஆழ்வார்கள் உள்ளனர். மற்றும் விஷ்வக்ஸேனர், சக்கரத்தாழ்வாரும் தனி ஸந்நிதிகளில் எழந்தருளியுள்ளார். சித்திரை மாத ப்ரம்மோற்சவமும், ஸ்ரீ ராமவநமி, நவராத்திரி விழாக்களும் இங்கு விசேஷம்.

'' அங்கண் நெடுமதில் புடை சூழ் அயோத்தி என்னும்

அணிநகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி ''

என்ற குலசேகராழ்வார் பெருமாள் திருமொழியில் திளைத்து இந்த ராமரை வணங்கி நிற்போம்.