நிகர விளைவு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆகக்கூடி பலவிதமான ஆசாரச் சீர்திருத்தங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோமேயானால் பழைய ஒழுக்கத்தையும் காரியங்களையும் எடுத்துவிட்டுப் புதியதை வைத்தால், பழசை மீறிய பழக்கத்தில் புதிசையும் மீறிக் கட்டுப்பாடில்லாமல் போகிறார்கள். இவர்கள் காரியம் என்று பண்ணுவதெல்லாம் ஸ்வயலாபம், ‘தான்’ என்கிறதை வளர்த்துக்கொள்வது என்பதற்காகத்தான் ஆகிறது. ஆசாரங்கள் கடுமையாக இருக்கிறதென்று இளக்கி, ஃபாஷன் பண்ணினால் பலனும் இளகி ஓடியே விடுகிறது. சித்த சுத்தி ஏறப்பட மாட்டேன் என்கிறது. “கார்யத்தில் ஒன்றுமில்லை; வேதாந்தா” என்றால் வெறும் சோம்பேறியாகப் போகிறான்; அப்போது மனஸ் சுத்தமாகாமல் போகிறது என்பது மட்டுமின்றி, இருக்கிற சுத்தமும் போய் அழுக்கைச் சேர்த்துக் கொள்கிறது. ஆசாரமில்லாமலிருக்கிற அநாசாரம்; ஆசாரக் கட்டுப்பாடு போனதால் கண்டதைத் தின்பது, குடிப்பது, கலஹம் செய்வது, இன்னும் மஹாபாபங்களைப் பண்ணுவது என்கிற துராசாரம்; உள்ளொன்றும் புறமொன்றுமாக ஹிபாக்ரிஸி செய்யும் மித்யாசாரம் என்பவைதான் மொத்தத்தில் விருத்தியாகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is 'நவீன வேதாந்தி'கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அறிந்தவனும், அறியாதாரும்
Next