சந்த்ர க்ரஹணம்
03-03-2026
ஜய ஜய ஶங்கர!
ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடம்
ஜகத்குரு ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஶ்ரீமடம் ஸம்ஸ்தானம்
பஞ்சாங்க ஸதஸ் மற்றும் வேத தர்மஶாஸ்த்ர பரிபாலன ஸபா
சந்த்ர க்ரஹணம்
5127 விஶ்வாவஸு ௵ மாசி ௴ 19 ௳ | 2026 மார்ச் 03
க்ரஹணமானது பல அனுஷ்டானங்களுக்கான மிக உயர்ந்த புண்ய காலம். வருகின்ற பௌர்ணமியன்று பாரதத்தில் சந்த்ர க்ரஹணம் தெரியும்.
நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹத்துடன், அனுஷ்டான ஸ்வரூபத்தையும் ஸங்கல்பம் முதலியவற்றையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள கீழ்க்காணும் PDF கோப்புகள் வெளியிடப்படுகின்றன.
பாரதத்தில் சந்த்ர உதயம் ஆவதற்கு முன்பே க்ரஹணம் ஆரம்பிப்பதால் அந்தந்த ஊருக்கான நேரங்களை இந்த கோப்புகளின் மூலம் அறிந்து அனுஷ்டிக்கவும். (மும்பை முதலிய சில இடங்களில் க்ரஹணம் தெரியாது.)
நம் குருவின் வழிகாட்டுதலின்படி நம் ஸநாதன தர்மத்தை சாஸ்த்ரோக்தமான வழியில் நன்கு பின்பற்றி ஸகல ஸௌபாக்யங்களையும் பெறுவோமாக.
https://kamakoti.github.io/prakashanam/VDSP/ChandraGrahanam/

Back to news page