Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

தேவியின் மகிமை உலகில் துன்பம் நீங்கிச் சுகத்தை அடையும் பொருட்டு, துக்க காலத்தில் அம்மா என்று தாயை நினைத்துக் கொள்கிறோம் அது ஏன் நம்மைப் பெற்று நமக்குப் பால் கொடுத்து வள

தேவியின் மகிமை

உலகில் துன்பம் நீங்கிச் சுகத்தை அடையும் பொருட்டு, துக்க காலத்தில் அம்மா என்று தாயை நினைத்துக் கொள்கிறோம். அது ஏன். நம்மைப் பெற்று நமக்குப் பால் கொடுத்து வளர்த்தவள் தாய். அதனால் வேதமும் மாத்ரு தேவோ பவ என்று தகப்பனுக்கு முன் தாயை வணங்கு என்கிறது. இந்த ஒரு தேஹத்தை உண்டு பண்ணி வளர்த்த தாயின் மஹிமை இவ்வாறானால் ஜகன்மாதாவான ஸர்வேசுவரியின் மஹிமையை எப்படி அளவிட முடியும். தாய்க்குக் குழந்தையிடமுள்ள HgF, குழந்தைக்குத் தாயிடமுள்ள அன்பைவிடப் பலமடங்கு அதிகரிக்கிறது. கெட்ட புத்திரனுண்டு, கெட்ட தாய் கிடையாது என்பது பழமொழி.

உலகத்திறகு மூலாதரமானது நிர்குண ப்ரஹ்மம். அது முக்குணமுள்ள மாயையின் சேர்க்கையால் ஸகுண ப்ரம்மமாகிறது. ஸத்வகுணத்தால் விஷ்ணுவாகவும் ரஜோகுணத்தால் ப்ரஹ்மாவாகவும் தமோ குணத்தால் ருத்ரனாகவும் ஸகுண ப்ரஹ்மம் வழங்கப்படுகிறது. விஷ்ணுவும் ராவனாதி ஸம்ஹார காலத்தில் சிவமே. சிவனும் பக்தனை பரிபாலிக்கும்போது விஷ்ணுவேயாவர். இது மாத்திரமல்ல. உபாஸகர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு பரப்ரஹ்மமும் லக்ஷ்மீ, ஸரஸ்வதி, கௌரீ என்ற மூனறு vFg ரூபங்களையும் எடுத்துக்கொள்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகினறன. தேவிக்கும் ப்ரஹ்மத்திற்கும் தர்ம தர்மி ஸம்பந்தம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எனினும் தேவியின் உருவம் ஸச்சிதானந்த ப்ரஹ்ம ஸ்வரூபமே தவிர வேறு எதுவும் இல்லை. CFv தத் பத லக்ஷ்யார்த்தா, சிதேகரஸ ரூபிணீ, நிர்குணா, நித்யா என்ற பெயர்களும் தேவியின் ப்ரஹ்ம ரூபத்தைக் காட்டுகினறன. ஆகவே தேவியை ஸ்த்ரீ என்றோ, புருஷன் என்றோ, நபும்ஸக மென்றோ கொள்ளக்கூடாது.

நாம் நம்முடைய தாயையே அப்படி நினைக்கிறதில்லை. தாயாகப் பகவானை நினைத்துத் துதித்தாலும் பூஜித்தாலும் த்யானித்தாலும் நமக்குச் சீக்கிரம் ஸித்திகள் உண்டாகும். ஆதலால் தாயாகப் பகவானை வழிபடுவது உத்தமமான கொள்கை.

தேவியின் இருப்பிடம் மஹா மேரு மத்தியில் ஸ்வர்ண மயமான நகரமென்று ஸ்ரீ துர்வாஸர் லலிதாஸ்தவரத்தினத்தில் கூறுகிறார். அவ்விடம் இரண்டு நகரங்கள் உள. ஒன்று க்ஷீரஸமுத்ர மத்தியில் இருக்கிறது. ரத்னமயமானது. சுற்றிலும் கல்ப விருஷங்களாலும் மந்தாரம், பாரிஜாதம், கதம்பம் முதலிய விருஷங்களாலும் சூழப்பட்டுள்ளது. அதன் மத்தியில் புஷ்பராக ரத்ன பிராகாரம். அதன் பின் கிரமமாகப் பத்மராக மணிப் பிரகாரம், கோமேதகரத்னப் பிரகாரம் வஜ்ர பிரகாரம்,

மரகதமய ரத்ன பிரகாரம், பவழரத்ன பிரகாரம் இவைகளுக்குள் மாணிக்க்ய மண்டபம். அதற்குள் ஆயிரங்கால் மண்டபம். அதற்குள் மஹா பத்மாடவீ மத்தியில் ஒர் சிந்தாமணி மயமான கிருஹத்தில் இருக்கிறாள் தேவி. அந்த கிருஷத்திற்கு நான்கு வாசல்கள். பூர்வாம்நாயம். தக்ஷிணாம்நாயம் முதலியவைகள். கிருஹ மத்தியில் பிரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈச்வரன் எண தேவமயமான கால்கள் கொண்ட மஞ்சத்தில் ஸிம்ஹாசஸனத்தில் வீற்றிருக்கிறாள். தேவி இருக்கும் ஸ்தானம் ஒன்பது சக்கரங்களால் சூழப்பட்டுள்ளது. முதலில் த்ரைலோக்ய சக்ரம். இதில் அணிமாதி ஸித்திகள் தேவீ ரூபத்தை எடுத்துக் கொண்டு காத்துவருகிறார்கள். தவிரவும் பிராஹ்மீ, மஹேச்வரீ முதலிய ஸப்த மாதாக்களும் ஸர்வஸம்க்ஷே£பிணீ முதலிய பிரகட யோகினிகளும் தேவியை ஸேவித்து வருகிறார்கள்.

இரண்டாவது ஸர்வசா பரிபூரக சக்ரம். அதில் கர்மாகர்ஷிணீ, புத்தி ஆகர்ஷிணீ முதலிய தேவிகள் வீற்றிருக்கின்றன. இவர்கள் குப்த யோகிகள் எனப்படுவர். மூன்றாவது ஸர்வஸம்க்ஷே£பண சக்ரம். அதில் அநங்க குஸுமா முதலிய தேவிகள் அனுக்ரஹம் செய்கின்றார்கள். நான்காவது ஐந்தாவது ஸர்வாத்த ஸாதக சக்ரம். அதில் ஸர்வ ஸித்திப்ரதா, ஸர்வ ஸம்பத் ப்ரதா முதலிய தேவிகள் அனுக்ரஹம் செய்கிறார்கள். ஆறாவது ஸர்வரத்னாகர சக்ரம். அதை ஸர்வக்ஞாதேவி, ஸர்வ சக்தி தேவி முதலியவர்கள் பரிபாலிக்கினாறார்கள். ஏழாவது ஸர்வ ரோகஹர சக்ரம், வசிநீ வாக் தேவி முதலியவர்களால் சூழப்பட்டது. எட்டாவது ஸர்வஸித்திப்ரதசக்ரம், காமேசுவர காமேசுவரிகளின் ஆயுதங்கள் தேவதா ஸ்வரூபத்தை எடுத்துக்கொண்டு தயாராக இருக்கின்றன.

ஒன்பது ஸர்வாநந்தமய சக்ரம். அதன் மத்தியில் பரப்ரஹ்ம ஸ்வரூபமான பிந்து ஸ்தானத்தில் ஸ்ரீ லலிதா தேவி வீற்றிருக்கினாறாள்.

ஆகவே இப்படிப்பட்ட ஸ்தானத்தில் தேவீ வீற்றிருக்கின்றாள் என்றும் அவளுக்குப் பரிசாரக தேவிகள் ஸகல அபீஷ்டகத்தையும் கொடுக்க வல்லவர்கள் என்றும் தியானித்தாலேயே நமக்கு வேண்டியவைகள் கிடைக்கு மென்றும் இருக்க அவர்களைப் பரிவாரங்களுடன் கூடிய ஸ்ரீ தேவியின் ஸ்தானமான ஸ்ரீ சக்கரத்தைப் பூஜித்தால் அபீஷ்டகங்கள் ஸித்திக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா.

பகவத்பாதர்கள் தேவியிடம் மிகவும் ஈடுபட்டவர்கள். தேவி பரமாகப் பல ஸ்துதிகளும் மானஸ பூஜைகளும் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு அமிர்தமயமாக இருக்கும். தேவீ பக்தர்களுக்கு வாக்விலாசம் மிகவும் அழகாக இருக்கும். காளிதாசனுக்குத் தேவீ அனுக்ரஹத்தால் வாக்ஸித்தி ஏற்பட்டது. அவர் தம் ¢குருவான கீர்வாணேந்திர ஸரஸ்வதியைப் புகழும்போது ''ஸர்வாத்மநாசைல ஸுதாத்மகோ ய என்று அவர்கள் தேவீ பக்தியால் தேவீ ஸாயுஜ்யமடைந்ததாகச் சொல்கிறார்கள் ஆசார்களும் தேவீ மாநஸ பூஜையில்...............

*யத்ரஸ்மின் ஸமயே தவார்சன விதவானந்த ஸாந்த்ர ஸ யோ யாதோஹம் த்வபின்னதாம் தவ சிவே ஸோயம் ப்ரஸாதஸ் தவ*

(அன்னையே உன் பூஜா காலத்தில் விஷயங்களை எல்லாம் மறந்து உன்னுடன்அபேதத்தை அடைந்திருப்பது உன் பிரசாதத்தால் அன்றோ) என்று

சொல்லி தேவி ஸாயுஜ்யத்தை ஸ¨சிக்கின்றார். ஸ்ரீகாமாக்ஷி தேவியினிடம் நிகரற்ற பக்தியுள்ளவர் மூக கவி. அவர்

லீயே புரஹர ஜாயே மாயே தவ தருண பல்லவச் சாயே|

சரணே சந்த்ராபரணே, காஞ்சீஸரணே நதார்த்தி ஸம்ஹரணே||

என்று சொல்லும்போது தாம் தேவியின் சரணத்தில் லயித்திருப்பதை ஸந்தோஷத்துடன் கூறுகிறார்.

தேவியின் துர்க்கை என்ற அவசரம் பக்தர்களுக்கு ஸகல ஸங்கடங்களிலிருந்தும் விடுதலை கொடுக்கும். துர்கா ஸப்த ஸதி பாராயணம் செய்பவர்கள் கஷ்டத்திலிருந்து விடுபடுகின்றனர். யுதிஷ்டிரர் 12 வருடம் காட்டில் வசித்துவிட்டுப் பிறகு அக்ஞாதவாஸம் போகும் காலத்தில் துர்க்கையைத் தியானித்துக் கொண்டு துதி செய்தார். அன்னையே எங்கள் அக்ஞாத வாஸத்தை ஒருவரும் அறியாதிருக்கும்படி நிறைவேற்றிப் பிறகு நாங்கள் ராஜ்யத்தை அடைய உதவி செய்வீராக என்று வேண்டிக் கொண்டார். துர்க்கை நேரில் தோன்றி யுதிஷ்டிரருக்கு வரம் கொடுத்து ஸமாதானம் செய்தாள் என்று மஹாபாரதத்தில் சொல்லியிருக்கிறது.

தேவியைக் கவிகள் எப்படி வர்ணிக்கிறார்கள் என்பதைக் கவனிப்போம்.

தேவியின் ஸ்வரமாதுர்யத்தைப் பற்றி ஆசார்ய பகவத்பாதாள்......

விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பசுபதே

த்வயாரப்தே வக்தும் சலித ஸிரஸா ஸாது வசனே

ததீயைர் மாதுர்யை ரபலபித தந்திரீ கலரவாம்

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம்

தேவி ஸரஸ்வதீ தேவியானவள் உன் எதிரில் வீணையை மீட்டிக் கொண்டு பரமசிவனுடைய நாநாவித லீலைகளைப் பாடும்போது c அவளுக்கு சபாஷ் கொடுக்கும் பொருட்டு ஸாது என்ற வார்த்தையை உச்சரிக்குங்கால் ஸா என்ற அக்ஷரத்தை கேட்ட உடனேயே அந்த அக்ஷரத்தின் மாதுர்யம் வீனை ஸ்வத்தைத் தோற்கடிக்கவே ஸரஸ்வதீ தேவி தன் வீணையை உறையில் போட்டு மறைத்து விட்டாள்.