ஸ்ரீகாமகோடி ப்ரதீபம் உலகத்தின் தாய்தந்தையார் வகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்தப்ரதிபத்தயே ஜகத பிதரௌவந்தே பார்வதீ பரமேச்வரௌ ஜகத என்றால் லோக

ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
உலகத்தின் தாய்தந்தையார்

வகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்தப்ரதிபத்தயே

ஜகத பிதரௌவந்தே பார்வதீ பரமேச்வரௌ

ஜகத என்றால் லோகத்திற்க்கு என்று அர்த்தம். பிதரௌமாதா பிதாக்கள். லோகத்தில் உள்ளவர்கள் எல்லோர்க்கும் மாதாபிதாவாக இருக்கிறவர்கள் பார்வதீ பரமேச்வரர்கள். உலகம் முழுவதும் ஒரே குடும்பம்.

மாதா ச பார்வதீ தேவீ பிதாதேவோ மஹேச்வர

பாந்தவா சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவநத்ரயம்

என்கிறார்கள் நமது ஆசார்யார். அவர்கள் லோகத்தில் இருக்கும் ஸகல ஜனங்களுக்கும் தாயாகவும் தகப்பனாராகவும் இருக்கிறவர்கள் ஸாக்ஷ£த பரதேவதையாகிய பார்வதீ தேவியும் பரமேச்வரனுமே. ஜகத்துக்கெல்லாம் தாய் தகப்பனாராகிய பார்வதீபரமேச்சுவரர்களை நான் நமஸ்காரம் பண்ணுகிறேன். ஜகத பிததௌவந்தே பார்வதீபரமேச்சுவரௌ என்று மஹா கவியாக இருக்கும் காளிதாசர் தாம் இயற்றிய காவியமாக ரகுவம்சத்தில் முதல் மங்கள சுலோகத்தில் சொல்கிறார்.

பார்வதீபரமேச்சுவரர்கள் எப்படி இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் இணைபிரியாமல் இருக்கிறார்கள். ஒரே ஸ்வரூபத்தில் பிரிக்கமுடியாமல் இணைந்து இருக்கிறார்கள். அது எப்படி என்றால் பசு என்று இப்போது நான் ஒரு வார்த்தை சொல்கிறேன். ப + சு என்று இரண்டு எழுத்துக்களைச் சொன்னேன் இந்த இரண்டு எழுத்துக்களை சொன்னவுடனே உங்களுக்கு ஒர் உருவம் தோன்றுகிறது. பசுமாடு நியாபகம் வருகிறது ப + சு என்று எழுதினால் இரண்டு எழுத்துக்கள்தான். அவை சில கோடுகளே. காதாலே கேட்கிற ஒரு சப்தம் என்று சொல்லலாம். இதற்கும் பசுமாட்டுக்கும், இதன் வார்த்தைக்கும் அதன் அர்தத்திற்க்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. இந்த வார்த்தை சொன்னவுடனேயே அந்த வஸ்து நினைவுக்கு வருகிறது இதுவும் அதுவும் இணைபிரியாமல் இருப்பது தெரிகிறது, இதை நாமரூபம் என்று சொல்வார்கள். நாமம் என்பது பெயர். ரூபம் என்பது உருவம், ஆக்ருதி பசு என்பது வாக்கு. அதன் அர்த்தமாகிய உருவம் மாடு. ஒன்றைச் சொன்னால் ஒன்று உடனே நினைவுக்கு வருகிறது. இந்த இரண்டையும் பிரிக்க முடியவில்லை. வாக்கும் அர்த்தமும் எப்படி ஒன்றோடு ஒன்று இணைபிரியாமல் இருக்கின்றனவோ அப்படியே ஸாக்ஷ£த் அம்பாளும் பரமேச்சுவரனும் இணை பிரியாமல் இருக்கிறார்கள். ஒரே ஸ்வரூபத்தில் அர்த்த நாரீசுவரர் கோலத்தில் இரண்டு பேரும் இணைந்து இருக்கிறார்கள். இப்படிப் பார்த்தால் அம்பாள் அப்படிப் பார்த்தால் பரமேசுவரன் வாகர்த்தாவிவ ஸ்ம்ப்ருக்தௌ ஸம்ப்ருத்தௌ என்றால் சேர்ந்து இருப்பது என்று அர்த்தம். வாக்கு அதன் பொருள் ஆகிய இரண்டையும் போல. எப்படி அவை இரண்டும் இமை பிரியாமல் இருக்கின்றனவோ, ஒன்று வந்தால் மற்றொன்று எப்படி வந்து விடுகிறதோ அப்படி லோகத்திற்கு மாதாபிதாவாக-அர்த்த நாரீசுவர ஸ்ரூபமாக இருக்கும் பார்வதீ பரமேசுவரர்களை நான் நமஸ்காரம் பண்ணுகிறேன் எனறு மகாகவி காளிதாஸ் நமஸ்காரம் பண்ணினார். அவர் நமஸ்காரம் பண்ணுகிறேன் என்று சொன்னதாலேயே சம்ஸ்கிருதம் படிக்கிறவர்கள் எல்லோரும் முதன் முதலில் அதைச் சொல்லி நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்பொழுதும் துக்கமே வராமல் ஆனந்தமாக இருக்கும் படியாக ஆத்மாவைப் பண்ணிவிடுவது, எல்லோருடைய ஆத்மாவுக்கும் புஷ்டியான ஆனந்தமாகிற ஆகாரத்தைக் கொடுப்பது யார் என்றால் எல்லோர்க்கும் மாதாபிதாவாக இருக்கிற

அந்த ஸாக்ஷ£த் அந்த பார்வதீபரமேச்சுவரர்கள் தாம். பராசக்தி தன் ஜகத்துக் கெல்லாம் தாயாக இருக்கிறாள். பரமேசுவரர் தந்தையாக இருக்கிறார். அவர்களை சரணம் அடைந்தால் தான் திரும்பியும் நமக்கு ஜன்மம் இல்லாமல் போகும். ஜன்மம் இல்லாமல் போய்விட்டால் எப்போதும் ஆனந்தமாக இருக்கலாம். ஜன்மம் என்று வந்துவிட்டால் அப்போது ஆனந்தத்திற்கு ஒரு குறை உண்டாகிவிடுகிறது. உயிருக்கு ஆத்மாவுக்கு ஆகாரம், அல்லது புஷ்டி எப்போதும் ஆனந்தமாக இருப்பது தான். அந்த ஆனந்த நிலையை அளிக்கக் கூடியவர்கள் அம்மாவும் அப்பாவும்தான் ஈச்வரனை உபாசிப்பவர்களும் உண்டு. அம்பாளை உபாசிப்பவர்களும் உண்டு. இரண்டு பேரையும் சேர்த்து உபாசிப்பவர்களும் உண்டு. அவர்களும் எதர்காகப்போக வேண்டும். வியாதியுடையவன் வியாதியைப்போக்கிக் கொள்ள வைத்தியனிடம் போகிறான். ஏழை கடன் வாங்கவோ யாசகம் கேட்கவோ பணக்காரனைத் தேடிப் போகிறான். இப்படி ஒவ்வொறு கார்யத்திற்க்கும் ஒருத்தரிடம் தேடிப்போக வேண்டியிருக்கிறது. அதில்லையே இது இல்லையே என்று அனேக குறைகள் உண்டு. மனசிலே அவர்கள் அவமானப் படுத்தினார்கள், இவர்கள் மரியாதை செய்யவில்லை என்ற துக்கம், பிறவிப் HE இவற்றையெல்லாம் போக்கிக் கொள்ள பரமேச்வரனிடம் போக வேண்டும். அப்போது மனசுக்கு பூர்ண நிறைவு உண்டாகி விடும்.

எப்போது பார்த்தாலும் மனசுக்குக் கவலை அனேக சிரமங்கள் எல்லாம் எதனால் உண்டாகின்றன. பிறப்புத்தான் இதற்கெல்லாம் காரணம். பணம் இல்லாதவன் பணக்காரனிடம் போவது போல பிறப்பே வேண்டாம் என்றால் பிறப்பே இல்லாதவனிடம் தான் போக வேண்டும். எவனுக்குப் பிறப்பு இல்லையோ அவனிடம் போனால் நமக்கும் அவனுடைய அனுக்ரஹத்தினாலே பிறப்பே இல்லாமல் போகும். கவலை இல்லை. ஆகவே பிறப்பு இறப்பு இல்லாத ஈசுவரனிடத்தில் போக வேண்டும். பார்வதீபரமேசுவரனிடத்தில் போகவேண்டும்.

பிறப்பு இறப்பு என்று இரண்டும் நமக்கு இருப்பது நன்றாகத் தெரிகிறது. பிறப்பு இறப்பு அந்த இரண்டுக்கும் காரணம் என்ன. பிறப்புக்குக் காரணம் கரமம். இறப்புக்குக் காரணம் காலன். பிறப்பு என்பது காமனால் உண்டாகிறது. இறப்பு என்பது காலனால் ஆகிறது. காமனாலே ஆக்கப்பட்டது காலனாலே அழிக்கப்பட்டது. காமன் வந்து விட்டால் மரம் முளைகிறது. காலன் வந்து விட்டால் மரம் பட்டுப்போக வேண்டியதுதான். காலோ ஜகத் பக்ஷக. சூரியன் சந்திரன் முதற்கொண்டு எதுவாக இருந்தாலும் காலம் வந்தால் வீணாக வேண்டியதுதான். காமம் என்பது இல்லாமல் போனால் உற்பத்தி என்பதே கிடையாது. காலம் என்பது இல்லாவிட்டால் அழிவே கிடையாது. ஆகவே நாம் காமம் காலம் இரண்டையும் வென்றாக வேண்டும். அதற்காக போய்ச் சரணமடைகிற ஈச்வரன் எப்படி இருக்கிறான். காமனைக் கண்மால் எரித்தவராம், காலனைக் காலால் உதைத்தவராம். தன் கண்ணாலேயே காமனை எரித்தவன் காமனையே எரித்து விட்டால் உற்பத்திஇல்லை. காலாலே காலனை சம்காரம் பண்ணினார். ஆகையால் பரமேச்வரன் இடத்தில் போனால் நமக்குப் பிறப்பு இல்லை, இறப்பு இல்லை சரி. அவனிடம் போனாலே பிறப்பு இல்லாது அம்பாளை உபாசிப்போரேன். என்றால் அம்பாளும் ஈச்வரனும் வாக்கும் அர்த்தமும் போலத்தானே இருக்கிறார்கள்.

சுவாமி எந்தக் கண்ணாலேயே காமனை எரித்தார். இரண்டு கண்களும் இல்லாத மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண்ணாலேயே எரித்தார். மூன்றாவது கண்தான் இரண்டு பேருக்கும் சொந்தமாயிற்றே. அம்பாளுக்குப் பாதி, ஈச்வரனுக்குப் பாதி. அர்த்த நாரீசுவரராகத்தானே அவர் இருக்கிறார். அந்த கண் இரண்டுபேருக்கும் பொது. அப்புறமா காலனை உதைத்தது அவர் இடக்காலால் தானே. அந்த இடக்கால் அம்பாளுடையது அல்லவா. ஆகையால் காலத்தைக் கடக்க காலன் அனுகாமல்

இருப்பதற்க்கு, மரண துக்கத்தைப் போக்கிக்கொள்ள அம்பாளுடைய கிருபை வேண்டும். திரும்பவும் பிறக்காமல் இருக்க சாக்ஷ£த் ஈச்வரன் அம்பாள் இரண்டு பேரையும் சேர்த்து உபாசனை செய்யவேண்டும். ஆகையால்தான் ஈச்வரனையும் அம்பாளையும் சேர்த்து உபாசனை செய்கிறோம். அவர்கள் இரண்டு பேரும் ஒரே சரீரத்தில் இணைந்து இருப்பதால் நமக்கு பிறப்பு என்ற இரண்டு துக்கமும் இல்லாமல் ஜனன நிவிருத்தியைத் தேடிக்கொள்ள நாம் ஜகத்துக்கெல்லாம் தாய் தகப்பனாராக இருக்கிற பார்வதீ பரமேச்வரராகளை ஸ்மரித்துக்கொண்டிருந்தது ஜகத பிதரௌ வந்தே பார்வதீ பரமேச்வரௌ என்று சரணடைய வேண்டும்.