திருக்கள்வனூர் (காஞ்சீபுரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திருக்கள்வனூர் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சிபுரத்தில் காமாக்ஷி அம்மன் கோவிலுக்குள், அம்மன், கர்ப்பக்ரஹத்துக்கு வலது பக்கத்தில் இருக்கிறது. (மார்க்கம் 43 காண்க) .

மூலவர் - ஆதிவராஹப் பெருமாள், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் - அஞ்சிலைவல்லி நாச்சியார்.

தீர்த்தம் - நித்யபுஷ்கரிணி.

விமானம் - வாமன விமானம்.

ப்ரத்யக்ஷம் - அச்வத்த நாராயணன்.

விசேஷங்கள் - ஒரு காலத்தில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் தர்க்கம் ஏற்பட, சிவ பெருமான் கோபமடைந்து பார்வதியை சபிக்க, பார்வதி சிவனடி பணிந்து க்ஷமிக்க வேண்ட, சிவன் ஆக்ஞைப்படி ஒருகாலால் நின்று வாமனரை நோக்கி தவம் செய்து காமாக்ஷி என்று பெயர் பெற்று, சிவபெருமானை மணந்ததாக ஐதீஹம்.

ஸ்ரீ மன் நாராயணன் காம கோஷ்டத்தில் பஞ்ச தீர்த்தத்தின் கரையில் லக்ஷ்மி பார்வதியுடன் ஸல்லாபம் செய்வதை ஒ£ ¤ந்து கேட்டபடியால், பார்வதி, பெருமாளுக்கு கள்வன் என்ற பெயர் சூட்டினாள். பார்வதி பிரார்த்தனைக்கிணங்க பகவான் பூதத்தின் மேல் நின்று மறுபடி இருந்து மறுபடி கிடந்த படியால், நின்றான், இருந்தான், கிடந்தான் என்ற ஸந்நிதிகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பு - திருநெடுந்தாண்டகத்தில் "காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா" என்று குறிப்பிட்டுள்ளதைத் தவிர, ஸ்தலத்தைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. தாயாரும் தீர்த்தமும் இப்போது காணப்படவில்லை. ஸ்ரீ காமாக்ஷி அம்மன் திருக்குளத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு ஸந்நிதியில் மூன்று அடுக்குகளில் "நின்றான், இருந்தான், கிடந்தான்" என்று மூன்று திருக்கோலங்கள் உள்ளன. இதற்கும் மங்களாசாஸனத்துக்கும் உள்ள ஸம்பந்தத்தைச் சிலர் ஸந்தேஹிக்கின்றனர்.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 2059 - 1 பாசுரம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருக்காரகம் (காஞ்சீபுரம்)
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருப்பவளவண்ணம் (காஞ்சிபுரம்)
Next