இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 2 சோழவந்தான் ஜனகநாராயணர் F ண்டுக்கல்லிற்கும் மதுரைக்கும் நடுவே மதுரைக்கு 21 A e முன்பாகவே அம

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

2. சோழவந்தான் ஜனகநாராயணர்

F ண்டுக்கல்லிற்கும் மதுரைக்கும் நடுவே மதுரைக்கு 21 A.e. முன்பாகவே அமைந்துள்ள ஊர் சோழவந்தான். செழிப்பான வயல்களும், தென்னம், வாழைத் தோப்புகளும் உள்ள இடம். இங்குள்ள புகழ் பெற்ற பெருமாள் கோவில் ஸ்ரீஜனகநாராயணன் ஆலயம் ராமபிரான் திருத்தலமாகவே கருதப்படுகிறது. ஸீதாப்பிராட்டியின் தகப்பனார் ஜனக மகாராஜா ஒரு ராஜரிஷி. அவருக்கு காட்சி அளித்த மூர்த்தியே இவர் என்று புராண வரலாறு கூறுகிறது. ஜனகருக்குத் தான் வனம் போகு முன்னரே காட்சி அளித்துத் தானே விபவாவதாரத்தில் ராமனாக வந்துள்ளதை உணர்த்திய பெருமானே ஜனகநாராயணப் பெருமாள். ஸந்நிதி கருடனை வணங்கி ஜனக நாராயணப் பெருமாள் ஸந்நிதியில் நுழைந்தால் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராக ஜனகருக்கு காட்சி அளித்தபடியே உள்ளார் ஜனக நாராயணர். உற்சவராகக் கோதண்டராமர் எழில் ததும்பும் வடிவினராக வலப்புறம் ஸீதையுடனும், இடப்புறம் லக்ஷ்மணனுடனும், திருவடியின் கீழ் ஆஞ்சனேய ப்ரபுவுடனும் ஸேவை ஸாதிக்கிறார். தமிழகக் கோவில்களில் எழுந்தருளியிருக்கும் இராமபிரானின் மூர்த்திகள் யாவுமே மிகவும் அழகானவை என்பது இந்த உற்சவ மூர்த்தியைப் பார்த்தால் உணர்ந்து கொள்ளலாம்.

தனி ஸந்நிதியில் ஜனக வல்லித்தாயார் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இவர் ஸந்நிதி பெருமாளுக்கு வலப்புறம் உள்ளது. மதுராந்தகத்தில் கருணாகர ராமபிரானின் கோவிலில் உள்ள தாயாரும் ஜனகவல்லித்தாயாரே. இது ஒரு வியக்கத் தக்க ஒற்றுமையாகும் மூலவர் ஸந்நிதியில் மற்றுமொரு உத்ஸவ மூர்த்தியாக ஸ்ரீநிவாஸப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் உள்ளார். இவரது மூலவர் வெளியே தெற்கு நோக்கி ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் ஸேவை ஸாதிக்கிறார். மூலவர் ஸந்நிதியில் ஆழ்வார்களின் உற்சவ மூர்த்திகள், ராமானுஜர், சக்கரத்தாழ்வார் உள்ளனர். ந்ருஸிம்ஹரும், விஷ்வக்ஸேனரும் தனி ஸந்நிதிகளில் உள்ளனர். திருவுக்கு திருவாக ஆண்டாள் நாச்சியார் எழில் கொண்டையுடன் தனி ஸந்நிதியில் காட்சி. உற்சவ மூர்த்தியும் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளது.

இந்தக் கோவிலின் அருகே சுமார் 15 A.e. தொலைவில் குருவித்துறை என்ற ஊரில் சித்திர ரத வல்லபப் பெருமாள் கம்பீரமாக நின்ற கோலத்தில் ஸேவை அளிக்கிறார். இவர் குருபகவானின் தவத்தை மெச்சி, நேரில் வந்து அவருக்குத் தன் ரதத்தோடு காட்சி அளித்தவர். மற்றும் சோழவந்தானில் ஜனகமாரியம்மன் கோவிலும், ஸ்ரீ ஐயப்பனுக்கு ஒரு கோவிலும், சிவாலயமும் உள்ளன. ஜனகவல்லித் தாயார் உடனுறை ஜனகநாராயணர் கோவிலை விட்டு வெளியே வரும்போது ஸத்குரு த்யாகராஜரின் ஈசமனோகரி ராக கீர்த்தனை வரிகளே நம் நினைவுக்கு வருகின்றன.

ஸ்ரீ ஜானகி மனோகர ஸ்ரீ ராகவ ஹரி