காயத்ரீ உபாசனை துஷ்ட சகவாசம் தூய்மையை கெடுக்கும் ராமனுக்கு பட்டம் என்று மந்தரை வந்து சொன்னவுடன் மனம் மிக மகிழ்ந்த

காயத்ரீ உபாசனை

துஷ்ட சகவாசம் தூய்மையை கெடுக்கும்

ராமனுக்கு பட்டம் என்று மந்தரை வந்து சொன்னவுடன் மனம் மிக மகிழ்ந்த கைகேயி தன் கழுத்திலிருந்த உயர்ந்த முத்தாரத்தை கொடுத்து இத்தகைய நல்ல செய்தி சொன்ன உனக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும் என்றாள். இதைக்கேட்ட மந்தரை கைகேயிடம் இராமன் கௌசலை மகன் தானே. இராமனுக்கு முடிசூட்டினால் அவன் தாய் கௌசலைக்கு அன்றோ பெருமை. நீயும் அவனுக்கு கட்டடுப்பட்டு அல்லவா இருக்க வேண்டும். அரச குலத்தில் பிறந்து, சக்ரவர்த்திக்கு மனைவியான c அடுத்தவளிடம் கையேந்தி நிற்பாயா?நீயும் நானும் அவளுக்கு பணிவிடை செய்யும் தாதிகளாகவல்லவா மாறவேண்டும். இந்த நிலை உனக்கு வரலாமா? எனக் கேட்டாள். இதைக் கேட்டதும் கைகேயி ராமனை புகழ்ந்து எனக்கு ராமன் வேறு, பரதன் வேறு அல்ல. இராமன் மிகவும் நல்லவன். சத்தியசந்தன். என் பேச்சை தட்டாமல் இருப்பவன். தன் தம்பிகளை தலைவனைப் போல் பார்த்துக் கொள்வான். கௌசலையிடம் உள்ள அன்பைக் காட்டிலும் என்னிடம் அதிக அன்பும் பக்தியும் கொண்டவன். இராமனுக்கு பிறகு பரதன் தானே அரசனாகிறான் என்று சொன்னாள்.

மீண்டும் மந்தரை, ராமனுக்கு பிறகு பரதனுக்கு அரசு கிட்டாது. இராமனின் வாரிசுக்குத்தான் அரசு கிட்டுமே தவிர அரியணை ஏறும் பாக்கியம் பரதனுக்கு எப்போதுமே கிட்டாது. நீயே பரதனின் நல்வாழ்க்கைக்கு நாசம் விளைவிக்கிறாய் என்று கூற, தூய கைகேயியின் சிந்தையும் மாறி இராமனை காட்டுக்கு அனுப்ப தசரதனிடம் வரம் வேண்டினாள்.

துஷ்டர்களுடைய சகவாசம் நல்லோர் தூய உள்ளத்தையும் களைத்துவிடும். எனவே தீயவர் சகவாசத்தை விட்டு விட வேண்டும் என்பது புலனாகிறது.