காயத்ரீ உபாசனை அன்னதான மகிமை அர்த்திபுக்தா வசிஷ்டம் யுத்ததச் நீயாந் மஹாசய: ச்வேதோர்த்தி ரஹிதம் புக்த்வா நிஜமாம்ஸாச நோபவத் (மகாகவி

காயத்ரீ உபாசனை

அன்னதான மகிமை

அர்த்திபுக்தா வசிஷ்டம் யுத்ததச் நீயாந் மஹாசய:

ச்வேதோர்த்தி ரஹிதம் புக்த்வா நிஜமாம்ஸாச நோபவத்

(மகாகவி க்ஷேமேந்திரர்)

தாராள மனதுடன் அதிதிகளுக்கு உணவை அளித்து அவர்கள் புசித்த மிச்சத்தையே உண்ண வேண்டும். ச்வேதன் என்ற அரசன் அதிதிகளுக்கு அளிக்காமல் தானே உணவை உட்கொண்டதால் தன் உடலில் உள்ள மாம்ஸத்தையே பிறகு புசிக்க வேண்டியவனாக ஆனான்.

போஜன காலத்தில் பசி என்று வருகின்றவன் எப்படி இருந்தாலும் அவனுடைய குலம் கோத்ரம் எதையும் விசாரிக்காமல் அவனுக்கு அன்னமளிக்க வேண்டும் என தர்மசாஸ்திரம் கூறுகின்றது. அவ்விதம் செய்யாதுபோனால் அது மிக்க கொடிய பாவம் எனக்கருதப்படுகிறது. இவ்விஷயமாக வால்மீகி ராமாயண உத்தர காண்டத்தில் ச்வேதன் என்ற அரசனுடைய அற்புதமான கதை ஒன்று காணப்படுகிறது. அதையே மஹாகவி இந்த ஸ்லோகத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

ச்வேதன் கதை

ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப்பின் இராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருக்கையில் ஒரு சமயம் அகஸ்திய முனிவருடைய ஆசிரமத்திற்குச் சென்றார். முனிவரும் மிக அன்புடன் ராமரை எதிர் கொண்டழைத்து அர்க்கியம் பாத்யம் முதலியவற்றை அளித்து உபசரித்தார். ' ஏ ராம ! நீயே நாராயணன். உன்னிடமே இவ்வுலகம் முழுவதும் நிலைபெற்றிருக்கிறது. ஸமஸ்த பூதங்களுக்கும் நீதான் பிரபு நீயே புராண புருஷன் ' என்றெல்லாம் போற்றி இன்று முழுவதும் என் ஆசிரமத்திலேயே தங்கிவிட்டு நாளை தான் அயோத்திக்கு செல்ல வேண்டுமென்று வேண்டிக் கொண்டார். இராமரும் அதற்கு இணங்கினார். பிறகு விஸ்வகர்மா என்ற தேவ சிற்பியினால் நிர்மானம் செய்யப்பட்டதும், திவ்ய தேஜஸ்ஸுடன் பிராகாசித்துக் கொண்டிருப்பதுமான ஓர் ஆபரணத்தை கொண்டு வந்து 'ராம! இதைக் பெற்றுக்கொள்ளவேண்டும். இதைத் தாங்கள் அணிந்து கொண்டு நான் பார்க்க ஆசைப்படுகிறேன். சூரியனைப் போல் பிரகாசிக்கும் இந்த விசித்திரமான ஆபரணம் தங்களிடம் தான் இருக்க வேண்டும். இது ஒருவரால் எனக்குக் கொடுக்கப்பட்டது. அதை பிறருக்கு தானம் செய்தால் அதற்கு பயன் மிக அதிகம். ஆதலால் நான் இதைத் தங்களுக்கு முறைப்படி கொடுக்கின்றேன். பெற்றுக்கொள்ள வேண்டும் 'எனக் கூறினார். அதைக் கேட்ட இராமர் 'முனிவரே ! ப்ரதிக்ரஹம் என்பது பிராம்மணர்களுக்கு உரியது. க்ஷத்த்ரியனாகப் பிறந்த நான் எப்படி ப்ரதிக்ரஹம் செய்யலாம்?அதிலும் ஓர் பிராம்மணனால் கொடுக்கப்படும் வஸ்துவை ஏற்றுக்கொள்ளலாமா! இவ்விஷயத்தைப் பற்றி தாங்களே தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்" என உரைத்தார். அதற்கு முனிவர் பதில் கூறியதாவது:

" இராம! முன்னொரு காலத்தில் கிருதயுகத்தில் இப்புவியிலுள்ள ஜனங்கள் ஆட்சிபுரியும் அரசன் அற்றவர்களாக இருந்தனர். தேவர்களுக்கு மட்டும் இந்திரன் அரசனாக இருந்தான். அப்பொழுது பூமியிலுள்ள ப்ரஜைகள், ' தேவர்களுக்குத் தாங்கள் அரசனாக இருப்பது போல் எங்களுக்கும் ஓர் சிறந்த மனிதனை அரசனாக

நியமிக்க வேண்டும். அவனுக்கு நாங்கள் செய்யக்கூடிய பூஜைகளைச் செய்து பாபமற்றவர்களாக இருக்க விரும்புகின்றோம். இனி அரசன் இல்லாமல் நாங்கள் இப்புவியில் வசிக்க இயலாது' என வேண்டிக் கொண்டனர். இந்திரனும் இவ்விஷயத்தை ப்ருஹ்மதேவனிடம் தெரிவித்தான். அவர் ஓர் சிறந்த மனிதனை ஸ்ருஷ்டித்து இந்திரன், யமன், வருணன், குபேரன் என்று நான்கு திக்பாலர்களுடைய அம்சங்களையும் அவனுக்களித்து அவனை ப்ரஜைகளுக்கு அரசனாக நியமித்தார். அந்த அரசன் பெயர் க்ஷ¨பன். அவன் இந்திரனுடைய அம்சத்தால் ப்ரஜைகளுக்கு அவ்வப்போது உசிதமான கட்டளைகளை பிறப்பித்தான். வருணனுடைய அம்சத்தால் ப்ரஜைகளை வளர்த்தான். குபேரனுடைய அம்சத்தால் அவர்களுக்கு பொருளை அளித்து வந்தான். யமனுடைய அம்சத்தால் குற்றம் புரிந்த ப்ரஜைகளை தண்டித்து வந்தான். தற்காலம் உள்ள அரசர்கள் அனைவரும் அவனுடைய சந்ததியில் தோன்றியவர்களாதலால் அவர்களிடம் நான்கு திக்பாலர்களுடைய அம்சங்களும் இருக்கின்றன. அவற்றுள் அவ்வப்போது உசிதமான கட்டளைகளைப் பிறப்பிக்கும் இந்திரனுடைய அம்சத்தால் ப்ரஜைகள் அளிக்கும் கப்பம், வெகுமானம் முதலியவற்றை பெற்றுக் கொண்டு ப்ரஜைகளை பாவங்களிலிருந்து விடுவிக்க அரசன் கடமைப்பட்டிருக்கின்றான். ஆதலால் ஏ இராமா!தங்களிடமுள்ள இந்திரனது

அம்சத்தால் இந்த ஆபரணத்தை தாங்கள் பெற்றுக் கொண்டு என்னை பாவங்களிலிருந்து அவசியம் விடுவிக்க வேண்டும். இது தங்களுடைய கடமை".

முனிவருடைய நியாயமான அந்த வார்த்தையை கேட்டு ஸ்ரீ ராமர் அந்த ஆபரணத்தை பெற்றுக் கொண்டு 'இவ்வளவு அழகான - அற்புதமான நகை தங்களுக்கு யாரிடமிருந்து எவ்வாறு கிடைத்து?என வினவினார். அகஸ்தியர்:இது முன்பு த்ரேதாயுகத்தில் நடந்த ஓர் அற்புதமான வரலாறு சொல்கிறேன் கேளுங்கள், ஒரு சமயம் தவம் செய்ய மிகவும் தகுதியுள்ள ஒரு ஸ்தலத்தை தேர்ந்தெடுப்பதற்காக பல காடுகளுக்கு சென்றேன். 'அப்போது ஓரிடத்தில் ஒரு காட்டை கண்டேன் அது மிக விசாலமாக இருந்தது. ஆனால் அங்கு மனிதனோ, மிருகமோ, பக்ஷியோ எதுவும் காணப்படவில்லை.

அங்குள்ள அழகிய மரங்களும், செடி கொடிகளும் கண்களை கவர்ந்தன. அந்த வனத்தின் நடுவில் ஓர் விசாலமான குளம். அதில் சக்ரவாகம், ஹம்சம் முதலிய பல அழகிய பறவைகள், தாமரை உத்லபலம் முதலிய பல புஷ்பங்கள் எல்லாம் அந்த வனத்தின் சோபை அதிகரித்தன. காட்டில் பறவைகள் சஞ்சரிக்காததும், குளத்தில் மட்டும் பறவைகள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதும் மிக ஆச்சர்யமாக இருந்தது. நிழல் சூழ்ந்த அக்குளக்கரையிலே அன்று முழுவதும் தங்கியிருந்தேன். காலையில் எழுந்திருந்து அக்குளக்கரைக்கு செல்கையில் அங்கு ஓர் மனிதனின் உடல் வாட்டமில்லாமல் வளர்ந்திருந்ததைக் கண்டேன். உயிரற்றதானாலும் உயிருடன் இருப்பதை போலவே மிகுந்த சோபையுடன் அது விளங்கிற்று. மிக ஆச்சர்யத்துடன், அதைப் பற்றி சிந்தனையுடனே அக்குளக்கரையில் ஒரு முகூர்த்த காலம் நின்றிருந்தேன். அப்பொழுது மனோவேகமாக செல்லும் ஒரு அற்புத விமானம் ஆகாயத்திலிருந்து இறங்கி வருவதைக் கண்டேன்.

அது வேறு எங்கும் செல்லாமல் அந்த சவத்திற்கு அருகில் சற்று உயரத்தில் வந்து திடீரென்று நின்று விட்டது. அதில் ஸ்வர்க்க போகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு உத்தம புருஷனையும், அவனைச் சுற்றி கானம் செய்து கொணடும், நர்த்தனம் செய்து கொண்டும், சத்ரம், சாமரம் முதலியவற்றால் உபசாரம் செய்து கொண்டிருக்கும் பல அப்ஸ்ர ஸ்தீரிகளையும் கண்ணுற்றேன். மிக வியப்புடன் அந்த விமானத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதில் வீற்றிருந்த அந்த

திவ்ய புருஷன் அந்த விமானத்திலிருந்து கீழே இறங்கி அந்த சவத்தின் அருகில் சென்று அதை கடித்துத் தின்றான். வேண்டிய வரையில் தின்று விட்டு கடைசியில் அக்குளத்தில் இறங்கி ஆசமனம் செய்து மறுபடியும் அந்த விமானத்தில் ஏறி திரும்பினான் அந்த தேவுபுருஷன். அப்பொழுது அவனிடம் சென்று வினவினேன். "தாங்கள் யார்?தேவலோகவாசி என்று தோன்றுகிறதே. ஆனால் மிகவும் நிந்த்க்கதகுந்த இந்த ஆகாரத்தை ஏன் உட்கொள்ளுகின்றீர்கள் என்பது எனக்குப் புலப்படவில்லை. இது மிக ஆச்சர்யமாக இருக்கிறது. இதன் காரணத்தை நான் அறிய விரும்புகிறேன்.

என் வார்த்தையை கேட்ட அந்த தேவ புருஷன் கைக்கூப்பிய வண்ணம் பேசத் தொடங்கினான். "மஹரிஷே!முன் ஜென்மத்தில் நடந்த என்னுடைய கதையை சொல்கிறேன், கேளுங்கள்!அவரவர்கள் செய்த புண்ணியத்தையோ, பாபத்தையோ அனுபவித்துத் தானே ஆக வேண்டும். மாட்டேன் என்று சொன்னால் விடுமோ!விதர்ப தேசத்தில் சுவேதன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு இரு பிள்ளைகள். நான் ஒருவன், சுரதன் என்று பெயர் கொண்ட என் தம்பி ஒருவன். என் பெயர் சுவேதன். என் தகப்பன் கால கதி அடைந்த பின் நான் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தேன். ஒரு சமயம் 'இனி இவ்வளவு வருஷங்கள் தான் ஜீவித்து இருக்கக்கூடும்'என்பதை அறிந்து பாக்கி விஷயங்களில் தவம் செய்ய விரும்பி என் தம்பியை அரசனாக்கிவிட்டு இந்த வனத்திற்கு வந்தேன். இங்கு பல வருஷங்களில் தீவிரமாக தவம் புரிந்து அதன் பயனாக பிரம்ம லோகத்தை அடைந்தேன். அங்கு சென்ற பின்னும் பசியும், தாகமும் மிக அதிகமாக என்னை துன்புறுத்தின. அதனால் மிகவும் களைப்படைந்த நான் பிரம்ம தேவனிடம் சென்று "பகவன்!இந்த லோகத்தில் பசி, தாகம் முதலிய துன்பங்களே இல்லை என பெரியோர்கள் கூறினார்கள். ஆனால் இங்கு வந்த பின்னும் எனக்கு பசியும் தாகமும் தாங்க முடியவில்லை. இது எந்த பாவ கர்மாவின் பயனோ தெரியவில்லை. நான் உட்கொள்ள கூடிய உணவு எது?தயுசெய்து தெரிவிக்க வேண்டும்"என வினவினேன். அதைக் கேட்ட பிரம்ம தேவன், சுவேதா உன் உடலில் உள்ள ருசியான மாமிசங்களே உன் உணவாகும். காட்டில் c தவம் புரியும் காலத்தில் உன் உடலை நன்றாக வளர்த்து வைத்திருக்கின்றாய். விதைக்காத விதை முளைக்காது. பலவிதமான ஆகாரங்களை உட்கொண்ட போதிலும் உனக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் c புசிக்க போகும் தருணத்தில் ஒரு சன்யாசி உன்னிடம் பிச்சை கேட்டார். உணவில் உள்ள அதிக ஆசையால் c அவருக்கு பிச்சை கொடுக்க மறுத்து விட்டாய். c மிகத் தீவிரமாக தவம் புரிந்த போதிலும் சொற்ப தானம் கூட செய்யவில்லை. தவத்தின் பயனாக இவ்வுலகத்திற்கு வந்தாய், தானம் செய்யாததாலும் சன்னியாசிக்கு பிச்சை அளிக்காத காரணத்தாலும் பசியும், தாகமும் உன்னை வாட்டுகின்றன. உன் உடலை c தடவித் தடவி வளர்த்ததால் அதில் உள்ள மாமிசத்தையே c புசித்து வர வேண்டும். எப்பொழுது மகான் அகத்தியர் உன்னிடம் வருகின்றாரோ, அப்பொழுதுதான் உன்னுடைய பசியும், தாகமும் தீர்ந்து இவ்விடத்திலேயே சுகமாக வாழ்ந்து வருவாய் என்று கூறினார்.

"முனிவரே! அன்று முதல் இன்று வரை என் பாவத்தின் பயனாக இந்த கேவலமான ஆகாரத்தையே பிரதி தினம் உட்கொண்டு வருகிறேன். என் உடலும் அழிந்தபாடில்லை. எனது பசியும், தாகமும் தனியவுமில்லை என் பாக்கியவசத்தால் இப்பொழுது தங்களை சந்திக்கும்படி நேர்ந்தது. தாங்கள் தான் அகஸ்திய முனிவராக இருக்கவேண்டும். மனித சஞ்சாரமில்லாத இக்காட்டில் வேறு ஒருவர் பிரவேசிக்க முடியாது. இக்கொடிய பாவத்திலிருந்து என்னுடைய இந்த ஆபரணத்தை பெற்றுக் கொண்டு என்னை விடுவிக்க வேண்டும். இந்த ஆபரணத்திலிருந்து ஸ்வர்ணம், தனம், வஸ்திரங்கள், பலவித உணவுகள், நகைகள் மற்றும் விரும்பிய பொருள்கள், போகங்கள் எல்லாவற்றையும் பெறலாம் " எனக்கூறி இந்த ஆபரணத்தை என்னிடம் கொடுத்தான். நானும் தயவுபுரிந்து அதைப் பெற்றுக்கொண்டேன். உடனே கீழே கிடந்த அவன் உடல் அழிந்துவிட்டது. சுவேதனும் பசி, தாக மற்றவனாய் மிகுந்த சந்தோஷத்துடன் பிரம்மலோகத்திற்கு சென்றான்.

இதிலிருந்து அதிதிகளுக்கு உணவு அளிக்காமலிருத்தல் மிகக் கொடிய பாவம் எனத் தெரியவருகிறது.