ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் தாயுமானவர் வேதாரண்யம் கோவிலின் விசாரணைக் கர்த்தா, கேடிலியப்பபிள்ளை தம் மனைவி கற்பிற்சிறந்த கஜவல்லியம்மையுடன் இல்லரம் நடத்த

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
தாயுமானவர்

வேதாரண்யம் கோவிலின் விசாரணைக் கர்த்தா, கேடிலியப்பபிள்ளை தம் மனைவி கற்பிற்சிறந்த கஜவல்லியம்மையுடன் இல்லரம் நடத்தி உள்ளதை இறைவனடியில் வைத்து வந்தார். தம் தமையன் பிள்ளையில்லாக்குறையால் வருந்தவே, தன் மைந்தன் சிவச்சிதம்பரத்தையே அவருக்கு தத்துகொடுத்தார். இச்சமயத்தில் திருச்சியில் ஆண்ட திருமலைநாயக்கர் (1704-1731) கேடிலியப்ப பிள்ளையின் அறிவு, தெளிவு, திறமை, ஒழுக்கங்களைக் கேட்டு, மெச்சி தம் ஆஸ்தானத்தில் பெரிய உத்தியோகத்தில் அமர்த்திப் போற்றினார்.

கேடிலியப்ப பிள்ளையும், திருச்சி தாயுமானக் கடவுளை உருகிவழிபட்டு, மைந்தனை வேண்டவே அவரருளால், ஒரு ஞானச்சுடர் புதல்வன் அவதரித்தான். தாயுமானவர் என்றே பெயரிட்டார். அறிவாளியான தந்தை தன் அருமைக் குழந்தைக்கு தமிழ், ஸம்ஸ்க்குதம் இரண்டிலுமுள்ள நூல்களை பயிற்றுவித்தார். சிறு பிராயத்தில் தந்தை சிவனடி சேர்ந்ததும் இளந்தாயுமானவரின், பொலிவும் புலமையும் கண்ட சொக்கலிங்க நாயகர் தந்தையின் பதவியில் அம் மைந்தனை அமர்த்தினார்.தாயுமானவரின் புலன்கள் அரசு ஊழியத்திலிருப்பினும், சிந்தை ஞான விசாரத்திலேயே இருந்தது. உடலைத் தொழிலிலும் உள்ளத்தை சிவத்திலும் வைத்து வந்த தாயுமானவர் பரபரப்புடன் ஞானகுருவைத் தேடினார். ஆர்வம் முற்றினால் அருளாசான் எய்துவான்.

ஒருநாள் வழக்கப்படி திருச்சி தாயுமானவர் கடவுளைத் தரிசிக்க மலைப்படி ஏறிச்சென்றார். அங்கு தக்ஷிணாமூர்த்தி சந்நிதியில் சிவராஜயோகி ஒருவர் வீற்றிருக்கக் கண்டார். அவரே திருமூலர் மரபில் வந்த மௌன சுவாமிகள். அருட்காந்தம்

இழுக்கவே, அடி பணிந்து வணக்கமுடன் ஆசானைத் தொடர்ந்து ஒர் தனியிடம் சேர்ந்தார் நமது தாயுமானவர். ஆசானாகிய மௌனகுருவும் அன்பனின் பக்குவமறிந்து திருவடி தீட்சை செய்து, சித்தத்துடன் ஈரறக்கலந்து நிற்க்கும் சிவாத்துவைத் நெரிகாட்டி மெய்கண்ட சாஸ்திரங்களின் உண்மையை விளக்கி, அன்ப சிறிது காலம் c இல்லரத்திலிருந்து ஒரு புதல்வனையும் பெற்றபின், நாம் வந்து உணக்கு நிஷ்டை கூட்டுவோம். சும்மா இரு என்று சொல்லிப்போனார். பிடித்தது ஞானத்தீ, உடல் பொருள், பெண்டீர், போகம் என்று மயங்கும் உலகாயதஞ்சாராமல், வேதாந்த, சித்தாந்த சமரச சிவானுபூதியை ஒரு சொல்லால் உணர்த்தப்பட்டவராய் இன்பதுன்பம் சமமாயுணர்ந்து, முக்திநெறியறிய அவனருளே தனக்குத்தாரகம் என்று தன் குருதேவனை நினைத்துருகி, சும்மாயிருக்கும் சூக்ஷ்மத்தைக் கருதியிருந்தார்.மன்னன், நமது பரம ஞானியின் பரிபக்குவத்தை யறியாமலில்லை. ஒருநாள் அவரிடம் சென்று சுவாமி தங்களுக்கு இந்த அரசு ஊழியத் தொல்லை வேண்டாம். இது தமக்கு மிக இழிவு.

தாங்கள் ஞான நிலையில் இருங்கள். தங்களுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து யானும் நலம் பெருகிறேன். என்று தாயுமானவரை சுயட்சையாக விடுவித்து, அன்புடன் சில ஆண்டுகள் அன்னாறுக்குப் பணிசெய்து மன்னன் சிவகதி சேர்ந்தான். மன்னருக்குப்பின் இராணி மீனாட்சியம்மை ஆட்சி செலுத்தி வந்தாள், அறிவும், அழகும், அருள்பொலிவும் மிக்க தாயுமானவரை அரசி வலுவாக நேசித்து, தனது அரசுரிமையுடன் உடல், பொருள் ஆவி எல்லாவற்றையும் அவருக்கு அடைக்கலம் ஆக்கி, முன்னின்றாள் இராணி மீனாட்சி. நமது ஞான பிரகாசரோ வாளரும் கண்ணியர் மேகம்-யன வாதைக்கனலை வளர்கும் மெய்யென்ற வேளானவனுமெல் விட்டான்-என்னின் மிக்கோர் துறைக்கை விதியன்றோ தோழி என்று உருதிபூண்டு, இராணிக்கு ஹிதமான வார்த்தைகளாடி அன்றிறவே வெளியேறித் தேவயம்பதி என்னும் இராமேஸ்வரத்தை யடைந்தார். அங்கு மலைவளர்க்காதலி யம்மையைப் போற்றி நமனெனும் அகந்தை தீர்த்து என் சிருமதியை யுன்ட மதிவதனவள்ளியே உன்னை நினைத்தால் எல்லாபேரும் உண்டாகும். மாதர் விழியிலும், மொழியிலும், நடையிலும், பட்டிலும், பொட்டிலும், மயங்காது உன் திருவடிமட்டிலே மனது செல்ல அருள், இனி உன் தொண்டர் பணி புரிய அருள்வாய் என்று வணங்கி ஆங்கிருக்கையில், தமையன் சிவசிதம்பரம் பிள்ளையும், சிறிய தாயார் மகன் அருளைய பிள்ளையெனும் பேரன்பனும் வந்தனர். அவர்கள் மரபு விளங்க, மனம் புரிக என்று தாயுமானவரை வற்புறுத்தி வேதாரண்யத்திற்கு அழைத்தேக்கினர்.

தமது குருவின் மொழிக்கிசைந்து ஆங்கு, அழகும் நல்லொழுக்கமும் வாய்ந்த மட்டுவார்குழலம்மையை மணந்து, தகுமுறை இல்லற வேள்வி நடத்தினார். கனக சபாபதி யென்ற ஒரு பிள்ளைக்கனியை ஈன்று மனைவி காலகதியடைந்தாள். தன் மகனை தாயுமானவர் அருமையாய் வளர்த்து கல்வி கேள்விகளில் நன்கு பயிற்றி, ஒரு தநாதையின் கடமையை வழுவரச் செய்து, குருவருளை நேக்கியிருந்தார். காலம் கனிந்தது. மீண்டும் மௌனகுரு தோன்றி அன்பனே உள்ளம் பழுத்தது. இனித் துறவுகொள்வைய்யென்று முறைப்படி துறவரமீந்து சிவஞானபோதம் உறைக்கலானார்.

பலவாக மாறிமாறி இயக்கும் ஒருவன் உண்டு, அவன் காலதேசக்கட்டுகளற்ற சாட்சி. எல்லாமாய் அல்லதுமாய், உயிருக்கு உயிராய் உள்ளபடி உள்ளவன் பாட்டும் ஒலியும் பழமும் சுவையும் பாலும் வெண்மையும் போன்று ஆண்டவன்

ஆன்மாக்களுடன் கலந்துள்ளான். அவன் ஒருவன் அவனது அருளான சக்தி ஒருத்தி அதுவாகிய உலகம் சக்திவிலாசமே பரம்பொருள் ஆணும் ஆவான் பெண்ணும் ஆவான். இரண்டு மற்றதும் ஆவான். இவற்றைக் கடந்த ஒர் அருவமும் ஆவான். இறைவன் சக்தியால் மாயையினின்று உலகம் தோன்றி இயங்கி மாறியடங்கித்தோன்றி நின்றியங்கும் இருவினைப் பயனால் உலகுயிர்கள் போக்கு வரவு செய்யும். வல்லான்வகுத்ததே வாய்க்கால் அவன் ஆனைப்படி அனைத்தும் நடக்கும். இவ்வுடல் மாயா யந்திரம் உடல் கருவி கரணங்களை அன்றென நீக்கிக் கண்டவிடத்தில் ஒர்அறிவாக ஆன்மாஉலது. கதிரொளியன்றி கண்ணாடி முகங் காட்டாது. இறைவன்னருள்ளின்றி ஆன்மா இயங்காது. உள்ளத்தில் உள்ள இன்பப் பொருளை, சிவனை, ஐந்தெழுத்தால் உள்ளே வணங்குக எங்கும் நிறைந்த ஜோதி சுகவாரி அவனன்றி அன்னியங்கானாது சிவோகம் பாவனை செய்க.