கண்ணனின் பேருதவி துலாபர யுகத்திலே ஸாக்ஷ£த் ஸ்ரீமத் நாராயணன் பூபாரத்தைக் குறைக்கும் பொருட்டு ஸ்ரீ கிருஷணராகத் திருவவதாரம் செய்தார் அவர் கபட நாடக சூத்ரதாரி ஆதனா

கண்ணனின் பேருதவி

துலாபர யுகத்திலே ஸாக்ஷ£த் ஸ்ரீமத் நாராயணன் பூபாரத்தைக் குறைக்கும் பொருட்டு ஸ்ரீ கிருஷணராகத் திருவவதாரம் செய்தார். அவர் கபட நாடக

சூத்ரதாரி. ஆதனால், ஒருத்தி மகனாய், தேவகியின் திருவயிற்றிலே பிறந்து, ஒருத்தி மகனாய் யசோதைப் பிராட்டியின் திருமாளிகையிலே ஆயர்பாடியிலே வளர்ந்து வந்தார். ஆயர்பாடி மக்கள் செய்த மகத்தான புண்ணிய வாசத்தினாலே அவர்களிடையே வளர்ந்து பல லீலா விநோதங்களைச் செய்து அவர்களை மகிழ்வித்தார்.

சின்னஞ்சிறு குழந்தைக் கிருஷ்ணன் ஆயர்பாடியிலே எப்படி எப்படி எல்லாம் விளையாடி எல்லோரையும் மகிழவைத்தான் என்பதை விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வார் தன்மை யசோதைப் பிராட்டியாகவே கற்பனை செய்து கொண்டு வெகு அழகாகவும் சுவையாகவும கூறுகிறார்.

குழந்தைக் கண்ணன் அழுது அடம் பிடிக்கிறான். குழந்தைக்குத் தூக்கக் கண் போலும். பாவம். துளியில் போட்டுத் தூங்கப் பண்ணுவோம் என்று எண்ணி, யசோதை கண்ணனைத் துளியில் போட்டு ஆட்டுகிறாள். ஆனால் அந்தப் பொல்லாத கண்ணன் தூங்கினானா. ஊஹ§ம். துணியே கிழியும் வண்ணம் கை கால்களை ஆட்டி உதைக்கிறான். சரி. இடுப்பிலே எடுத்துக்கொண்டு விளையாட்டுக் காட்டலாம் என்று குழந்தையை தூளியிலிருந்து எடுத்து இடுப்பிலே வைத்துக்கொண்டான். அப்பப்பா என்ன கனம், என்ன கனம் அடியம்மா பார்த்தால் சின்னஞ்சிறு குழந்தையெனத் தொற்றமளிக்கும் அவன் எவ்வளவு கனம் கனக்கிறான். அதுதான் போகட்டும். மார்புடன் அனைத்துத் தூங்கவைக்கலாம் என்றாலோ, தன் குஞ்சுக்கால்களால் என் வயிற்றை எப்படி உதைக்கிறான் தெரியுமா. அடியம்மா, அவனுடைய துடுக்குத் தனத்தையும் போக்கிரித்தனத்தையும் சகித்துக் கொள்ளும் சக்தி இல்லாமல் நான் எப்படி மெலிந்து நொந்து போகிறேன் தெரியுமாடி தோழி

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

எடுத்துக் கொள்ளில் மறுக்கை இறுத்திடும்

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்

மிடுக்கு இலாமையால் மெலிந்தேன் நங்காய்.

கண்ணனின் பொல்லாத்தனத்தையும் போக்கிரித்தனத்தையும் தன் தோழியிடம் கூரிக்கொள்வதில் யசோதைத் தாய்க்கு ஒர் அலாதிப்பெருமிதம் உண்டாகத்தான் செய்கிறது. ஏன் இராது.

நம் வீட்டுத் தாய்மார்கள்கூட, தங்கள் குழந்தைகள் செய்யும் விஷமத்தனத்தைப்பற்றிப் பிறரிடம் கூறுவதில் ஒருவித பெருமை கொள்கிறார்கள் என்பதைக் காண்கிறோம்.

அம்மம்மா. இந்தப் பொல்லாதப்பயல் செய்யும் விஷமம் கொஞ்சமா. நஞ்சமா. என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. சற்று ஏமாந்தால் போதும். என்று தாய்மார்கள் கூறும்போது மேலுக்கு, குழந்தையின்மீது குற்றம் சுமத்துவது போலிருக்குமே தவிர, ஆழ்ந்து நோக்குங்கால், தாயின் கூற்றில் பெருமை

தொழிப்பதை உணரலாம். கண்ணன் சின்னஞ்சிறு பாலகனாய்த்தான் ஆயர்பாடியிலே வளர்ந்தான். விளையாடினார். ஆயினும் அவருடைய சொல்லும் செயலும் அவருடைய வயதுக்கு மீரியதாக இருந்தன. அதிலிருந்தே அவர் அமானுஷ்மமான சக்தி பெற்றிருக்கின்றார் என்பது புலமை.

ஒரு சின்னஞ் சிறு குழந்தையான கண்ணன் தன்னைக் கொல்லவந்த பூதனை என்ற மஹாபயங்கர அரக்கியின் முலைப்பாலை உறிஞ்சும் வியாஜமாய் அவளுடைய உயிரையே உறுஞ்சினான் என்றால், அது ஒரு சாதாரணக் குழந்தையின் செய்லாகுமா.

தாய் முளைப்பாலில் அமுதிருக்கத் தவிழ்ந்து தளர்நடையிட்டுச் செனறு

பேய் முலை வாய் வைத்து நஞ்சுண்டு

எனறு ஆழ்வார் கூறுவதுப்போலப் பூதனையின் முலைப்பாலில் உள்ள விஷத்துடன் அவளுடைய உயிரையும் உண்டான் கண்ணன்.

அதே கண்ணன் செய்த இன்னெரு அதியாச்சார்யகரமான செயலைக் குறிப்பிடாமலிருக்க முடியுமா. இந்திரனுக்கென்று ஆர்யபாடி மக்கள் தொன்று தொட்டு நடத்திவந்த இந்திர விழாவினை, கண்ணன் நிறுத்திவிட, அது காரணம் பற்றிக் கோபமுற்ற இந்திரன் மேகக் கூட்டங்களை ஏவி மழயை கல்மாரி பொழிய வைத்தான் ஏழு தினங்கள். அவனுடைய ஆத்திரமானது அவனுடைய அறிவை மறைத்து விட்டது. எனவே, ஆயர்பாடி மக்களுக்குப் பேருதவி புரிந்து வரும் ஸ்ரீ கிருஷ்ணருடைய அமானுஷ்யமான சக்தியையும் மகிமையையும் உணரக்கூடிய அறிவை இழந்தான். கடைசியில் என்ன ஆயிற்று. கோவர்தனகிரியை அநாயசமாகத் தன் சுண்டு விரலால் தூக்கி, அதன் அடியில் தன் மக்களையும் கோக் கூட்டங்களையும் காத்து ரட்சிதது மட்டுமின்றி, நன்றியை மறந்த அந்த இந்திரனுக்கும் ஒரு பெரும் பாடத்தைடும் கற்பித்தான் கண்ணன்.

கடுங்கடல் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கென்று படுங்கடல்

நீயே சரண் என்று ஆயர்கள் அஞ்ச அஞ்சாமுன்,

நெடுங்கடல் குன்றம் குடையன்று ஏந்தி நிரையச் சிரமத்தால்

நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் நமோ நாராயணமே.

இக்கருத்தை பெரியாழ்வார் இப்படிக் கூறுகிறார்.

வழுவெனறு மில்லாச் செய்கை வானவர் கோன்

வலிப்பட்டு மூனிந்து விடுக்கப்பட்ட

மதுசூதனன் எடுத்து மளித்த மலை

இதெல்லாம், ஆயர்பாடியிலே கோபாலர் மத்தியிலே, நந்த கோபாலருக்கும் யசோதாவுக்கும் மகனாய்க் கபட நாடக சூத்ரதாரியாக வாழ்ந்த ஸ்ரீ கிருஷ்ணர் சாதாரண குழந்தையல்ல. சாக்ஷ£த் திருமாலே அப்படித் திருவவதாரம் செய்து தம் அமானுஷ்யமான செய்கையைக் காட்டினார் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தும் செய்திகள்.

இன்னோரு சமயம், தம் சகாக்களுடனும், ஆடுமாடுகளுடனும் கண்ணன் காட்டிலே தொலைதூரம் சென்றார். வெயிலின் கொடுமை தாங்காமல் சகாக்கள் ஓலமிட்டார்கள்.

கண்ணா, எங்களால் வெயிலின் கடுமையைத் தாங்க முடியவில்லையே.

கால்கள் பொறிந்து போகின்றனவே. c தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். என்று கண்ணனைச் சூழ்ந்து கொண்டு கதறிக்கூவும் தன் சகாக்களைக்கண்டு கண்ணன் கூரினன். என் அன்புத்தோழர்களே, கவலைப்படாதீர்கள், அதோ ஒரு மரம் தெரிகிறது பாருங்கள். எல்லோரும் அங்கே அதனடியில் தங்கி அந்நிழலில்

இளைப்பாறலாம் வாருங்கள்.

சற்று நேரத்தில் எல்லோரும் அந்த மரத்தின் அடியிலே சென்று அதன் நிழலிலேயே தங்கி ஆனந்தமாய் இளைப்பாற்றினார்கள்.

கண்ணா. ஆகா. இந்த நிழல் எங்களுக்கு எவ்வளவு ஆனந்தமாய் இருக்கிறது. எங்களுக்குத் தோழனாய் உன்னை அடைய நாங்கள் எத்தனை கொடுத்து வைத்திருந்தோம். எங்களுக்குத்தான் c எப்படி எப்படி எல்லாம் சமய சஞ்ஜீவிபோல் உதவுகிறாய். உன்னை எப்படிக்கண்ணா, நாங்கள் போற்றுவது என்று புரியவில்லை. c எங்களைப்போன்ற சாதாரணச் சிறுவன் இல்லை. உன்னிடம் ஒர் அலாதியான மகிமை இருக்கிறது. இவ்விதம் கண்ணனைக் கொண்டாடுகிறார்கள் ஆயர்பாடிச் சிறுவர்கள். கண்ணன் அதற்குச் சொன்ன பதில் இது.

என் அருமை நண்பர்களே. என்னை நீங்கள் கொண்டாட வேண்டாம். இப்போது உங்களுக்கு நான் சொல்லப்போவது ஒன்று உண்டு. அதாவது நீங்கள் எல்லோருக்கும் இதோ இந்த மரத்தைப் போல உங்களைத் தியாகம் செய்து கொண்டு பிறர்க்கு உதவ வேண்டும். இந்த மரம், தன்னை அண்டி வருபவர்களுக்குச் சிரம பரிகாரம் பண்ணிக்கொள்ள நிழல் தருகிறது. பூ, காய், பழம், பட்டை, இலை எல்லாம் தந்து உதவுகிறது. எனவே இம்மரத்தை உதாரணத்தை கொண்டு நாம் நம்மால் முடிந்த உதவியைப் பிறர்க்கு செய்யத் தயங்கக் கூடாது.

ஸ்ரீ கிருஷ்ணர் பாலகனாய் இருந்து கொண்டு இப்படி எல்லாம் தம் அமானுஷ்யமான செயல்களை அவ்வப்போது காட்டி, தாம் பரம்பெருள் என்று உணர்த்தினார். அவருடைய செயல்களும் சொற்களும் நம் அஞ்ஞானத்தைப் போக்கி, நம்மை ஞான மார்க்கத்தில் அழைத்துச் செல்லட்டும்.