ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா: ஆரணி ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் ருத்ராபிஷேகம்

25-04-2023

ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழா: ஆரணி ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் ருத்ராபிஷேகம்
 
ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி எஸ்.பி.கோவில் தெருவில் ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் உள்ளது. இங்கு நேற்று ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பில் ஸ்ரீ ஆதிசங்கரருக்கு சிறப்பு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர் இன்று காலை 7 மணிக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா அலங்காரம்,மகா தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர், பத்து மணிக்கு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆரணி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடம் நிர்வாகி ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

https://www.maalaimalar.com/news/district/sri-adi-shankar-jayanti-festival-601305
 
 
#kamakoti




Back to news page




Prev.::अमृतसर शंकर धाम मंदिर में जगतगुरु श्री आदि शंकरा जयंती महोत्सव

Next.::Pujya Shankaracharya Swamiji performs Kumbabhishekam at Bugga Shankara Matam