Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் பசுவின் மகிமை புண்ணியஸ்தலங்கள் நிறைந்தது சோழவள நாடு அதில் திருச்சேய்ஞலூர் என்ற ஒர் ஊர் இருக்கிறது அது இப்பொழுது சேங்கன

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
பசுவின் மகிமை

புண்ணியஸ்தலங்கள் நிறைந்தது சோழவள நாடு. அதில் திருச்சேய்ஞலூர் என்ற ஒர் ஊர் இருக்கிறது. அது இப்பொழுது சேங்கனூர் என்ற பெயருடன் விளங்குகிறது. அவ்வூரில் எச்சதத்தமன் என்ற ஒர் அந்தணன் இருந்தான். அவன் மனைவியின் பெயர் பவித்திரை. அவர்களுக்கு சிவபெருமானின் அருளால் ஒரு குமாரன் பிறந்தான். அக்குழந்தைக்கு வியாரசருமர் எனத் திருநாமம் வைத்து அன்புடன் வளர்த்து வந்தார்கள். குழந்தைக்கு ஐந்து வயதாயிற்று. பள்ளியில் வைத்தார்கள். அறிவின் வளர்ச்சி ஐந்தாவது வயதிலிருந்துதான் ஆரம்பமாகிறது. மொட்டுகளுக்கு வாசனை இருப்பதில்லை. மலரும்போது அதற்கு வாசனை உண்டாகிறது. அதேபோல் விசாரசருக்கும் முன் ஜன்ம அறிவின் தொடர்ச்சியினாலும், பள்ளியில் ஆசானின் தூண்டுதலாலும் அறிவானது வளர்ந்தது.

விசாரசருமருக்கு வயது ஏழாயிற்று. உபநயன (பூணூல்) ச் சடங்கைச் செய்வித்தார்கள். இந்த உபநயனச் சடங்குதான் அந்தணனுக்கு இரண்டாவது பிறப்பை அளிப்பது. உபநயனச்சடங்கு உள்ளவர்களை இருபிறப்பாளர்கள் என்கிறார்கள். வேதம் ஒதுவதற்காக விசாரசருமர் தினந்தோறும் முறைப்படி பி¬க்ஷயேற்பர். ஆசானுக்களிப்பார். அவர் கற்பிக்கும் வேதங்களை, மிகக் கவனமாகக் கற்பார். விசாரசருமரின் அறிவின் திறத்தைக் கண்டு ஆசிரியர் அதிசயித்தார். முறைப்படி வேதங்களின் முடிவு சிவபெருமானின் திருவடிகளே எனத் தெளிந்தார். வேதத்தில் சிவபெருமானின் பெருமையை விளக்கிக் கூறும் மந்திரங்கள் உள்ளன. அவற்றிற்கு ருத்ரம் என்று பெயர். அதை விசாரசருமரர் எப்பொழுதும் ஜபித்துக் கொண்டிருப்பார். சிவபக்தி நாளுக்கு நாள் அவர் மனத்தில் வளர்ந்துகொண்டே வந்தது.

ஒரு நாள் வசாரசருமர் மற்றைய மாணவர்களுடன் வேதம் ஒதிக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒர் இடையன் அவ்வூராரின் பசுக்களை மேய்ப்பதற்காக ஒட்டிப் போய்க்கொண்டிருந்தான். ஒரு பசு அவ்விடையனைத் தன் கொம்பால் குத்தப்போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்திற்று அஞ்சவில்லை. தன் கையிலுள்ள கோலால் அப்பசுவைத் நையப் புடைத்தான் வேதம் ஒதும் விசாரசருமர் இக்காக்ஷியைப் பார்த்தார். மனம் பதைபதைத்து எழுந்து இடையன் சமீபம் ஒடிவந்தான். மேலும் அடிக்காமல் தடுத்தார். அவனிடம் c இனிமேல் பசுக்களை அடிக்காதே. பசுக்களின் மகிமையை c அறியமாட்டாய். வேதாகமங்களும் புராணஙங்களும் பசுக்களின் மகிமையை மிக விரிவாகக் கூறுகின்றன. பசுவினிடத்தில் எல்லாத் தேவதைகளும் குடிகொண்டிருக்கிறார்கள். எல்லாத் தீர்த்தங்களும் இருக்கின்றன. பசுக்கள் தரும் பஞ்ச கவ்யம் பால், தயிர், நெய், கோமயம், கோமூத்திரம், பரமசிவனுக்கு மிகப் பிரியமானது. சகல பாபங்களையும் போக்கவல்லது. ஈசன் அணியும் திருநீற்றின் மூலக்காரணமும் இதனிடமிருந்தே கிடைக்கிறது. அம்மையப்பன் சேர்ந்து எழுந்தருளும் காலையின் குலத்தைச் சேர்ந்தது. பசுக்களின் தலைவன் சிவபெருமான். பசுக்களின் வழிபாடே சிவவழிபாடு. அந்தணர்களின் வேள்விகளும், பசுக்கள் தரும் நெய்யினால்தான் நடை பெறவேண்டும். பசுக்கள் இல்லையேல் வேள்வி இல்லை. பசுக்கள் வாழ, தேவர்கள் வாழ்வார்கள். தேவர்கள் வாழ மாதமும்மாரி பெய்யும். தேசம் செழிக்கும். தேசத்தில் பஞ்சமில்லாமல் இருக்க, பசுக்களைக் காத்தல் அவசியம். பசுக்களின் சேவையே தேச சேவை. பசுக்களின் சேவையே சமூக சேவை. ஆகையால் இப்பசுக்களை இனி நானே மேய்ப்பேன். c மேய்க்கவேண்டாம் என்றார். இடையன் பசுக்களின் மகிமையை கேட்டான். பயந்து விட்டான். மன்னிப்புக் கோரி வணங்கினான். திரும்பிப் போய்விட்டான்.

விசாரமருவர் பசுக்களின் சொந்தக்காரர்களிடம் சென்னார். தமது ஆவலைத் தெரிவித்தார். அவர்களின் அனுமதியைப் பெற்றார். பசுக் கூட்டங்களை மேய்ப்பதற்காக ஒட்டிச் சென்றார். கிராமத்தினருகே மண்ணியாறு என்ற ஒர் ஆறு ஒடுகிறது. அதன் இருகரைகளிலும் பெரும் புல்வெளிகள் இருந்தன. தினந்தோறும் பசுக்கூட்டங்களை அவ்விடங்களுக்கு ஓட்டிச் சென்று வயிறார மேய விடுவார். தண்ணீர் காட்டுவார். நடுப்பகலில் மர நிழல்களில் பசுக்களைத் தங்க விடுவார். அத்துடன் தமக்கு வேண்டிய சமித்து முதலியவைகளை சேகரித்து எடுத்துக் கொள்வார். சூரியன் மறைவதற்று முன்பாகவே பசுக்களை கிராமத்திற்கு ஓட்டிவருவார்.

இவ்விதம் அநேக நாட்கள் சென்றன. பசுக்களும் பெருகின. பால் அதிகமாக கறந்தன. பசுக்கள் தம் கன்றுகளை பிரிந்த போதிலும் தங்களை அன்புடன் ஆதரிக்கும் விசாரசருமரைக் கண்டவுடன் அன்போடு தாய்போல் அருகில் ஓடி வரும். பசுக்களுக்கு தம் கன்றுகளை கண்டவுடன் மடிபெருகிப் பால் சுரப்பது இயற்கை. அவ்விதமே விசாரசருமரை நாவினால் நக்கியும், முகர்ந்தும் தாய்ப்போல் ஒருவர் கறவாமலே பாலைச் செரித்தன. இதனால் அவை வழக்கமாய் தரும் பாலைக் குறைக்கவில்லை. விசாரசருமர் இதைக் கவனித்தார். பால் வீனாவதைக் கண்டார். பலருக்குப் பலவாக தோன்றலாம். ஆனால் விசாரசருமர் இப்பால் சிவபெருமானுக்குத் திருமஞ்சன மாவதற்கு உரியது என எண்ணினார். சிவபூஜை செய்ய எண்ணம் கொண்டார். முன் ஜன்ம நல்லினைத் தொடர்பு இல்லாவிட்டால் சிவ பூஜை செய்ய வேண்டும். என்ற எண்ணமே தோன்றாது. மண்ணியாற்றின் கரையிலே ஒர் அத்தி மரம் இருந்தது. அதன் கீழ் மணலால் சிவ லிங்கமும் சிவாலையமும் அமைத்தார். அங்குள்ள புஷ்பங்களையும் பில்வங்களையும் பறித்து வந்தார். ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பசுக்களின் அருகில் சென்றார். பசுக்களும் விசாரசருமரின் குறிப்பையுணர்ந்து பாலைச் சுரத்தன. தமக்கு வேண்டிய பாலைப் பெற்றுக்கொண்டு விசாரசருமர் சிவபூஜையைத் தொடங்குவார். தூபம், தீபம், முதலியவைகளைப் பாவனையினாலேயே செய்வார். பாலினால் திருமஞ்சனமும் செய்வார். கிடைத்த மணமுள்ள புஷ்பங்களை அர்ச்சனை செய்வார். ஈசனும் சிறியவரான விசாரசருமர் அன்பான பூஜையை மனமுவந்து ஏற்றார்.

இவ்வாறே பலநாட்கள் விளையாட்டாகச் சிவபூஜை நடந்தது. ஒருநாள் ஒருவன், இவர் பூஜை செய்வதையும் பாலை மணல் லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்வதையும் பார்த்துக் கொண்டிருந்தான். கிராமத்தார்களிடம் சென்று தாம் கண்டதைக் கூரினான். கிராமத்து அந்தணர்கள் எச்சத்தனை அழைத்தார்கள். அவனிடம் தாங்கள் கேட்ட செய்தியினைக் கூறினார்கள். எச்சதன் பயந்தான். இவ்விஷயங்களை நான் இதுவரை அறியேன். அவ்விதம் என் மகன் செய்திருந்தால் தாங்கள் மன்னித்து விடுங்கள். இனிமேல் அவன் அவ்வாறு செய்யாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.

இவ் விஷயங்களைப் பற்றி மகனிடம் ஒன்றும் கூறவில்லை. தானே நேரில் சென்று உண்மையைக் கண்டறிய எண்ணம் கொண்டான். அன்றிரவு கழிந்தது. மறுநாள் விசாரசருமர் பசுக்கூட்டங்களை மேய்பதற்கு மண்ணியாற்றங்கரைக்கு ஓட்டிச் சென்றார். எச்சதத்தனும் அவன்பின் மறைந்து மறைந்து சென்றான். அருகேயுள்ள ஒரு மரத்தின் மேல் ஏறி, நடப்பதை ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்தான். விசாரசருமர் ஆற்றில் மூழ்கினார். முன்போல் பூஜைக்கு வேண்டியதைத் தயார் செய்துகொண்டார். ஒருமனப்பட்டவராச் சிவலிங்கத்தின் மீது புஷ்பம் சாத்தினார். பாலபிஷேகம் செய்யத் தொடங்கின்ர். மறைந்து பார்த்துக்கொண்டிருந்த எச்சதத்தினுக்கு கோபம் வந்துவிட்டது. மரத்திலிருந்து கீழிறங்கிவந்து, கையிலுள்ள கோலினால் விசாரசருமரின் முதுகில் புடைத்தான். அநேக கொடியமொழிகளையும் சொன்னான். விசாரசருமரின் மனம் சிவபூஜையில் மிக அழுத்தமாக ஊன்றியிருந்தது. ஆகையால் வெளி விஷயங்கள் ஒன்றையும் அறியாதவராக இருந்தார். எச்சதத்தனுக்கும் அடித்து அடித்து கை வலி எடுத்தது. பக்கத்தில் அபிஷேகத்திற்காக குடத்தில் பால் வைக்கப்பட்டிருந்தது. அதைக் காலால் இடறிக் கொட்டினான். இதுவரை மெய்மறந்திருந்த விசாரசருமர் சிவபூஜைக்கு விக்னம், ஏற்பட்டவுடன், ருத்ரன் போல் கோபம் கொண்டார். முன்னே கிடந்த கழியைச் சில பூஜைக்கு இடையூறு செய்தவனைத் தண்ணிப்பதற்காக் கையில் எடுத்தார். அது மழுவாக மாறிவிட்டது. தம் தந்தை என்றும் பாராமல் சிவாபராதம் செய்த இரண்டு கால்களையும் துண்டித்தார். எச்சத்தின் கீழே வீழ்ந்தான். பிறகு தம் பூஜையை இடையூறினறி முடித்துக் கொண்டார்.

சிவபெருமான் தேவியுடன் காளையின்மேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தார். விசாரசருமர் ஈசனின் பாதங்களில் விழுந்தார். ஈசன் அவரை எடுத்து, உன் தந்தையை எதற்காக c வெட்டினாய். இனி நாமே உனக்குத் தந்தை. நாம் அணிந்த மாலைகளும், புசித்த நிவேதனங்களும் உனக்கே உரியது. c சண்டீசன் என்னும் பதவியில் இருகக்கடவாய். என்று அருளிச் செய்தார். அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். விசாரசருமர் சண்டேசர் என்ற பெயருடன் ஒவ்வொரு சிவாலயங்களிலும் விளக்கிக்கொண்டிருக்கிறார். தொண்டர் பெருமையைப் பாடி நாம் ஈசன் அருளைப் பெறுவோமாக. htmltitle

UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it