ருக்வேத ஸமிதாதானம்
ஆசமனம், சுக்லாம்பர + சாந்தயே, ப்ராணாயாமம், மமோபாத்த + ப்ரீத்யர்த்தம் (காலையில்) ப்ராதஸ்ஸமிதாதானம் கரிஷ்யே. (மாலையில்) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.
ஓம் ஓம் ஓம் என்று சொல்லி ஜலத்தால் மூன்று முறை அக்னியைச் சுற்றி தொட்டு வைக்கவும், ஓம் பூர்ப்புவஸ் ஸ்வ: என்று மூன்று முறை அக்னியை ஜலத்தால் சுற்றி பரிஷேசனம் செய்யவும்.
ஸமித்தை எடுத்துக்கொண்டு 'அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸே, தயாத்வம் அக்நே வர்த்தஸ்வ ஸமிதா ப்ரும்ஹணா வயம் ஸ்வாஹா'என்று சொல்லி ஸமித்தை போடவும். 'அக்நயே ஜாதவேதஸே ஸமித்த்யமாநாய இதம் நமம'என்று பிரார்த்தித்து கையலம்பி உள்ளங்கைகளை அக்னியில் காண்பித்து 'தேஜஸா மா ஸம நஜ்மி'என்று மூன்று தடவை சொல்லி கண்களில் ஒற்றிக்கொள்ளவும்.
ஓம் ஓம் ஓம் என்று சொல்லி ஜலத்தால் மூன்று முறை அக்னியை சுற்றித் தொடவும்.
ஓம் பூர்ப்புவஸ் ஸ்வ: என்று மூன்று தடவை தொடவும்.
ஸ்வாஹா என்று ஒரு ஸமித்தை அக்னியிலிட்டு எழுந்து நின்று பிரார்த்திக்கவும்.
மயிமேதாம் மயி ப்ரஜாம் மய்யக்கனிஸ் தேஜோ ததாது,
மயிமேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ரஇந்திரியம் ததாது,
மயிமேதாம் மயி ப்ரஜாம் மயி ஸ¨ர்யோ ப்ராஜோ ததாது,
யத் தே அக்னே தேஜஸ் தேனாஹம் தேஜஸ்வீ பூயாஸம்,
யத் தே அக்னே வர்சஸ் தேனாஹம் வர்சஸ்வீ பூயாஸம்,
யத் தே அக்னே ஹரஸ் தேனாஹம் ஹரஸ்வீ பூயாஸம்,
அக்னயே நம:
மந்த்ரஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹ§தாசன
யத் ஹ¨தம்து மயா தேவ பரிபூர்ணம் ததஸ்துதே
ப்ராய சித்தாநி அசேஷானி தப:கர்மாத்மகானிவை.
யானி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண
பிரார்த்தித்து நமஸ்காரம் செய்யவும், எரிந்த கரியை எடுத்து ஜலத்தில் குழைத்து
மாநஸ் தோகே தநயே மாநஆயுஷி மாநோ கோஷ§
மாநோ அச்வேஷ§ரீரித: வீரான் மாநோ
ருத்ர பாமிதோவதீ: ஹவிஸ்மந்த:ஸதமித்வா ஹவாமஹே
என்று பிரார்த்தித்து
மேதாவீ பூயாஸம் --- நெற்றியில்
தேஜஸ்வீ பூயாஸம் --- வலது தோளில்
வர்ஜஸ்வீ பூயாஸம் --- இடது தோளில்
ஆயுஷ்மான் பூயாஸம் --- தொப்புளில்
அன்னாதோ பூயாஸம் --- சிரஸில்
ஸ்வஸ்தி பூயாஸம் --- பின் சிரஸில்
இட்டுக் கொள்ளவும். கையலம்பிக் பிரார்த்திக்கவும்
ஸ்வஸ்தி ச்ரத்தாம் மேதாம்யச:ப்ரக்ஞாம் வித்யாம் புத்திம் ச்ரியம் பலம்.
ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்ய வாஹந
ச்ரியம் புஷ்டிம் தேஹிமே ஹவ்யவாஹந.
ஆசமனம்.
********************