மனஸ்காரம்
ஆகையினால் (த்யாகையர்) “எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு” என்றாற்போல எங்கே எவர் பெரியவர்களாகத் தெரிந்தாலும் அவர்களுக்கெல்லாம் அத்தனை பேருக்கும் – ‘அந்தரிகி’ – ஸாஷ்டாங்கமாக, ஸ்த்ரீகளானால் பஞ்சாங்கமாக நமஸ்காரம் பண்ணுங்கள்.
இப்படிச் சொல்கிறேனே என்பதற்காகக் கூட்டமாக தெரிகிற இடங்களில்கூட விழுந்து நமஸ்காரம் பண்ணணும் என்று பார்க்காதீர்கள்! அது மற்றவர்களுக்கும் ஹிம்ஸை; நீங்களும் மிதிபட்டுப் போவீர்கள்! அதனால் கால, தேச, வர்த்தமானங்களைப் பார்த்துத்தான் எதுவும் செய்யணும் என்பதை இந்த விஷயத்திற்கும் எடுத்துக் கொள்ளுங்கள். கூட்டத்திலே மனஸால் நமஸ்கரித்தால் போதும். உடம்பால் பண்ணாததற்கும் சேர்த்து மனஸால் deep ஆகப் பண்ணினால் போதும். நமஸ்காரத்தை மனஸ்காரமாக்குகிறது! மற்ற இடங்களில் மனஸை ஸரிப்படுத்தவே சரீரத்தை பூமியில் போட்டு நமஸ்காரம் பண்ணுங்கள்.