இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 1 திருப்புல்லாணி தர்ப்பசயன ராமர் பா ற்கடலில் பள்ளி கொண்ட பரமனின் அவதாரமான ராமப

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத்

திருக்கோயில்கள்

1. திருப்புல்லாணி தர்ப்பசயன ராமர்

பா ற்கடலில் பள்ளி கொண்ட பரமனின் அவதாரமான ராமபிரானின் தர்ப்பசயன ராமபிரான் தனி ஸந்நிதியில் மூலவராகத் தர்ப்பசயகோலத்தைக் கடற்கரை தலமான திருப்புல்லாணி நமக்கு இன்றும் காட்டி அவனே இவன் என்ற தத்வத்தை உணர்த்துகிறது. சென்னை ராமேஸ்வரம் இருப்புப்பாதையில் மானாமதுரை அடுத்து வரும் ராமநாதபுரம் சந்திப்பிலிருந்து சுமார் 10 A.e தொலைவில் உள்ள இந்தத்தலம் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. ஆக்னேய புராணத்தில் இத்தலத்தின் வரலாறு இடம் பெற்றுள்ளது. இங்கேன கோலத்தில் கத்தியை வைத்துக் கொண்டு மாவீரனாகக் காட்சி அளிப்பதால் இவரை வீர சயனர் என்று கூறுவது வழக்கம். ஆதிசேஷன் மேல் சயனித்துள்ளதால் லக்ஷ்மணனே இங்கு ராமபிரானுக்குப் படுக்கையாகப் பணி செய்வதாக வரலாறு.

புராண வரலாற்றின் படி ராமபிரான் புல்லினைப் பரப்பி அதன் மேல் சயனம் கொண்டதால் புல்லனை என்று வழங்கப் பெற்ற இத்தலம் நாளடைவில் மருவி புல்லாணி ஆயிற்று. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கல்யாண ஜகந்நாதப் பெருமாளை வழிபட்டு அவர் அளித்த வில்லினாலேயே ராமர் ராவணனை வென்றதாகக் கூறுவர். ஸமுத்ரராஜன் தன் மனைவிமார்களுடன் ராமபிரானிடம் சரணம் புகுந்த தலமாதலாலும், ராவணணின் ஒற்றர்களாக வந்த சுகரும், சாரங்கரும் ராமபிரானால் மன்னிக்கப்பட்டு காக்கப்பட்டதாலும் இதை ஒரு சரணாகதி தலம் என்றே கருதலாம். மற்றும் புல்லாரண்யர், கண்வர் என்ற முனிவர்களும் ராமபிரானைச் சரணடைந்து முக்தி அடைந்ததாகவும் வரலாறு. தஞ்சம் அடைந்த விபீஷணனுக்குச் சக்கரவர்த்தித் திருமகன் தம்பி லக்ஷ்மணனைக் கொண்டு போருக்கு முன்பாகவே முடி சூட்டி மகிழ்ந்ததும் இந்தத் தலத்திலேதான் மக்கட் பேறு வேண்டுவோர் இத்தலத்தில் கடலில் நீராடி, கோவிலில் அளிக்ககப்படும் பாயஸத்தை அருந்தினால் புத்திர பாக்யத்தை அடைவர் என்பதும் புராணம் காட்டும் உண்மையாம். ராமபிரான் வீர சயனம் மேற்கொண்டுள்ள ஸந்நிதிக்கு மேலுள்ள விமானம் புஷ்பக விமானம் என்றழைக்கப்படுவதால் புராணத்துடன் இத்தலத்திற்குள்ள தொடர்பு மேலும் நன்கு வெளிப்படுகிறது.

மூலவரான தர்ப்பசயன ராமருக்கு முன்பாக உத்ஸவராகக் கோதண்டராமர் ஸீதை, லக்ஷ்மணன், ஹனுமன் ஆகியோருடன் நின்ற திருக்கோலத்தில் ஸேவை தருகிறார். தர்ப்ப சயனரின் ஸந்நதிக்கருகிலேயே ராமபிரானின் மற்றொரு ஸந்நிதியில் பட்டபிராமனாக மூலவராக நின்ற திருக்கோலத்தில் ஸீதை, லக்ஷ்மணர் ஆஞ்சனேயருடன் உள்ளார். ராஜகோபுரத்துடன் கூடிய இக்கோவிலில் கல்யாண ஜகந்நாதர் என்ற திருநாமத்துடன் ராமபிரானுக்கு வெற்றி அருளிய பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். தாயார் பத்மாசனி தனி ஸந்நிதியிலுள்ளார். மற்றும் ஆண்டாள், ஸந்தான கோபாலன், மணவாள மாமுனிகள், ஆழ்வார்கள் ஆகியோருக்குத் தனி ஸந்நிதிகள் உள்ளன. இந்தத்தல வ்ருக்ஷமாகிய அரசமரத்தினடியில் நாகப்ரதிஷ்டை செய்வது புத்ரப் பேற்றை அளிக்கும் என்பதால் நாகர் ஸந்நிதியும் இக்கோவிலில் உள்ளது.

ராமபிரானின் குல தெய்வமான ரங்கநாதர் கிடந்தவண்ணராகவும், அவரை வழிபட்ட ஸ¨ரிய குலத்தோன்றல் ரகுவீரன் நின்ற வண்ணராகவும் திகழ்ந்தது பல தலங்களில். ஆனால் இந்த ஒரு தலத்தில் தான் ராமபிரான் கிடந்த வண்ணராகவும், அவருக்கு அருள் பாலித்த ரங்கநாதர் நின்ற கோலத்தில் ஜகந்நாதராகவும் ஸேவை தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இதனுடன் தொடர்புடைய மற்றொரு தலம் தேவிப்பட்டினம், இதற்கருகிலேயே உள்ளது. அங்குறைபவரும் ஜகந்நாதப் பெருமானே. ஆனால் திருப்புல்லாணியே ராமபிரானின் திருத்தலம். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட இந்தத் திருப்புல்லாணி தொடர்புடைய ஒரு பாசுரத்தை நினைவில் கொள்வோம்.

வில்லால் இலங்கை மலங்கச் சரம் துரத்த

வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்

எல்லாரும் என் தன்னை ஏசிலும், பேசிடினும்

புல்லாணி யெம் பெருமான் பொய் கேட்டிருந்தேனே.