Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பசு இனம் காக்கப்பட்டது பசுவதையைத் தடை செய்யவேண்டும் என்று கோரித் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்தன அதற்கிணங்க, தமிழ் நாட்டில

பசு இனம் காக்கப்பட்டது

பசுவதையைத் தடை செய்யவேண்டும் என்று கோரித் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. அதற்கிணங்க, தமிழ் நாட்டில் பசுக்கள் கிடரிக் கன்றுகளிள் வதைக்குக் தடை செய்யப்பட்டிருக்கின்றது. பசுவதை காரணமாகக் கிராமங்களில் வசிக்கும் சிறிய விவசாயிகளுக்குக் கிடைக்கும் உபரி வருமானம் குறைவதுடன், சாணம் உரம் கிடைப்பதும் குறைந்துவிடுகிறது என்ற காரணத்தையும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதே போன்ற அரும் பெரும் கருத்தை ஜகத்குரு ஸ்ரீ காமகோடி ஆசார்யசுவாமிகள் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பு கூறியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம்.

காலம் கடந்தாகிலும் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு அரசாங்கம் எடுத்ததற்கு பலகோடி இந்துக்கள் சார்பில், அரசை வாழ்த்துகிறோம். ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மானிலங்களிலும் தடைவரும் என்று செய்தி காண்கிறது. பாரதம் பூராவிலுமே கோவதை தடைசெய்யப்படும் என்பதும் ஆசார்ய வினோபாபாவேயின் மகிழ்ச்சியின் மூலம் அறிய முடிகிறது. பாரததேசம் முழுவதும் படுவதை தடைசெய்யப்படும் நாள் பொன்னான நாளாகும். பசுவின் பெருமையை நாம் சற்று கவனித்தால் இந்த உண்மை விளங்கும். பசுவின் உடலில் சகல தேவதைகளும் குடிகொண்டுள்ளனர். பசுவின் பற்களில் ஸப்த மருந்துகள், நாக்கில் ஸரஸ்வதிதேவி, குளம்புகளிள் மத்தியில் கந்தவர்கள், குளம்புகளின் நுனியில் வாஸுகி போன்ற ஸர்ப்ப ராஜாக்கள் உடலின் ஸந்திகளில் ஸாத்யர்கள், கண்களில் சூர்ய சந்திரர்கள், தொண்டையில் நக்ஷத்திரங்கள், வாலில் தர்மதேவதை, அபானத்தில் ஸகல புண்ணிய தீர்த்தங்கள், கோமூத்ரத்தில் கங்கா நதியும், பல த்வீபங்களால் சூழப்பட்ட நான்கு சமுத்திரங்களும், மயிர்க்காலங்களில் ஸப்தரிஷிகள், கோமயத்தில் மஹா லஷ்மி, ரோமங்களில் ஸகல வித்யைகள், தோலிலும் கேசங்கலிலும் தக்ஷிண உத்தர அயனங்கள் ஆகியவை அடங்கியுள்ளன.

தந்தேஷ§ மருதோ தேவா: ஜிஹ்வாயாம் து ஸரஸ்வதீ l

குரமத்யே து கந்தர்வா: குரக்ரேஷ§ து பந்நகா: ll

ஸர்வஸந்திஷ§ ஸாத்யாஸ்ச சந்த்ராதித்யௌ து லோசநே l

ககுதி ஸர்வநக்ஷத்ரம் லாங்கூலே தர்ம ஆஸ்ரித ll

அபாநே ஸர்வதீர்த்தாதி ப்ரஸ்ராவே ஜாஹ்நவீ நதீ l

நாநாத்வீப ஸமாகீர்ணாஸ் சத்வார: ஸாகராஸ் ததா ll

ரிஷயோ ரோமகூபேஷ§ கோமயே பத்மதாரிணீ l

ரோமஸு ஸத்தி வித்யாஸ் ச த்வக்கேஸேஷ் வயநத்வயம்றீறீ

எங்கே பசுக்கள் உள்ளனவோ அதுவே உலகம், அங்கேயே இந்திரனை முதலாகக் கொண்ட சகல தேவதைகளும் உள்ளனர். அங்கேதான் லக்ஷ்மி வாஸம் செய்கிறாள். சாச்வதமான வேத தர்மங்கள் அங்கேதான் நிலைக்கின்றன. நமக்குப் பிரியமான எல்லா உருவங்களிலும் பசுக்கள் உள்ளன. பசுக்கள் மிக பரிசுத்தமானவை. மங்களகரமானவை. இவ்வாறு புகழ்கொண்ட பசுவைக் கொண்ட பசுவைப் பூஜிப்பவன் எல்லாவகையான பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

யத்ர காவோ ஜகத்தத்ர தேவதேவ புரோகமா:

யத்ர காவஸ் தத்ர லக்ஷ்மி: ஸாங்க்யதர்மஸ்ச ஸாஸ்வத: l

ஸர்வரூபேஷ§ தா காவ: திஷ்யந்த்யபிமதாஸ் ஸதா

காவ: பவித்ரா மாங்கல்யா த்வாநாமபி த்வதா: ll

யஸ்தா: ஸுஸ்ரூஷதே பக்த்யா ஸ பாபேப்ய: ப்ரமுச்யதே ll

இதிலிருந்து பசுக்களின் மேன்மையும் அவைகளைக் கொல்வது எத்தனை பாவச்செயல் என்பதும் சொல்லாமலே விளங்கும். பசுக்களை எப்பாடுபட்டேனும் ரக்ஷிக்க வேண்டியது நம் கடமை என்று ஸ்ம்ருதிகளில் கூறப்படுகிறது.

உஷ்ணே வர்ஷதி ஸ¨தே வா மாருதே வாதி வா ப்ருஸம் l

ந குர்வீத ஆத்மநஸ் த்ராணம் கோரக்ருத்வா து ஸக்தித: ll

கடும் வெயில், மழை குளிர் காற்று இவைகளிலிருந்து பசுவைக் காப்பாற்ற வேண்டியது முக்கிய கடமை. பசுவைக்காத்த பின்பு தான் நம்மைக் காத்துக் கொள்ளவேண்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பசுக்களைக் கொன்றால், கொன்றவன் செய்குகொள்ள வேண்டிய பிராயச்சித்தம் தான் எத்தனை கடுமையானது. பசுவதை மூலம் உபபாதகத்தைத் செய்தவன் ஒரு மாதம் யவை தான்யத்தினாலான கஞ்சியைப் பருக வேண்டும். தலையை மொட்டை அடித்துக் கொண்டு கொண்ற பசுவின் ஈரமான தோலையே கட்டிக் கொண்டு, பகலின் நான்காவது யாமத்தில் உப்பில்லாத ஆகாரத்தை மிதமாக உட்கொண்டு, இரண்டு மாதங்கள் இத்திரியங்களை வயப்படுத்தியவனாய் இருக்கவேண்டும். கோமூத்திரத்திலேயே ஸ்னாநம் செய்து பகலில் பசு செல்லும் இடமெல்லாம் அதாப் பின்தொடர்ந்து சென்று, அதன் புழுதியில் புரள வேண்டும். பசுவைத் தடவிக்கொடுத்து அதற்கு வேண்டிய உபகாரங்களைச் செய்து, பிறகு நமஸ்காரம் செய்ய வேண்டும். இரவில் விழித்திருந்து கொட்டிலில் பசுவின் சமீபம் ஒற்றைக்காலினால் நிற்க வேண்டும். இவ்வாறாக மூன்று மாதங்கள் அனுஷ்டித்தால் எதிர்பாராத விதமாக ஒரு பசுவைக்கொன்ற பாபம் விலகும். ஆகவே தினமும் ஆயிரக்கணக்கில் பசுக்களைக் கொல்வது பற்றி என்ன சொல்வது. பசுவைக் காப்பதில் அரசாங்கத்திற்கும் பொறுப்பு உண்டு. பரீக்ஷித் மன்னன் அரசு பொருப்பை ஏற்ற உடன் ஒரு பசுவும் எருதபம் இரண்டுமாகச் சேர்ந்து ஒரு காலில் நின்று கொண்டு மன்னன் அருகில் தென்பட்டன. ஏன் இந்நிலை என்று மன்னன் கேட்டான். தங்களை மக்கள் அடித்துத் துன்புறுத்துவதாகவும், தர்மம் குறைந்து விட்டதனால்தான் இந்நிலை என்று அவை கூறின. மன்னன் அவைகளுக்கு அபயம் அளித்து, பிறகு நாட்டில் அம்மாதிரி சம்பவம் நேராதவாறு காத்து வந்தான்.

அரசன் பசுக்கள் மேய, கிராம மக்களைக் கலந்து கொண்டு தக்கதான் புல் வளரும் நிலங்களைக் கிராமம் தோறும் நூறுதநுஸ் அளவு கொண்டவைகளைக் ஒதுக்க வேண்டும் என்று ஸ்ம்ருதிகள் கூறுகின்றன.

க்ராம்யேச்சயா கோப்ரசாரோ பூமிராஜவஸேந வா l

தநு: ஸதம் பரீணாஹோ க்ராமே க்ஷேத்ராந்தரம் பவேத் ll

பால் தர சக்தியற்ற வயதான மாடுகளை எதற்கு வளர்பது எனச் சிலர் பேசுகின்றனர். சக்தியற்ற வயதான மனிதர்கள் வாழ்வது இல்லையா? அவ்வாறே பசுக்களையும் ரக்ஷிக்க வேண்டும். குறிப்பாக உபரி வருமானமும், நிலவளமும் உள்ள தேவாளயங்கள்தோறும் கோசாலையை நிறுவி அங்கெல்லாம் சக்தியற்ற மாடுகளுக்கு அபயம் அளிக்க வேண்டும். இதற்கென மக்களிடமிருந்து ஒரு சிறு தொகை கட்டணமும் பெறலாம். தர்மத்தை ஏற்படுத்துவது ஒரு புறமிருக்க லட்சியத்திற்குத் தீங்கின்றி அந்த்த தர்மத்தை ரக்ஷிப்பது மிகவும் புண்யம். அதுபோலப் பசுவதையைத் தடைசெய்த அரசாங்கம், சக்தியற்ற பசுக்கள் யாருயவையாகஇருந்ததாலும், சரணாலயம் ஏற்படுத்தி, அங்கே அவை நிம்மதியாக வாழ வகை செய்யவேண்டும் என்று கேட்டுக்

கொள்கிறோம்.

htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it