ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் ஸ்ரீ ராம நவமி அஷ்டாக்ஷர மந்திரத்தில் "ரா"என்னும் எழுத்து ஜீவாக்ஷரம் சிவமந்திரத்திற்கு "ம"எனும் எழுத்து ஜீவாக்ஷரம் இவ்விருமந்த

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
ஸ்ரீ ராம நவமி

அஷ்டாக்ஷர மந்திரத்தில் "ரா"என்னும் எழுத்து ஜீவாக்ஷரம். சிவமந்திரத்திற்கு "ம"எனும் எழுத்து ஜீவாக்ஷரம். இவ்விருமந்திரங்களுடைய

ஜீவாக்ஷரங்கள் சேர்க்கையே ராம என்னும் மந்திரம். இதுவே பராசக்தியின் உருவமே திருமால், பராசக்தியை விட்டுப் பிரிக்க முடியாத பொருளே சிவம்.

ராமநாம ஜபமானது சிவன், திருமால், பராசக்தி இம் மூவரையும் குறிக்கும் ஜபங்களுக்கு சமானமானது. ஜபம் செய்யவும் மிகவும் சுலபமானது.

ஸ்ரீ ராமன் அவதரித்து சைத்ர சுக்ல நவமியன்று நடுப்பகல் (பங்குனி மாதம் அமாவாஸைக் கடுத்த நவிமி) . உமாதேவியின் ஆவிர்பாவமும் சைத்ரசுக்ல நவமி நடுப்பகலில் என்று தேவீ பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீராமனும் தேவியும் ஒன்றுக்கொன்று, "ஸ்ரீதியாகய்யரவர்கள் கருணஜூடவம்மாகமலநவரி கலா தருணிகொம்மா"என்னும் கீர்த்தனத்தில் சொல்லியிருக்கிறார்.

சைத்ர சுத்த பிரதமை முதல் நவமிவரை வஸந்த நவராத்ரி புண்யகால (அதுவேதான் ஸ்ரீராம நவமி புண்ணியகாலமும்) மென்று மந்திர சாஸ்திரத்தில் கூரப்பட்டிருக்கிறது. இச் சந்தர்பத்தில் உபிஷத்தை அனுசரித்து, தேவீபாகவதத்தில் காணப்படும் உமாதேவியின் ஆவிர்பாவ சரித்திரம் கூறுவது.

ஒரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் யுத்தம் ஏர்பட்ட சமயம். தேவர்களிடத்தில் ஸ்ரீ பராசக்தியின் கிருபையாகும் பலம் பிரவேசித்தால், தேவர்கள் அசுரர்களை வென்றார்கள். அசுரர்கள் பயந்து பாதாளலோகத்திற்கு சென்று ஒளிந்து கொண்டுவிட்டார்கள். தேவர்கள் அதனால் அதிக கர்வமடைந்து, பரதேவதையின் கிருபையால்தான் தங்களுக்கு வெற்றி கிடைத்ததென்பதை மறந்து, தங்களின் வல்லமையைப் பற்றி மிகவும் பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி மோஹம் கொண்ட தேவர்களின் கர்வத்தை ஒழித்து அவர்களை அனுக்கிரஹிக்க எண்ணின ஜகதம்பிகை ஒரு யக்ஷ ஸ்வரூபத்தோடு அவர்கள் முன் தோன்றினாள். அந்த உருவமானது கோடி சூர்யர்கள் பிரகாசத்தையும், கோடி சந்திரர்களையும், கோடி மின்னல்களின் சக்தியையும் உடையதாகவிருந்தது. இதற்குமுன் பார்க்கப்படாததும் அதிக அழகுள்ளதுமான அந்த தேஜோரூபத்தைத் தேவர்கள் மிகவும் ஆச்சர்யமடைந்தார்கள். அப்போது அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி யோசித்தார்கள். நம்மில் ஒருவர் இந்த யக்ஷனின் சமீபத்தில் செனறு, c யார் என்று கேட்க வேண்டும். அதன் பலத்தைத் தெரிந்து கொண்டு பின்பு சமயோஜிதம்போல் செய்யவேண்டும். அது சத்ருவாகவும், அதிக பலவானாகவும் இருந்தால் நாம் இவ்விடத்தைவிட்டு ஒடிப்போக வேண்டும். சம பலமுள்ளதாகவிருந்தால் யுத்தம் செய்யவேண்டும். ஈச்வரனாயிருந்தால் பக்தியுடன் ஆராதிக்க வேண்டும். அது சத்ருவாகவும் அதிக பலவானாகவும் இருந்தால் நாம் இவ்விடத்தைவிட்டு ஓடிப் போகவேண்டும். இவ்விதம் தீர்மானித்த பிறகு தேவர்களின் அரசனான இந்திரன் அக்னியைப் பார்த்து, c தான் தேவர்கள் முகமாய்யிருக்கிறாய். ஆகையால் c போய் இந்த யக்ஷஸ் யார் என்று அறிந்து வா என்றான். அவ்விதமே அக்னி யக்ஷஸிடம் போய், c யார்?. உன்னுடைய வீர்யமென்ன?இவையெல்லாம் எனக்குத் தெரிவி என்றது. அதற்கு அக்னி. இவ்வுலகம் முழுவதாயும் எரிக்கும் சக்தி எனக்கிருக்கிறது!என்றான். உடனே யக்ஷஸ் ஒரு துரரும்பை அக்கினியின் எதிரிலே போட்டு இதை எரித்துவிடு என்றது. அக்கினி தன்னாலியயன்ற மட்டும் பிரயத்தினம் செய்தும் அந்தத் துரும்பை எரிக்க முடியவில்லை. வெட்கத்துடன் இந்திரனுடன் திரும்பிவந்து நடந்ததைச் சொன்னான்.

பிறகு இந்திரன் வாயுவை நோக்கி, நீயே எல்லோர்க்கும் பிராணணாக இருக்கிறாய் ஆகையால் c போய் விசாரித்து வா!என்று அனுப்பினான். வாயுவும் அவ்விதமே சென்று அந்த யக்ஷசை c யார் என்று வினவினான் அதற்கு யக்ஷஸ் இனிமையான குரலில் c யீர் உனக்கு என்ன சக்தி உண்டு இவைகளை விவரமாக எனக்குச் சொல் என்றது. அதற்கு வாயு என் பெயர் வாயு என்றது. இவ்வுலகிலுள்ள ஸகல பொருட்களையும் அசைப்பதற்கும் எனக்கு சக்தி உண்டு என்றது. என்னுடைய சேஷ்டையினால்தான் இவ்வுலகில் சகல கார்யங்களும் நடைபெருகின்றன என்றான். அதற்கு யக்ஷஸ் அப்படியானால் இதோ உன் எதிரே கிடக்கும் இந்தத் துரும்பை அசைத்துவிட்டுப் போ பார்ப்போம் என்றது. வாயு தன் முழுபலத்தையும் கொண்டு பிரயத்தனம் செய்தும் துரும்பை அசைக்க முடியவில்லை. அவனும் வெட்கி இந்திரனிடம் சென்று நடந்ததைச் சொன்னான்.

பிறகு தேவர்கள் இந்திரனை நோக்கி நீரே எங்களுக்கெல்லாம் அரசன். ஆகையால் நீங்களே நேரே போய் அந்த யக்ஷஸ் யார் என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்றார்கள். இந்திரனும் அதற்குச் சம்மதித்து அதிக கர்வத்துடனும் இருமாப்புடனும் அந்த யக்ஷஸ் இருக்குமிடத்தை அடைந்தான். ஆனால் அந்த யக்ஷஸ் அவன் கண் முன்னேயே மறைந்து விட்டது. இந்திரன் மிகவும் வறுத்தமடைந்து நாம் தேவர்களுக்கெல்லாம் அரசனாக இருந்தும் நமக்கு யக்ஷஸிடம் பேசும் பாக்கியம்கூடக் கிடைக்கவில்லையே. தேவர்களிடம் நமக்கு நடந்த அவமானத்தைப் பற்றி எப்படிச் சொல்வது. அதைக் காட்டிலும் நம் சரீரத்தை விடுவதே மேல். பெரியோர்களுக்கு மானமே தானம். மானம்போய் உயிர் வாழ்வது மரித்தருக்குச் சமானமே என்று எண்ணி அவ்விடத்திலேயே அவ்விடத்திலேயே தங்கி ஆகாரமில்லாமல் கண்மூடி லக்ஷ வர்ஷகாலம், எந்த வஸ்து எல்லாவற்றிர்கும் காரணமானதோ, அதைக் குறித்துத் தவமிருந்தான். அப்படித் தவமிருக்கும் போது சைத்த சுக்ல நவமியன்று நடுப்பகலில் அதேயிட்தில் மறுபடியும் அந்த தேஜஸ் ஆவிர்பவித்து. அதன் நடுவில் குமரியாகவும் அப்பொழுதுதான் அடைந்த யௌவன பருவத்தையுடையவளாகவும் இளஞ் சந்திரப்பிரபையுடன் கூடிய கிரீடம் அணிவித்தவளாகவும், புன்சிரிப்புடன் கூடிய முகத்தையுடையவளாயும், கருணையே உருவெடுத்து போலவும் சர்வ காரணங்களுக்கும் காரணமாகவும் ஸர்வ மங்கள ஸ்வரூபினியாகவும் ஆவிர்பவித்த உமாதேவியை இந்திரன் தரிசித்தான். உடனே இந்திரன் உள்ளம் பூரித்துக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகக் மயிர்கூச்சலடைந்து தணாடாகாரமாக விழுந்து நமஸ்கரித்து, துதித்து, தாயே. இந்த யக்ஷஸ் யார் என்பதையும் எதற்காக இவ்விடம் தோன்றியது என்பதையும் சொல்லியருள வேண்டும் என்று பிரார்த்தித்தான். கருணைக்கடலான அம்பிகை அதற்கு, அதுவே என் ஸ்வரூபம் நானே எல்லாக் காரணங்களுக்கும் ஆதிகரணம் ப்ரம்ம ஸ்வரூபம் ஸர்வ ஸாக்ஷி, என்றும் குலையாத பொருள். நானே பிரம்மா, விஷ்ணு, உருத்திரர்களாக பரிணமிக்கிறேன். என் கிருபையினாலே உங்களுக்கு ஜெயம் கிடைத்தது. ஆனால் நீங்கள் அகம்பாவமும் கர்வமும் கொண்டீர்கள். அக் கர்வத்தை சிதைத்து உங்களை அனுகரிக்கவே நான் அவ்விதம் தோன்றினேன். நீங்கள் உங்கள் கர்வத்தை விட்டோழிந்து, சச்சிதானந்த ரூபியான என்னையே எவ்விதத்தாலும் சரணமடையுங்கள். உங்களுக்கு ஒரு குறையும் வராது என்று சொல்லி மறைந்தாள். தேவர்களும் தங்கள் கர்வத்தைவிட்டுத் தேவியின் பாதாரவிந்தங்களை நன்கு ஆராதித்து வந்தார்கள்.

இவ்வளவு மஹிமையையுடைய தேவியின் ஸ்வரூபமான ஸ்ரீ ராமனை ஸ்ரீ ராம நவமியன்று ஒவ்வொரு கிராமத்திலும், நகரங்களில் ஒவ்வொரு தெருவிலும் அகண்ட ராம நாம பஜனை செய்வது நலம். அகண்ட பஜனையென்றால் ஊரில் உள்ள எல்லோரும் ஒன்று சேர்ந்து 24-மணி நேரமும் அவ்வப்போது மனிதர் மாறி மாறி இடைவிடாது ராம பஜனை செய்ய வேண்டும். ஸ்ரீ ராம நவமியன்று மத்தியானம் ஸ்ரீ ராமன் அவதரித்த ஸர்கத்தைப் படிக்க வேண்டும். ஸ்ரீ ராமனுக்குப் பூஜை செய்யவேண்டும்.