வைகுண்ட ஏகாதசியின் மகிமை ஏகாதச்யாம் து கர்த்தவ்யம் ஸர்வேஷாம் போஜ நத்வயம்மி சுத்தோபவாஸ:ப்ரதம: ஸத்கதாச்ரவணம் தத:மிமி ''ஹே ஜனங்களே! ஸகல பிராணிகளே! ஏகாதசி புண்ணிய காலத்தன்ற

வைகுண்ட ஏகாதசியின் மகிமை

ஏகாதச்யாம் து கர்த்தவ்யம் ஸர்வேஷாம் போஜ நத்வயம்மி

சுத்தோபவாஸ:ப்ரதம: ஸத்கதாச்ரவணம் தத:மிமி

''ஹே ஜனங்களே! ஸகல பிராணிகளே! ஏகாதசி புண்ணிய காலத்தன்று ஸர்வ பிராணிகளும் செய்ய வேண்டி காரியங்கள் இரண்டு;முதலாவது - சுத்தோபவாஸம்;இரண்டாவது இரவும் பகலும் ஸத்கதா ச்ரவணம்;இந்த இரண்டைத் தவிர மற்றொரு காரியத்தில் அன்று, வேறு காரியத்தில் ஒரு பிராணியும் பிரவிருத்திக்கக் கூடாது. அன்று பகல் இரவு இரு வேளைகளிலும் அன்ன போஜனமும் செய்யக் கூடாது. அப்படிச் செய்தவனுக்கு, சாஸ்திரத்தில் மகாபாவம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தச் சாஸ்திரத்தை அடியிற் கண்டபடி அறிக.

மாத்ருஹா பித்ருஹா சைவ ப்ராத்ருஹா ததா I

ஏகாதச்யாம் து யோ புங்க்தே பக்ஷயோருபயோரபி II


என்ற மநு வசனமே பிரமாணமாகும்.

சுக்லபக்ஷமோ கிருஷ்ணபக்ஷமோ இரண்டு பக்ஷங்களிலும் ஏற்படும் ஏகாதசி தினத்தில் எந்தப் பிராணி புஜிக்கிறானோ, அவன் தாயைக் கொன்றவனாகவும், தகப்பனைக் கொன்றவனாகவும், சகோதரனைக் கொன்றவனாகவும், தத்துவோபதேசம் செய்த ஆசார்யனைக் கொன்றவனாகவும் ஆகிறான் என்பது மேற்கண்ட சாஸ்திரத்தின் தாத்பரியமாகும்.

இவ்விதம் மஹா கோரமான பாவத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால் இரண்டு பஷங்களிலும் ஏகாதசி தினத்தில் உபவாச தினத்தை அநுஷ்டிக்க வேண்டும். உபவாஸம் என்ற சப்தத்தின் பொருளோ உப ஸமீபே வாஸயதி இதி உபவாஸ : என்ற ஸமாஸத்தை அநுசரித்து, விஷ்ணுவினுடைய ஸமீபத்தில் தன் மனத்தை வஸிக்கும்படி, அதாவது இரவும் பகலுமாக விஷ்வினுடைய கதாச்ரவணமோ, விஷ்ணுவினுடைய நாம ஸங்கீர்த்தனமோ, விஷ்ணுவினுடைய ஸ்வரூப த்யானமோ செய்துகொண்டு அன்று காலத்தைக் கழிக்க வேண்டும்.

நாத்யச்நதஸ் து யோகோஸ்தி ந சைகாந்தமநச்நத : என்ற வாக்கியத்தை அநுசரித்து, அமிதமாக, அளவு கடந்த புஜிப்பவனுக்கோ, ஸர்வ ப்ரகாரத்திலும் ஆஹாரம் செய்யாமலிருப்பவனுக்கோ தியானயோகம் ஸித்திக்காது என்று தெரிகிறபடியால், ஏகாதசி தினத்தன்று விருத்தர்களோ பாலர்களோ, அவர்கள் பழத்தையோ க்ஷீரத்தையோ அல்பமாக உட்கொள்வதனால் தோஷம் ஏற்படாது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். ஏகாதசி விரதத்தின் மகிமை மிகவும் உயர்ந்ததாக ஸ்ரீமத் பாகவதாதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸுர்ய வம்சத்தில் அம்பரீஷன் என்ற அரசன் இருந்தான். அந்த ராஜன் விஷ்ணு பக்தர்களுக்குள் பெரிய பக்தனும் ஆவான். அந்த மகாநுபாவன் ஏகாதசி தினத்தன்று சுத்தோபவாஸம் இருந்து, ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம் இந்த உபாயங்களால் மகாவிஷ்ணுவை ஸ்வாதீனமாகச் செய்து கொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்துவந்தான். பகவானான மகாவிஷ்ணு அவனுடைய மேலான பக்தியைப் பார்த்து, அவனுடைய ராஜாங்கத்தை ரக்ஷிப்பதற்காக,

அநந்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜநா:பர்யுபாஸதேமி

தேஷாம் நித்யாபியுக்தாநாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்மிமி

என்று தாம் செய்த பிரதிக்கினையை அநுஸரித்து, அந்த ராஜனுடைய அரண்மனை வாசலில், தம் ஸுதர்சன சக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து அந்த ராஜனை ரக்ஷித்து வந்தார். அதனால் அந்த ராஜனுக்கு ஸாமந்த ராஜாக்கள் மூலமாக ஒருவிதப் பீதியும் ஏற்பட நியாமில்லாமல் ஆகிவிட்டது.

இப்படி இருக்கும் பொழுது ஒரு ஏகாதசியன்று வழக்கம் போல் சுத்தமான உபவாசத்தை அநுஷ்டித்து பகவானான விஷ்ணுவைக் கிரமப்படி ஆராதித்துவிட்டு, மறு தினத்தில் துவாதசி காலபாரணையைச் செய்ய ஸித்தமாக இருந்தான். அன்றைத் துவாதசியோ, மூர்த்தார்தாவாசிஷ்டாயாம் த்வாதச்யாம் பாரணாம் வ்ரதீ என்ற வாக்கியத்தை அநுசரித்து, ஸ¨ரியன் உதித்து ஒரே நாழிகை மட்டும் துவாதசி மீதியாக இருந்தது. ஏகாதசி வ்ரத பல ஸித்தி துவாதசியில் பாரணை செய்தால்தான் பூர்த்தியாகும். த்ரயோதசி FF வந்தால் பகல்போஜனத்தைத் தர்மசாஸ்திரம் நிஷேதித்திருக்கிறது.

த்ரயோதஸ்யாம் திவாபுக்திர் ப்ரஹ்மஹத்யாஸமா ஸ்ம்ருதா I

ப்ரதோஷ சிவமாராத்ய ராத்ரிபுக்திர் விமுக்கிதா II

என்ற ஸ்ம்ருதி ப்ரகாரம் திரயோதசி திதியில் பகலில் போஜனம் செய்தால், ப்ரமஹத்தி தோஷமும், ஸாயங்காலத்தில் பரமேஸ்வரனைப் பூஜித்துவிட்டு ராத்திரியில் ப்ரதம ஜாமத்தில் போஜனம் செய்வது மோக்ஷம் என்ற பலனைக் கொடுக்கக் கூடியதென்றும் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. இந்தச் சாஸ்திரத்தை அம்பரீஷ மகாராஜா அறிந்தவனாதலால் ஒரு நாழிகை மட்டும் புச்சம் இருக்கும் துவாதசிக்குள் பாரணை செய்யவேண்டுமென்ற ஆவலுடன், எல்லா அநுஷ்டானங்களையும் அதற்குள் முடித்துக்கொண்டு, பாரணை செய்ய ஸித்தனானான் .

அந்தத் தருணத்தில், துர்வாஸ மகரிஷி தம் சிஷ்யர்களுடன் ராஜனுடைய கிருஹத்தில் போஜனம் செய்ய வேண்டுமென்ற விருப்பமுள்ளவராக அதிதியாக வந்து சேர்ந்தார். ராஜன் பரம பக்தியுடன் துவாதசி புண்ணியகாலத்தில், சிவபக்த அக்ரேஸரரான துர்வாச மஹரிஷி போஜனத்தைக் கருதி வந்தது நமது பெரிய பாக்கியத்தை ஸ¨சிக்கிறது என்று ஆனந்தித்து, மஹரிஷியை வரவேற்று உபசரித்தான். மஹரிஷியோ, தாம் மாத்யாஹ்நிக ஸ்நானம் செய்யவேண்டுமென்ற ஆவலுடன் ராஜனிடம் அதைத் தெரிவித்துவிட்டுத் தம் சிஷ்யர்களுடன் ஸரயூ நதிக்குச் சென்றார்.

ராஜன்,''துவாதசி அல்பமாக இருப்பதானால், சீக்கிரம் தங்கள் ஆகமனத்தை எதிர்பார்க்கிறேன்''என்று பிரார்த்தித்தான். மஹரிஷி, ''ஒரு க்ஷணத்திற்குள் வருகிறேன்''என்று சொல்லிவிட்டு நதிக்குச் சென்றார். சொன்னபடி மஹரிஷி துவாதசி முடிவதற்குள் வரவில்லை. ராஜனோ, துவாதசி போய்விடுமே என்று கவலையை அடைந்தான். துவாதசி பாரணை செய்யாமற் போனாலோ, ஏகாதசி வ்ரதபலன் ஸித்திக்காது என்று சொன்னோம். அதற்காக, அசிதம் ச அநசிதம் ச பவதி என்ற சாஸ்திரமானது, ஸாளக்ராம அபிஷேக தீர்த்தத்தை ஒரு உத்தரணி உட்கொண்டால், துவாதசி பாரணை செய்த பலனும் ஸித்திக்கும்;அதிதியை விட்டுப் போஜனம் செய்தான் என்ற தோஷமும் வராது என்ற தாத்பர்யத்தைக் கூறுகிறபடியால் அதை அநுசரித்து ஸாளக்ராம தீர்த்தத்தை ப்ராசனம் செய்து ஏகாதசி விரத பலன் ஸித்திக்கும்படியாகவும் செய்துகொண்டு, அன்ன போஜனத்திற்காகத் துர்வாஸ மஹரிஷியை எதிர்பார்த்துக்கொண்டு வந்தான்.

மஹரிஷி சிஷ்யர்களுடன் சற்று நேரம் கழித்து வந்து, ஸாளக்ராம தீர்த்தத்தை ராஜன் ப்ராசனம் செய்ததற்காக, ''மகா தபஸ்வியான என்னை முதல்முதலில் பூஜிக்கச் செய்யாமல் c பாரணை செய்தது தவறு''என்று கோபித்துச் சபிக்க ஆரம்பித்தார்.

ராஜன் எவ்வளவோ அவருடைய காலில் விழுந்து மேற்காட்டிய சாஸ்திர வசனத்தையும் பிரமாணமாக அவரிடம் நிரூபணம் செய்து, ''ஸாளக்ராம தீர்த்தத்தை மட்டும் நான் ப்ராசனம் செய்தேன்; அன்ன போஜனம் நான் செய்யவில்லை;க்ஷமித்துக்கொள்ள வேண்டும்''என்று கெஞ்சிக் கதறியும் துர்வாஸ மஹரிஷி கொஞ்சமேனும் பொறுமையை அடையாமல் பரம கோபத்தை அடைந்து தம்முடைய ஜடையைத் தட்டி அதிலிருந்து ஒரு பிசாசை (பூதத்தை) த் தபோமஹிமையினால் ஸ்ருஷ்டித்து, ராஜனைப் பக்ஷிக்கும்படி ஏவினார். உடனே ராஜனுடைய யோகக்ஷேமத்தை வஹிக்க, பகவானான விஷ்ணுவினால் அரண்மனை வாசலில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த சக்கரம், தான் ராஜனை ரக்ஷிப்பதற்காக ஆக்ரோஷத்தை அடைந்து, துர்வாஸரால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிசாசைத்தான் பக்ஷிப்பதற்கு சப்தித்துக்கொண்டு வெளிக்கிளம்பிற்று. பிசாசோ, துர்வாஸ மஹரிஷியினிடம் சென்று, ''விஷ்ணு பக்தனான அம்பரீஷணிடம் நான் பிரவேசிக்கச் சக்தியற்றவனாகி விட்டேன்;ஸுதர்சன சக்ரம் என்னை விரட்டிக்கொண்டு வருகிறது. அந்தச் சக்கரத்துடன் எதிர்த்துப் போராட எனக்குச் சக்கி இல்லை. என் பசியையோ அடக்கவும் முடியவில்லை. எனக்கு ஆஹாரம் இப்பொழுது தேவையாக இருக்கிறது. உம்மையே நான் பக்ஷிக்கிறேன்''என்று செல்லி, துர்வாஸரையை பலாத்காரம் செய்து பக்ஷிக்க ஆரம்பித்தது.

துர்வாஸ மஹரிஷி தமது தபோமஹிமையால் விஷ்ணு பக்தனைக் கொல்லப் பிசாசை ஸ்ருஷ்டித்தாரே தவிர, அதை உபஸம்ஹாரம் ஹாரம் செய்யச் சக்தியற்றவராக ஆகிவிட்டார். தம் சிஷ்யர்களோடு துர்வாஸ மஹரிஷி பிசாசுக்குப் பயந்து ஓட ஆரம்பித்துவிட்டார். பிசாசோ துர்வாஸரை விரட்டிக்கொண்டு ஓடுகிறது. பிசாசையோ ஸுதர்சன சக்ரம் பக்ஷிக்க விரட்டுகிறது. இவ்வித துர்வாஸ மஹரிஷி ஒரு லோகம் மீதியின்றி ஓடியும், தம் ஆத்மாவைத் தாம் ரக்ஷித்துக்கொள்ளக் கஷ்டப்பட்டும் முடியவில்லை. இந்திரலோகம், பிரம்மலோகம், கைலாஸம் முதலான ஸ்தலங்களுக்குச் சென்று, தம்மைக் காப்பாற்றத் தமக்கு யாராவது உதவி செய்வானோ என்று எதிர்பார்த்தும், ஒருவராலேயும் இவரை, இவர் ஸ்ருஷ்டித்த பிசாசினின்றும் ரக்ஷிக்க முடியாமல் ஸுதர்சன சக்ரத்திற்குப் பயந்து பின்வாங்கிவிட்டார்கள். கடைசியில் வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவின் காலில் விழுந்தார். பகவானான விஷ்ணு, அஹம் பக்தபராதீந:என்றதனால், ''ஹே பிராம்மணா!நான் பக்தனுக்கு உட்பட்டவன். உம்மை ரக்ஷிக்கும் விஷயத்தில் எனக்கு ஸ்வாதந்த்ரியம் இல்லை. சரணாகதி செய்தவனை நான் ரக்ஷிக்கிறேன் என்று சொன்னதும், எனக்கு நேரில் அபசாரம் செய்தவனைக் குறித்து மட்டுமே தவிர, என் பக்தனுக்கு அபசாரம் செய்தவனைக்கூட, என்னை சராணகதி செய்ததற்காக, நான் ரக்ஷிக்கிறேன் என்று அதற்கு அர்த்தமில்லை. ஆகையால், என்னால் ஒன்றும் ஸாத்தியமில்லை. அம்பரீஷனிடம் போம்''என்று துர்வாஸ மஹரிஷியை மஹாவிஷ்ணுவும் கைவிட்டுவிட்டார்.

துர்வாஸ மஹரிஷி கதியில்லாமல் அம்பரிஷி மகாராஜனிடத்தில் சிஷ்யர்களுடன் சரணாகதி செய்ய வந்தார். ராஜனோ, ''பிராம்மணோத்தமர்கள் தாங்கள். என்னைத் தாங்கள் சராணாகதி செய்யக் கூடாது. நான் எந்த அபராதமும் செய்யவில்லையே;தங்களைப் போன்ற தபஸ்விகளுக்கு இவ்விதம் கோபம் வரலாமா?''என்று சொல்லி க்ஷமாபணம் செய்துவிட்டு, மஹரிஷியின் காலில் விழுந்து ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து, திவ்ய போஜனாதிகளைச் செய்து வைத்து, துர்வாஸ மஹரிஷியினால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிசாசையும் தன் பக்திமகிமையினால் உபஸம்ஹாரம் செய்து, ஸுதர்சன சக்ரத்தையும் பொறுத்துக்கொள்ளும்படி பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டு, பிராம்மணோத்தமருடைய ஆசீர்வாதத்திற்கும் பாத்திரமானான்.

இந்தக் கதை ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏகாதசி விரதத்தை அநுஷ்டித்தவனுக்கு மகாவிஷ்ணு ஸுலபமாகிறார் என்பதே இந்தக் கதையின் தாத்பர்யமாகும். விரதங்களுக்குள் ஏகாதசி விரதமே நித்ய விரதமாயும், உயர்ந்த விரதமாயும் ஆகும். ஸர்வ பிராணிகளும் அதை அநுஷ்டித்தே தீரவேண்டும். அந்த விரதத்தை அநுஷ்டிக்கிறவர்களுக்கு மோக்ஷம் கையிலுள்ள நெல்லிக்கனி போல் ஸுலபமாகக் கிடைக்கும்.

ஏகைவ தஸா அவஸ்தா யஸ்யாம் திதௌ வ்ரதாநுஷ்டாநதத்பராணாம் நரணாம் ஏகாதசீ என்ற ஸாமஸத்தை அநுசரித்து, எந்தத் திதியில் மேற்சொன்ன விரதத்தை அநுஷ்டிக்கிற மனிதர்களுக்கு முக்தி என்ற ஒரே நிலையைத் தவிர வேறு பிறப்பு இறப்பு என்ற அவஸ்தை இல்லாமல் ஆகுமோ அந்தத் திதிக்கு ஏகாதசி பெயர் ஏற்ப்பட்டது என்று தெரிகிறபடியால், அந்தத் திதியில் உபவாஸம் என்ற விரதத்தை அநுஷ்டிப்பவர்களுக்கு மோக்ஷம் என்ற பரம புருஷார்த்தம் கைக்கு எட்டினதாகவே ஆகிறது என்பது ஸித்தமாகிறது.

அதிலும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமானது. மற்ற ஏகாதசிகளில் உபவாஸம் முதலான விரதத்தை அநுஷ்டானம் செய்யாமல் தவறினவர்கள், வைகுண்ட ஏகாதசியன்றாவது அந்த விரதத்தை அநுஷ்டித்தார்களேயானால், மற்ற ஏகாதசிகளிலும் விரதாநுஷ்டானம் செய்தவர்களாகவே அவர்களைக் கருதி வைகுண்டததில் நித்யஸ¨ரிகளுடைய பதவியை அளிப்பதில் பகவான் நியதராக இருக்கிறார். ஒவ்வொரு வருஷத்திலும், தனுஸ்ஸில் ஸ¨ரியன் இருக்கும்பொழுது சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியன்று மகாவிஷ்ணு தம் சயனமான ஆதிசேஷ பகாவனிடமிருந்து யோகநித்தியிலிருந்து விழித்துக் கொண்டு, எவர் எவர் விரதாநுஷ்டானம் செய்தவர்கள், மோக்ஷத்தை யாருக்கு அளிக்க வேண்டும் என்று கவனிக்கும் தினமானதால், அன்றாவது இந்த விரதத்தை அநுஷ்டித்து, மகாவிஷ்ணுவினுடைய ப்ராஸத்திற்குப் பாத்திரராக வேண்டுமென்று கோருகிறோம்