ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் பஜகோவிந்தம் வயதாண அந்தணர் ஒருவர் கல்வியில் உள்ள ஆர்வத்தினால் வடமொழி இலக்கணம் பயில ஆரம்பித்தார் டு க்ருஞ் கரணே

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
பஜகோவிந்தம்

வயதாண அந்தணர் ஒருவர் கல்வியில் உள்ள ஆர்வத்தினால் வடமொழி இலக்கணம் பயில ஆரம்பித்தார். டு க்ருஞ் கரணே என்ற வினைப்பகுதியை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார். பரமாசார்யர்கள், அவ்வந்தணர் மனப்பாடம் செய்ய படும் கஷ்டத்தைப் பார்த்தார். கருணைக் கொண்டார். அவ்வந்தணரைக் காரணமாகக் கொண்டு ஆசைக் கடலில் அகப்பட்டுத் தவிக்கும் நம் போன்ற மனிதர்களுக்கு உபதேசித்ததே பஜகோவிந்தம்.

1. ஹே அறிவற்றவனே. கோவிந்தனைப் பஜனை செய். உனது மரணகாலத்தில் இந்த டு க்ருஞ் கரணே என்ற (தாது) வினைப்பகுதியானது உன்னைக் காப்பாற்றாது.

2. விவேகம் இல்லாதவனே பணம் சேர்க்கும் பேராசையை விடு. தனக்குக் கிடைத்த பொருளைக்கொண்டு திருப்தியடை.. பேராசை யற்று இரு.

3. ஸ்திரீகளுடைய அங்கங்களைக் கொண்டு மோகமடையாதே. இவைகள் மாம்ஸம், கொழுப்பு இவைகளால் ஆனது என்பதை அடிக்கடி எண்ணிப்பார்.

4. நமது உயிர் தாமரை இலை ஜலம் போல் நிலையில்லாதது. நோய், கவலை, அகங்காரம் இவைகளால் பீடிக்கப்பட்டதுதானே உலகம்.

5. பணம் சம்பாதிக்கும் வரையில் உன் சுற்றத்தார்கள் உன்னைச் சூழ்ந்திருப்பார்கள். உன் உடல் தளர்ந்தால் உன்னையாறும் விசாரிக்கமாட்டார்கள்.

6. உடலில் மூச்சு இருக்கும்வரை எல்லோரும் உன்னை அன்புடன் விசாரிப்பார்கள். உடலை விட்டுப் மூச்சு பிரிந்தால் மனைவிகூட உன் உடலைக் கண்டு பயப்படுவாள்.

7. சிறுவனாக இருக்கும்பொழுது விளையாட்டிலும், யௌவனத்தில் பெண்களிடத்திலும், கிழவயதில் கவலையிலும் ஆழ்ந்திருக்கிறார்கள். ஈசனிடத்தில் ஒருவரும் ஈடுபாடு கொள்வதில்லை.

8. இவ்வுலகம் விசித்திரமானது. c யார். எங்கிருந்து வந்தாய். உன் மனைவி மக்களும், உனக்கும் என்ன சம்பந்தம். ஏமூடா. பிரம்மம் தான் ஜீவாத்மாவாக விளங்குகிறது எனற உண்மையை அறி.

9. நல்லோர்களின் சேர்க்கையால் பற்றின்மையும், பற்றின்மையால் மயங்காமையும், மயங்காமையால் ஸ்திரமான ஞானமும், ஸ்திர ஞானத்தால் முக்தி நிலையும் ஏற்படுகின்றன.

10. வயதான மனிதனுக்குப் காம விகாரங்கள இல்லை. நீர் வற்றிய ஏரிக்கு ஏரி என்ற பெயர் இல்லை.. ஏழைக்குச் சுற்றமில்லை. அதுபோல் உன்மையறிந்தோற்கு இவ் உலகமில்லை.

11. பணம், சுற்றம், யௌவனம் இவைகளை அடைந்து கர்வம் கொள்ளாதே. இமை கொட்டும் நேரத்தில் எல்லாம் போய்விடும்.

12.பகல் - இரவு, காலை - மாலை, சிசிர ருது - வசந்த ருது இவை மாறி மாறி வருகின்றன. ஆயுள் கழிகிறது. இருந்தும் ஆசை விடவில்லையே.

13. தேகம் தளர்ந்து, தலை வெளுத்து, பல் உதிர்ந்து கழியின் உதவியால் நடக்கும் நிலை வந்தும் ஆசை விடவில்லையே.

14. முன்னும், பின்னும் தீயும், சூர்யனும் எரிக்கிறார்கள். இரவில் முழங்காலில் முகத்தைவைத்து தூங்குகிறார்கள். கையில் பிச்சை ஏற்று உண்கிறான். மரத்தடியில் வசிக்கிறான். இருந்தும் ஆசை விடவில்லை.

15. கங்கை, சமுத்திரம் முதலிய க்ஷேத்திரங்களில் நீராடி என்ன?விரதங்கள் இருந்தென்ன?தானங்கள் செய்தென்ன?நூறு பிறவி எடுத்தும் ஞானமில்லையேல் முக்தியில்லை.

16. கீதையைப் படிப்பவன், கங்கை ஜலம் குடிப்பவன், திருமாலைப் பூஜிப்பவன் யமனிடம் பயப்பட வேண்டியதில்லை.

17. யோகியானால் என்ன. போகியயானால் என்ன, கூட்டத்தில் இருந்தால் என்ன. தனிமையில் இருந்தால் என்ன, பிரம்மனிடத்தில் மனம் லயிக்குமானால் நிச்சயம் ஆனந்தமடைகிறான்.

18. மறுபடியும் பிறப்பு, இறப்பு, மறுபடியயும் தாயின் வயிற்றில் வாசம், ஹே ஈசா. தாண்ட முடியாததான இந்த ஸம்சார ஸாகரத்திலிருந்து என்னைக் காப்பாற்று.

19. c யார்?. நான் யார்?. எங்கிருந்து வந்தவன் என் தாய் யார்என்று யோசித்துப் பார்?. உலகத்தை ஸாரமற்று காண்பாய். இவ்வுலகம் ஸ்வப்னம் போன்றது. இதை விட்டுவிடு.

20. உன்னிலும், என்னிலும், எங்கும் ஈசன் ஒருவனே விளங்குகிறான். அப்படி இருக்க ஏன் வீணாக என்னிடம் கோபிக்கிறாய். வேறாகத் தோற்றுவிக்கிற அக்ஞானத்தைத் துறந்து எங்கும் தன் ஸ்வரூபத்தையே பார்.